‘மூன்றாம் பிறை’ 40ம் ஆண்டு விழாவில் பங்கேற்க உங்களுக்கு சூப்பர் சான்ஸ்

‘மூன்றாம் பிறை’ 40ம் ஆண்டு விழாவில் பங்கேற்க உங்களுக்கு சூப்பர் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்றாம் பிறை 40ஆம் ஆண்டு கொண்டாட்டம் விழா சிறப்பு மலரில் வாசகர்களும் பங்கேற்க வாய்ப்பு:

பாலுமகேந்திரா நூலகம் அறிவிப்பு

03-02-2022 – வணக்கம்.

சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில் உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் 1982 ல் வெளியான மூன்றாம்பிறை தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது.

ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்,பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம் வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ..

இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறது .

இந்த மலரில் படத்தில் இடம்பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம்.

அதன் பொருட்டு மூன்றாம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பவேண்டும்.

இக் கட்டுரையோடு படம் பார்த்த திரையரங்கம், .. ஊர் மற்றும் தங்களது தற்போதைய அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன ..

தேர்வு செய்யப்படும் பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த கட்டுரைகளுக்கு தலா ஐயாயிரம் ரூபாய். பரிசளிக்கப்படும்.

அது மட்டுமல்லமால் படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு.

ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்
உங்கள் கட்டுரையை கீழே கொடுக்கப் பட்டுள்ள பாலு மகேந்திரா நூலக முகவரிக்கு தபால் மூலமகவோ அல்லது ஈ மெயில் முகவரி வழி இணையம் வழியிலோ அனுப்பலாம்.

புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருநதால் பிரசுரத்துக்கு ஏற்கப்பட மாட்டாது . இறுதி தேதி 12–02—2022.

பாலு மகேந்திரா நூலகம், மலாட்சுமி அடுக்ககம் , 4வது தெரு அன்பு நகர்
வளசரவாக்கம் சென்னை

Email: [email protected]

அலைபேசி: 9884060274

Kamal Haasan’s Moondram Pirai completes 40 years

ஜெய் இசையமைத்து நடித்த ‘சிவ சிவா’ படத்தலைப்பை மாற்றினார் சுசீந்திரன்

ஜெய் இசையமைத்து நடித்த ‘சிவ சிவா’ படத்தலைப்பை மாற்றினார் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்துக்கு ‘சிவ சிவா’ என டைட்டில் வைத்திருந்தனர்.

மீனாட்சி என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெய்யின் 30வது திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு நடிகர் ஜெய்யே இசையமைத்துள்ளார்.

ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை காசி விஸ்வநாதன் எடிட் செய்துள்ளார்.

லென்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை ‘வீரபாண்டியபுரம்’ என மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.

Jai Next Movie Titled As Veerapandiyapuram Directed By Suseenthiran

பேண்டஸி பிக்ஃசன் கதையில் சூப்பர் ஹீரோவானார் கிரிக்கெட் தல தோனி

பேண்டஸி பிக்ஃசன் கதையில் சூப்பர் ஹீரோவானார் கிரிக்கெட் தல தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிராபிக் நாவலான அதர்வா – தி ஆரிஜின் என்ற நாவலில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நடிக்கிறார்

இதில் சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார்.

இந்த நாவல், தோனியின் முதல் பேண்டஸி பிக்சன் திரைப்படமாகும்.

கதையை ரமேஷ் தமிழ் மணி எழுதியுள்ளார். இதற்காக, 150 க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது படக்குழுவினர் தோனியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த தோனி கூறியதாவது:…

“அதர்வா – தி ஆரிஜின் ஒரு கலைத் தன்மை கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.

எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் கவரப்பட்டேன்.

நவீன காலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே நடிக்க சம்மதித்தேன்.”

இவ்வாறு தோனி கூறினார்.

MS Dhoni in a new avatar for fantasy graphic series

‘மம்மி & தேவகி’ படங்களை தொடர்ந்து லோகித் இயக்கத்தில் ‘மாஃபியா’

‘மம்மி & தேவகி’ படங்களை தொடர்ந்து லோகித் இயக்கத்தில் ‘மாஃபியா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருபவர் குமார்.

