நடிகர்கள் சினிமாவை காப்பாற்ற வர வேண்டும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

நடிகர்கள் சினிமாவை காப்பாற்ற வர வேண்டும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில்

இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது,

“எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறியபடம் பெரியபடம் என்றில்லை. எல்லோரும் ஒரேப்போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது. இத்தனை பேர் இணைந்து எவனும் புத்தனில்லை படத்தை தயாரித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் விஜயசேகரனுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் இசை அமைப்பாளர் மரியா மனோகர், நடிகர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் இருக்கிறார்கள். இந்தவிழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதே இப்படத்தின் வெற்றிக்கான சாட்சியாக இருக்கிறது” என்றார்

இசை அமைப்பாளர் மரியா மனோகர் பேசியதாவது,

“இந்த டைட்டிலே எல்லாரையிம் ஈர்க்கக் கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தது. என்னுடைய முதல்படம் ஜே.கே ரித்திஷ் சார் நடிச்ச நாயகன் படம் தான். பணம் என்பது எனக்கு இரண்டாம் பட்சம் தான். இசை எனக்குப் பேஷன். நல்லவனாக இருப்பதால் நிறைய படங்களில் நிராகரிக்கப் பட்டிருக்கேன்.” என்றார்

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

“என்னை அழைக்கிற விழாக்களுக்கு நான் தவறாமல் செல்வேன். அதுவும் சிறியபட விழா என்றால் மறுக்காமல் செல்வேன். இதுவரை நான் மூணேகால் கோடி இழந்திருக்கேன். ஆனால் இன்னும் இந்த சினிமா மீது ஆர்வமாக இருக்கிறேன். தயாரிப்பாளரை காப்பாற்றும் இயக்குநர்கள் என்றைக்கும் நல்லாருப்பார்கள். எவனாலும் புத்தனாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் போல ஒருவன் வர முடியாது. புத்தனாக இருக்க வேண்டாம். மனிதனாக இருந்தால் போதும். இங்கு அரசியல் துரோகிகள் தான் 90% பேர் இருக்கிறார்கள். சினிமாவிலும் இருக்கிறார்கள். இந்த இயக்குநர் விஜயசேகரன் நிச்சயம் வெற்றிபெறுவார். அவர் இனி அடுத்து படம் இயக்குவதோடு தயாரிக்கவும் செய்ய வேண்டும். பெரிய நடிகர்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு ஏரியாவை வாங்கிக்கொள்ளட்டுமே..வியாபாரம் ஆகாத ஹீரோக்கள் கூட டப்பிங் முன்னாடி பணம் கொடு என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்றார்

நடிகர் ஆரி பேசியதாவது,

“இந்தவிழாவில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விஜய்சேகரன் சாருக்காகத் தான் இந்த விழாவுக்கு வந்தேன். பாடல்கள் ட்ரைலர் இரண்டுமே நல்லா இருந்தது. இயக்குநர் ஒரு நல்லபடத்தை எடுத்திருக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இந்தப்படம் துவங்கப்பட்டது. சினிமா எடுப்பவர்களுக்கு காலம்பூராவும் பிரசவ வலி தான். இயக்குநர் ஒவ்வொரு விசயங்களுக்கும் மெனக்கெடுவார். இப்படத்தின் கதை சைக்காலஜிக்கலாக நகரும். மேலும் சமூகப்பிரச்சனையைப் பேசும் படம் இது. சினிமாவில் யாருமே புத்தனாக இருக்கோமோ என்றால் நிச்சயமாக இல்லை. சிறிய படங்கள் வெளிவர சிரமப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும்” என்றார்

வேல.ராமமூர்த்தி பேசியதாவது,

“இந்த விழாவின் நாயகன் மரியா மனோகர் தான். சினேகனின் வரிகளை கேட்டால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நாங்கள் எழுத வந்தகாலம் நினைவுக்கு வருகிறது. இப்படத்தின் பட்டாம் பூச்சி பாடல் என்னுடைய இளம் வயதை நினைவூட்டுகிறது. இப்படத்தின் இயக்குநர் டைட்டிலையே சிறப்பாக வைத்திருக்கிறார். படத்தையும் அருமையாக கொடுத்திருக்கிறார். இயக்குநர் விஜயசேகரன் என்னோடு அண்ணன் தம்பி போல பழகி வருகிறார். இந்த இயக்குநருக்கு ஒரு பேராசை. நினைத்ததை எல்லாத்தையும் நடத்த வேண்டும் என்று மெனக்கெடுவார். இந்தப்படம் பட்ஜெட்டில் அடங்கிய படமா இது? எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் பாடல்காட்சிகள் எல்லாம் மிக சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் தான் தயாரிப்பாளரும்” என்றார்

