காதலர்களுக்கு பிடிக்கும் மலை… பிரான்மலை விமர்சனம்

காதலர்களுக்கு பிடிக்கும் மலை… பிரான்மலை விமர்சனம்

நடிகர்கள்: வர்மா (ஆதவா பாண்டியன்), நேகா, வேல ராம்மூர்த்தி, ப்ளாக் பாண்டி, கஞ்சா கருப்பு மற்றும் பலர்
இயக்குனர் – அகரம் கமுரா
ஒளிப்பதிவு – எஸ். மூர்த்தி
இசை – பாரதி விஸ்கர்
எடிட்டர் – சுரேஷ் அர்ஸ்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
பாடகர்கள் – உன்னி மேனன், ஹரிச்சரண், வேல்முருகன் சின்ன பெண், பிரியதர்சினி மற்றும் சிலர்
தயாரிப்பாளர் – ஆர்பி பாண்டியன் (வளரி கலைக்கூடம்)

கதைக்களம்…

பிரான்மலை என்ற அழகிய கிராமம். ஹீரோ வர்மா அங்கு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு அம்மா இல்லை. எனவே தந்தை வேல ராமமூர்த்தி கண்டிப்பான வளர்ப்பில் வளர்கிறார்.

வர்மா அடிக்கடி சில பிரச்சினைகள் செய்வதால் இவரை வெளியூருக்கு வேலைக்கு அனுப்புகிறார் தந்தை.

அங்கு தன் நண்பன் ப்ளாக் பாண்டியுடன் இணைந்து வேலை தேடுகிறார் நாயகன்.

அந்த சூழ்நிலையில் கிறிஸ்துவ பெண்மணி நாயகி நேகாவை சந்திக்கிறார். அவரோ ஆதரவற்ற ஆசிரமத்தில் வளர்ந்தவர்.

ஒரு கட்டத்தில் சர்ச்சில் வைத்து அவளை திருமணமும் செய்துவிடுகிறார்.

ஆனால் வர்மாவின் தந்தையோ தன் உறவுக்கார பெண்ணை பார்த்து வைத்திருந்தார். இதனால் கடுப்பான வேல ராம மூர்த்தி என்ன செய்தார்? மருமகளை ஏற்றுக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Piranmalai movie stills

கேரக்டர்கள்…

நாயகன் வர்மாவுக்கு இதுதான் முதல் படம். இருந்த போதிலும் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.

ரொமான்சில் இன்னும் உழைப்பு தேவை. படத்தின் இறுதி காட்சியில் காதலர்களை நிச்சயம் கவருவார்.

அழகு, திறமை கொண்ட நாயகியாக நேகா. நடிப்பில் பாஸ் மார்க் கொடுக்கலாம்.

கண்டிப்பான தந்தையாக வேல ராமமூர்த்தி. இவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார்.

கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. நமக்கு அறிமுகமான பெரிய நட்சத்திரங்கள் இருந்தபோதிலும் அவர்களை விட புதுமுகங்கள் அசத்துகின்றனர்.

நாயகனின் உறவுக்காரர்கள் அனைவரும் கச்சிதம். கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பாரதியின் இசையில் பாடல்கள் ரசிக்குபடி உள்ளது. வைரமுத்துவின் வரிகள் படத்திற்கும் பாடலுக்கும் சிறப்பு சேர்கின்றன.

எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

இயக்குனர் அகரம் கமுரா அவர்கள் காதல் திரைப்படத்தை காதல் படம் போல கொண்டு சென்று க்ளைமாக்ஸில் மாற்றியிருப்பது சிறப்பு. படத்தின் வேகத்தை அதிகரித்திருக்கலாம்

மொத்தத்தில் `பிரான்மலை’ … காதலர்களுக்கு பிடிக்கும் மலை

Piranmalai movie review

Comments are closed.