இவர் முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெயர் ‘மாஃபியா’.

இந்தப் படத்தை எச். லோகித் இயக்குகிறார்.

இதில் நாயகனாக பிரஜ்வால் தேவ்ராஜ் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர்.

படம் குறித்து இயக்குநர் லோகித் கூறியதாவது …

: ‘‘சினிமாவுக்கு வந்த பிறகு நான் இயக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘மம்மி’ மற்றும் பிரியங்கா உபேந்திரா நடித்த ‘தேவகி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற அந்தப் படங்கள் பெரிய வெற்றியடைந்ததோடு தமிழிலும் டப் செய்யப்பட்டது.

‘மம்மி’ படத்தின் திரையரங்கு உரிமையை தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் வாங்கியிருந்தார்.

என்னுடைய மூன்றாவது படத்தை நேரடி தமிழ் படமாக இயக்குவதில் மிகுந்த சந்தோஷம்.

இதில் நாயகனாக நடிக்கும் பிரஜ்வால் தேவ்ராஜ் கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர். இந்தப் படத்தை தயாரிக்கும் குமார் கர்நாடகவில் முன்னணி விநியோகஸ்தர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருகிறார். அவருடன் இதில் இணைவதில் மகிழ்ச்சி.

கதையை குறித்து சொல்வதாக இருந்தால் இது மாஃபியா பற்றிய கதைகளில் சொல்லப்படாதவைகளாக இருக்கும். அத்துடன் மாஃபியா கதைகளுக்குரிய விறுவிறுப்புக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காது.

இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது’‘ என்றார்.

நடிகர், நடிகைகள்:

பிரஜ்வால் தேவராஜ், தேவராஜ், அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த்.

தொழில் நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு நிறுவனம் : பெங்களூரு குமார் பிலிம்ஸ்.

தயாரிப்பு : பி. குமார்,
எச்.லோகித்.

இயக்கம் /கூடுதல் திரைக்கதை: எச். லோகித்.

இசை : ஜே. அனூப் செலின்

ஒளிப்பதிவு : அனிஷ் தருண் குமார்

வசனம் : மஸ்தி

எடிட்டர் : சி. ரவிச்சந்திரன்

சண்டை : டிபரண்ட் டேனி, விநோத், அன்பறிவ், ரவி வர்மா

நடனம் : இம்ரான் சர்தாரியா, ராஜூ சுந்தரம், அதில் சாகித், பிருந்தா, கலை.

சவுண்ட் மிக்ஸ்: டி. உதயகுமார்

சவுண்ட் டிசைன் : பிரதாப் வேவ் ஒர்க்ஸ்

ஸ்டில்ஸ் : அபிஷேக் பிரான்சிஸ்.

மக்கள் தொடர்பு : பிரியா.

Watch out the Stunning ?? First Glimpse of #Mafia

Mummy and Devaki fame director Lohith’s next film is titled Mafia

சூர்யாவுடன் மோதலை தவிர்த்து ஒருநாள் பின் வாங்கினார் பிரபாஸ்

சூர்யாவுடன் மோதலை தவிர்த்து ஒருநாள் பின் வாங்கினார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

அடுத்த மார்ச் மாதம் 10ஆம் தேதி இந்த படத்தை வெளியிடவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ மார்ச் 11 அன்று வெளியாகிறது.

அதன் விவரம் வருமாறு…

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ மார்ச் 11 அன்று வெளியாகிறது.

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாகவுள்ளது.

Suriya and Prabhas movie release date announced

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணைந்த ‘வட சென்னை’ கூட்டணி

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணைந்த ‘வட சென்னை’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் அமீர் & இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள்.

இதில் அமீர் தற்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் இப்போது படங்கள் இயக்குவது இல்லை.

வெற்றிமாறன் படங்களை இயக்குவதுடன் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் தற்போது இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளதாவது…

“எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” என வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

விரைவில் ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது.

Vetrimaaran and Ameer joins for a new film

More Articles
Follows