பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை

பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Srilank govt ban order for LTTE Prabakaran son murder story movieபாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில்.

இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.

இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ. இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது.

அதோடு Channel 4 -ல் சாட்சிகளோடு எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட பல ஆவணங்களும் செய்திகளும் இப்படத்தில் தேவை அறிந்து சேர்க்கப்பட்டுள்ளதன. அதுமட்டுமின்றி, பாலசந்திரனும் இசைப்ரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படம் மிகவும் உணர்ச்சிவசப்படும் வகையில் கதையமைக்கப்பட்டுள்ளது என்பது இப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த பலரது கருத்தும் ஆகும்.

சென்ற ஏப்ரல் 16 ஆம் தேதி, சென்னையில், பிரசாத் திரையரங்கில் இப்படத்தின் மாதிரிகாட்சி திரையிட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பல திரைப்பட பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தமிழ் பற்றாளர்களும் வருவதாக இருந்தது, தமிழகத்தில் நடக்கும் காவேரி விவகாரம் மற்றும் பல போராட்டங்கள் காரணமாகவும், போராட்டங்களுக்கு ஆதரவுதெரிவிக்கும் முகமாகவும் இயக்குநர் இந்த மாதிரிகாட்சி நிகழ்வை ரத்துசெய்து, மறு அறிவிப்பு வரும்வரை தள்ளிவைத்தார்.

ஜூலை மாத இறுதியில் இந்த சிறப்புக் காட்சி நடக்க உள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் இப்படத்தை திரையிடும் முயற்சியில் சென்ற மார்ச் 19, 2018 அன்று தணிக்கை பெறுவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பம் கையளிக்கப்பட்டது, இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளனர். இயக்குநரின் பிரதிநிதிகள் எவ்வளவு முயன்றும், முயற்சி பயனளிக்கவில்லை.

“இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இல்லைதானே பின் எதற்கு தடை?” என்று கேட்டதற்கு, இப்படத்தில் வரும் செய்திகளும், துணைக்கதைகளும், பல இடங்களில் வரும் வசனங்களும், ஒரு பாடலும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் இலங்கை அரசாங்கத்திற்கும் அரச படையினருக்கும் எதிராகவும் உள்ளது. இத்திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தால் பல சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன,” என்றும் கூறப்பட்டது.

இப்படத்திற்கு இலங்கையில் தடை என்ற செய்தி இயக்குநருக்கும் சக கலைஞர்களுக்கும், காத்திருந்த ரசிகர்களுக்கும், உணர்வாளர்களுக்கும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் தந்திருக்கின்றது.

இதுகுறித்து ஈழன் இளங்கோ கூறுகையில், “நாம் எப்படியாவது இந்தப்படத்தை உலகெங்கும் வாழும் மக்களை பார்க்க வைப்போம், தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆகையால், தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களைக்கூட இப்படத்தை பார்க்க வைக்க வேண்டும், அப்போதுதான், ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறியாதவர் கூட அறிந்துகொள்ள முடியும்,” என்றார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு மாதிரிக் காட்சி நிகழ்வில், இத்திரைப்படத்தில் நடித்த, தமிழ் தெரியாத ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகை இந்திரா படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, “இந்த திரைப்படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால் இந்த அளவிற்கு உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கைவில்லை,” என்று கூறி கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை விரைவில் உலகெங்கும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Srilank govt ban order for LTTE Prabakaran son murder story movie

Srilank govt ban order for LTTE Prabakaran son murder story movie

கேன்சர் நிறுவனத்திற்கு சர்கார் டீம் 10 கோடி இழப்பீடு வழங்க கோரி வழக்கு

கேன்சர் நிறுவனத்திற்கு சர்கார் டீம் 10 கோடி இழப்பீடு வழங்க கோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar team to donate Rs 10 Crores to Cancer Institute for encouraged smoking Court caseவிஜய் நடித்து வரும் படம் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைப்பிடித்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறிய விஜய் தற்போது மீறிவிட்டார் என கண்டன குரல்களும் எழுந்தன. மேலும் சுகாதாரத்துறையும் இப்படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் பக்கத்தில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது.