ஆர்.வி உதயகுமார் பேசியதாவது,

“முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது. எவனும் புத்தனில்லை சந்தர்ப்பம் கிடைக்காத வரை. வாய்ப்பு கிடைக்காத வரை நாம் அனைவரும் புத்தனாக இருக்கலாம். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது. இந்த இயக்குநர் பங்ஷன் நடத்துறதிலேயே கில்லாடியா இருக்கிறார். அதனால் படத்தையும் நல்லா எடுத்துருப்பார் என்று நம்புகிறேன். இப்படம் பிரமாதமா வந்திருக்கு. சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார். இப்படத்தில் சினேகன் பிறந்தபலனை அடைந்து விட்டார்..அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்தப்பங்ஷன் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல் படமும் வெற்றிபெறும்” என்றார்

இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது,

“முதல்ல இந்த மேடை நிறைந்திருப்பதற்கு காரணம் இயக்குநர் விஜயசேகரன் சேமித்து வைத்திருக்கும் நட்பு தான். என் 29 வருட அனுபவத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்ததில்லை என்று சொல்வேன். விஜயசேகரன் அவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமத்திற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இந்தப்படத்திற்கு துணை நின்ற எல்லா டெக்னிஷியன்களுக்கும் நன்றி. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும் போது படத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது. திரைப்பட சங்கங்களில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசினார்கள். எனக்குப் பேசிப்பேசி அலுத்துவிட்டது. நாங்கள் படம் எடுத்த காலங்களில் தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தார்கள். உழைக்கிற எல்லாருக்கும் சரியான கூலி கொடுத்தால் பிரச்சனை இல்லை. இந்தத் திரைப்படத்துறையை யாராலும் அழிக்க முடியாது. அதேநேரம் இந்தத் திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. மக்களால் அங்கீகாரம் பெறப்பட்ட படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. படங்களுக்கு பெரிய எதிரி இண்டெர்நெட் தான். அது அரசாங்கம் கையில் தான் இருக்கிறது. எவனும் புத்தனில்லை என்ற தலைப்பு மிகவும் சிறந்த தலைப்பு. சினேகன் பாடலாசிரியர் அல்ல..பாவை ஆசிரியர்” என்றார்

சினேகன் பேசியதாவது,

இந்தப்படத்தின் கதாநாயகன் சொன்னார்..இந்தப்படத்திற்காக நாங்கள் ரத்தம் சிந்தி இருக்கிறோம்” என்றார். உண்மை தான் அது. இந்தப்படத்திற்காக அனைவருமே இழந்திருக்கிறார்கள். உறவுகளால் பின்னப்பட்டு இந்தப்படத்தை ஆரம்பித்தார்கள். மன்னிக்க முடியாத குற்றத்தை எவராலும் செய்ய முடியாது. ஒரு படம் எடுக்குறதுக்குள்ள இருக்கும் அரசியலில் இருந்து வெளிவருவது மிகப்பெரிய விசயம். நல்ல கலைஞர்களுக்கு இடையில் நாகப்பாம்புகள் இருப்பதை கண்டடைய முடியபில்லை’ என்றார்

இயக்குநர் விஜயசேகரன் பேசியதாவது,

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், ஆர்.கே செல்வமணி அண்ணன்கள் தான். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. கவிஞர் சினேகன் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் எல்லாம் அவர்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை இந்த நிகழ்வுக்கு வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. வாழ்றதே ஒரு கஷ்டம் தான். நாம் எதை அடையணும்னு நினைக்கிறமோ அதுக்கான விலையைக் கொடுத்து தான் ஆகணும். படத்தை அனைவரும் திரையில் வந்து பாருங்கள்” என்றார்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 18வது படம். சர்வானந்த் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்புடன் ஆரம்பம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 18வது படம். சர்வானந்த் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்புடன் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தைத் தயாரித்துவருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘துருவங்கள் பதினாறு’ இசைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், அதே படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் மூவரும் இப்படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார் என்.சதீஷ்குமார். நிர்வாகத் தயாரிப்பு – அரவிந்தராஜ் பாஸ்கரன், தயாரிப்பு – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு.

வாழ்கையில் பிரிக்கமுடியாத விஷயங்களான நட்பு, காதல், தாய்பாசம், இவற்றை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமாக அமைக்கப்படுள்ளது இதன் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை 2020 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா !

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇது குறித்து பேசுவதற்கும் , விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 3000 இளம் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார் .

யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான செல்வி .த்ரிஷா கிருஷ்ணன் , குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர 3000 இளைஞர்கள் இதுகுறித்து பேசவும் , செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல் குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசுகையில் , “2014 முதல் 2016 வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எடுத்துரைத்தார் .தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 இல் இது 15000 வழக்குகள் , 2016 இல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது .” குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் , நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்ற என அவர் தெரிவித்தார் . பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் ” இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது .

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள் தொகையில் 40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் .குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் பல ஆண்டு காலங்களாக இருந்து வரும் அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

யுனிசெப் நிறுவனத்தின் தகவல்தொடர்பு வல்லுநர் சுகட்டா ராய் , திரிஷாவின் கருத்துகளை எதிரொலிப்பதாகவே பேசினார் .
வவளரும் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் குரல் அவர்களின் வாழ்வை பாதிக்கும் விஷயங்களில் உரக்கக் கேட்க வில்லை என்றார் .அவர்களுக்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க ஊக்கப் படுத்தப்படவில்லை .அது பெயரளவிற்க்கானாலும் சரி ,முக்கியத்துவமானதாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒலிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்கேற்பதும் , பேசுவதும் ஒரு சமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ச ரயான தருணம் இதுவாகும் என கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் இந்த செயலானது ஒரு தனித்துவமான மற்றும் யுனிசெப் மற்றும் ஐக்கிய நாட்டு நிறுவனங்கள் அரசாங்கம் ,அரசு சாரா நிறுவனங்கள் இளைஞர்கள் மற்றும் சாதனையாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும் .இவர்களது குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான் .அது இந்த உலகில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவது”

இந்த நிகழ்ச்சியினை யூனிசெப் உடன் இணைந்து தோழமை நிறுவனம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது

திகிலும் காமெடியும் கலந்த படம் “ மல்லி “

திகிலும் காமெடியும் கலந்த படம் “ மல்லி “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “

ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – PKH தாஸ்

இசை – பஷீர்

பாடல்கள் – சிதம்பரநாதன், பாண்டிதுரை

எடிட்டிங் – B.S.வாசு

நடனம் – நாகேந்திர பிரசாந்த், சுரேஷ்

ஸ்டன்ட் – ஸ்டன்ட் சிவு

தயாரிப்பு – ரேணுகா ஜெகதீஷ்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – வெங்கி நிலா.

படம் பற்றி இயக்குனர் …

பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? – எப்படி? – அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும். முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது என்றார் இயக்குனர் வெங்கி நிலா.

’அடுத்த சாட்டை’யை கழட்டிவிட்ட லிப்ரா ரவீந்திரன்

’அடுத்த சாட்டை’யை கழட்டிவிட்ட லிப்ரா ரவீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Productions and Samuthirakani clash in Adutha Sattai release அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி தயாரித்து நடித்துள்ள படம் அடுத்த சாட்டை.

முதல் பாகத்தை போலேவே இப்படமும் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் பள்ளியில் படித்த மாணவர்கள் இதில் கல்லூரியில் படிப்பதாக உள்ளது.

கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவும், பேராசிரியராக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அதுல்யா ரவி கல்லூரி மாணவியாக இணைந்துள்ளார்.

சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பிரபு திலக்-சமுத்திரக்கனி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவீந்திரன் வாங்கியிருந்தார்.

தற்போது தனக்கும் சமுத்திரக்கனிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபட்டால் ரவீந்திரன் விலகியிருப்பதாக அறிவித்துள்ளார்.

Libra Productions and Samuthirakani clash in Adutha Sattai release

விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் & விஷால் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதனையடுத்து விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே கூறி வந்தது.

ஆனால், திடீரென தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷாவைக் காதலிப்பதாக அறிவித்து அவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயத்தார்த்தமும் செய்துக் கொண்டார் விஷால்.

இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தி உள்ளதாக தகவல்கள வந்த வண்ணம் உள்ளன.

மேலும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை அனீஷாவும் நீக்கியுள்ளதால் இது உறுதி என்கிறார்கள்.

ஆனால் என்ன காரணம்? என்பது இதுவரை தெரியவில்லை.

தன் திருமணத்தை பற்றி கேட்கும்போது எல்லாம் நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் என் திருமணம் நடக்கும் என பல ஆண்டுகளாக கூறி வந்தார்.

ஆனால் தற்போது வரை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இவையில்லாமல் அனிஷாவின் பெற்றோர் நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணத்தை நடக்க சம்மதம் அளிக்கவில்லை எனவும் ஒரு தகவல் வருகிறது.

நிஜமாகவே திருமணம் நின்றதா? என்பது குறித்து இரு தரப்பும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வரலட்சுமி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement

More Articles
Follows