உலகில் முதல்முறையாக ஹாலிவுட் விநியோக அங்கீகாரத்தை பெற்றது *சாட்சிகள் சொர்க்கத்தில்*

உலகில் முதல்முறையாக ஹாலிவுட் விநியோக அங்கீகாரத்தை பெற்றது *சாட்சிகள் சொர்க்கத்தில்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Witness In Heavenஉலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’, இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார், இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம்.

இந்திய திரைப்படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்குகளோ இதுபோன்ற வெளிநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை திரையிட முன்வருவதில்லை.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ படத்தை உலகெங்கும் திரையிட முயற்சிகள் நடந்துவரும் வேளையில், ஆஸ்திரேலியாவில் ‘ஈவென்ட் சினிமா’ எனும் திரையரங்க நிர்வாகத்தினர் எதிர்வரும் 11 ஆம் மாதம் (நவம்பர்) ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடுவது போலவே ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தையும் அவர்களாகவே திரையிட முன்வந்துள்ளனர்.

இதனால் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இனத்தவரும் இப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோவை விநியோகஸ்தராகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதாவது, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்திலும் மற்றைய திரைப்படங்களையும் ‘ஈவென்ட் சினிமா’ மூலமாக திரையிடும் அந்தஸ்து ஈழன் இளங்கோவின் ‘அம்மா படைப்பகம்’ நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

இது புலம்பெயர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே பார்க்கப்படுகிறது.

அண்மையில் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி சென்னையில் பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் கவிஞர் சினேகன், தோழர் தியாகு, தந்தை ஜகர் காஸ்பெர், திரைப்பட இயக்குநர்கள் மீரா கதிரவன், தங்கசாமி, நடிகர் சௌந்தர்ராஜா, தமிழ் ஆர்வலர் கம்பம் குனாஜி, மற்றும் பல பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

அநேகமானவர்கள் கருத்துக்களும், நேர்த்தியான திரைக்கதை , ஆழமான, அழகான கதை, காலத்திற்கு அவசியமான திரைப்படம் என்றும், நடித்தவர்கள் இயல்பாக, இயற்கையாக எதார்த்தமாக நடித்திருந்தார்கள் என்றும், அடுத்த காட்சி என்னவரும் என்பது போய் அடுத்த வசனமும் வரியும் என்ன வரப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்டது என்றும், திரைப்பட வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்ற முன்னோட்டக் காட்சிக்கும் பல முக்கிய பிரமுகர்கள் வந்து திரைப்படத்தை கண்டு களித்து வாழ்த்தினர்.

பாலச்சந்திரன், இசைப்பிரியா என்றதும், ஈழத்து இறுதிப்போரின் போது நடைபெற்ற காட்சிகளை திரையில் காணும் மனபலம் இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில் வந்த எங்களுக்கு இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்றும், இயக்குநர் பாலுமகேந்திராவின் திரைவடிவு சாயலில் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ இருக்கிறது என்றும், இது ஒரு வரலாற்று பதிவு என்றும், நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்துக்கூறினர்.

விரைவில் உலகெங்கும் பெரிய அளவில் வெளியாகவிருக்கிறது ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.

For the First Time Hollywood Distribution company releasing Witness In Heaven

Witness In Heaven poster

1 மில்லியனை கடந்தது ஜோதிகாவின் *காற்றின் மொழி* டீசர்

1 மில்லியனை கடந்தது ஜோதிகாவின் *காற்றின் மொழி* டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothikas Kaatrin Mozhi teaser crossed 1M viewsமிஸ்டர் சந்திரமௌலி படத்தை தொடர்ந்து தனஞ்செயன் தயாரித்துள்ள படம் காற்றின் மொழி.

இப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரித்துள்ளார்.

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். லட்சுமி மஞ்சு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கௌரவ தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.

ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

தற்போது இது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் 36 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
இதனால் படத்தின் மீதான அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது இந்த டீசர்.