மேலும் படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், புகைப்பிடிக்கும் காட்சியை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தியதற்கு விஜய், முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர் தலா ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளருக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Sarkar team to donate Rs 10 Crores to Cancer Institute for encouraged smoking Court case

தல59 அப்டேட்ஸ்: விஸ்வாசத்திற்கு பிறகு அடுத்த படத்தை முடிவு செய்த அஜித்

தல59 அப்டேட்ஸ்: விஸ்வாசத்திற்கு பிறகு அடுத்த படத்தை முடிவு செய்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala 59 movie will be directed by Vinoth and Music by Sam CSசிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்த 2019 வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு அஜித் தன் 59வது படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் அல்லது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பார் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த 2019ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸை குறி வைத்து இப்படத்தை வெளியிட திட்டமிட்டு தொடங்கவுள்ளார்களாம்.

Thala 59 movie will be directed by Vinoth and Music by Sam CS

மீண்டும் மீண்டும் இணையும் சிம்பு-ஜோதிகா; இது 4வது முறை!

மீண்டும் மீண்டும் இணையும் சிம்பு-ஜோதிகா; இது 4வது முறை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus guest role in Jyothika Kaatrin Mozhi movieசிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். இதனையடுத்து சரவணா என்ற படத்திற்காவும் இந்த ஜோடி இணைந்து நடித்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் சிம்பு.

இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த படப்பிடிப்பின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.

இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

Simbus guest role in Jyothika Kaatrin Mozhi movie

திறமைக்கு மதிப்பில்லை; முகத்துக்குத்தான் மதிப்பு.. கிராந்தி பிரசாத் குமுறல்

திறமைக்கு மதிப்பில்லை; முகத்துக்குத்தான் மதிப்பு.. கிராந்தி பிரசாத் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Talent doesnot value here Only Face value says Director Kranthi Prasathமுற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’.

இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

இப்படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு பாடல் வரிகளுக்கு ஏற்ப மணல் ஓவியம் வரையப்பட்டது.

நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு கருத்தாக சொல்லப்பட்ட விதம் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை இல்லாத புதிய விழாவாக இது அமைந்தது.

விழாவில் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது…

“இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை. பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள்.

யார் நடித்தது? என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

கடைசியில் ஜங்லீ மியூசிக் வாங்கி உதவியுள்ளார்கள். நான் கேட்கிறேன் புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டீர்கள் ?

இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே ?” என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த்,ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத் , ராகுல் சி.கல்யாண், கெளதமி, ஷிவானி,அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன். எடிட்டர் கிராந்தி குமார்,தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Talent doesnot value here Only Face value says Director Kranthi Prasath

santhosathil kalavaram audio launch

பிரச்சினை இல்லாத வெற்றியேது; *சந்தோஷத்தில் கலவரம்* இசை விழாவில் பாக்யராஜ் பேச்சு

பிரச்சினை இல்லாத வெற்றியேது; *சந்தோஷத்தில் கலவரம்* இசை விழாவில் பாக்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

There will not be success with out pain says Bhagyaraj Santhosathil Kalavaram audio launchமுற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

அவர் விழாவில் பேசும் போது

“இங்கே உள்ள படக் குழுவைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு தமிழில் பேச முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. இங்கே கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார்.
எப்படி பேசுகிறார் என ஆச்சரியமாக இருந்தது.

என்னைத் தமிழில் இலக்கணப்படி பேசச் சொன்னால் பேச வராது. கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார்,அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார்.

இயக்குநர் கிராந்தி பிரசாத் இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார் – பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும்.

நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் “பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்” என்று.

“பதினாறு வயதினிலே’ படத்தின் நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம்,உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம், முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போவதாகத் திட்டம்.

ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது படப்பிடிப்பு ரத்து என்றார்கள். போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது, தன் முதல்பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும் ?

அதே மாதிரி என் முதல் படம் நான் முதலில் இயக்கிய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது.

எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும், பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும். வெயிலில் சுற்றினால் தான் நிழலின் அருமை தெரியும். கிராமத்தில் சொல்வார்கள் விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு? வெறட்டி எதுக்கு ? என்பார்கள்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பார்த்தேன். படம் இந்த வகை என்று முடிவு செய்ய முடியவில்லை. அதனால் படம் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. ” என்றார்.

There will not be success with out pain says Bhagyaraj Santhosathil Kalavaram audio launch

More Articles
Follows