இதனால் காற்றின் மொழி படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Jyothikas Kaatrin Mozhi teaser crossed 1M views

*டாணா* படத்தில் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் தரும் யோகிபாபு

*டாணா* படத்தில் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் தரும் யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taana movie will be comedy treat for Yogibabu fansபேய் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.

“இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது.

இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன்.

இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது” என்றார் தயாரிப்பாளர் ‘நோபல் மூவிஸ்’ கலைமாமணி.

நட்சத்திரங்களை பற்றி தயாரிப்பாளர் கூறும்போது, “ஹலோ நான் பேய் பேசுறேன்” போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் வைபவ்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்” என்றார்.

விஷால் சந்திரசேகர் (இசை), சிவா.ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), ஜி.கே. பிரசன்னா (படத்தொகுப்பு), சதீஷ் கிருஷ்ணன் (நடனம்), பசர் என்.கே.ராகுல் (கலை), கூட்டி (சண்டைப்பயிற்சி), கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பு) மற்றும் 24AM (பப்ளிசிட்டி டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

எச்.எஸ்.கான் இணை தயாரிப்பு செய்கிறார். ப்ரொடக்‌ஷன் ஹெட்டாக வி. சுதந்திரமணி பணிபுரிய, நோபல் மூவிஸ் சார்பில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் எம்.சி.கலைமாமணி.

Taana movie will be comedy treat for Yogibabu fans

*பூமராங்* படத்திற்காக மொட்டை தலையுடன் அதர்வா அவதாரம்

*பூமராங்* படத்திற்காக மொட்டை தலையுடன் அதர்வா அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa Tonsured His Head For Boomerangதனக்கு எது வருமோ, எது சாதகமாக இருக்குமோ அதை நடித்து விட்டுப் போகாமல், தனது எல்லையை தாண்டி புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது தான் ஒரு நடிகனின் சாதனை.

இது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம்,ஆனால் அதை செய்து காட்டுபவர்களுக்கு மன உறுதி நிறைய தேவை. அப்படிப்பட்ட மன உறுதியோடு, ‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள்.

அதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது…

“அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா உலகம் அறியும்.

சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். அதனாலேயே அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் அவரை, மொட்டையடிக்க வேண்டும் என்று நான் கேட்பது நியாயமாக இருக்குமா?.

படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றி விட்டார். நானே தயங்கியபோதும், அவர் திடமான முடிவோடு வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதில் ஒரு தோற்றத்தை பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசூஸா ஆகியோர் வடிவமைத்திருக்கிறார்கள். அதர்வா இந்த ப்ரோஸ்தடிக் ஒப்பனைக்காக பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது.

இத்தகைய கடும் முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு நடிகரும், கொஞ்சம் ஓய்வெடுக்கவே விரும்புவர். ஆனால் அதர்வா உடனடியாக படத்தில் முக்கியமான இடத்தில் வரும் காட்சிகளுக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார்.

இந்த காட்சிகளை சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே அவரின் தியாகத்துக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. எடிட்டிங் செய்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார்.

Atharvaa Tonsured His Head For Boomerang

விஜய்சேதுபதி – விஜய் சந்தர் கூட்டணியில் இணையும் இமான்

விஜய்சேதுபதி – விஜய் சந்தர் கூட்டணியில் இணையும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

d imman and vijay chander“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பாக B.பாரதி ரெட்டி தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

வாலு மற்றும் ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

விஜய் சந்தர் இயக்கிய படங்களுக்கு இதுவரை தமன் மட்டுமே இசை அமைத்துள்ளார்.

தற்போது முதன்முறையாக D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய படம் வரும் 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் தொடங்கவுள்ளது.

குருதி ஆட்டத்தை பூஜையோடு ஆரம்பித்த அதர்வா-பிரியா பவானி சங்கர்

குருதி ஆட்டத்தை பூஜையோடு ஆரம்பித்த அதர்வா-பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kuruthi aattam movie pooja8 தோட்டாக்கள் படம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

இவர் அடுத்ததாக இயக்கும் ”குருதி ஆட்டம்” என்னும் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார்.

ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

More Articles
Follows