கெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)

கெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)

கதைக்களம்…

எத்தனையோ கபடி விளையாட்டு படங்களை பார்த்திருப்போம். இதில் கபாடி போட்டியை பெண்களை மையப்படுத்தி எடுத்துள்ளார் சுசீந்திரன். ஆனால் அந்த பெண்களுக்கு பயிற்சியாளர்கள் ஆண்கள் தான்.

வழக்கமான விளையாட்டு போட்டி.. அதில் நடக்கும் அரசியல் விளையாட்டு இதுதான் படத்தின் கதைக்களம்.
கென்னடி கிளப்பை நடத்தும் பாரதிராஜா பெண்கள் அணிக்கு பயிற்சி கொடுக்கிறார். இவருக்கு உதவியாக ரெயில்வேயில் வேலை பார்க்கும் சசிகுமாரும் வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பயிற்சி கொடுக்கின்றனர்.

ஒரு நல்ல வீராங்கனை இந்திய அணிக்கு தேர்வாகும்போது ரூ. 30 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்கிறார் ஆபிசர்.
இதனால் அந்த பெண் தற்கொலை செய்கிறார். அதன்பின்னர் அந்த அணி என்னானது.? பாரதிராஜா மற்றும் சசிகுமார் என்ன செய்தார்கள்? என்பதை படத்தின் கதை.

கலைஞர்கள் பணி..?

பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் மெச்சுரியாட்டியான நடிப்பை கொடுத்துள்ளனர். தலைமுடியை ஒட்ட வெட்டி சசிகுமார் ஸ்மார் குமாராக வருகிறார்.

தன் பண்பட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் பாரதிராஜா.

சசிகுமாருக்கு நாயகி இருந்தாலும் முருகா முருகா என கூப்பிடுவதோடு அவரது வேலை முடிகிறது. அடிக்கடி க்ளோசப் ஷாட்டில் வருகிறார்.

ஆனால் இவரை தவிர அந்த இரட்டை வீராங்கனைகள் ரசிகர்களை கவர்கிறார்கள். இதில் நடித்த அனைவரும் நிஜ விளையாட்டு வீராங்கனைகள் என்பது பெரும் ஆறுதல். நடிகைகளாக தெரியாமல் கேரக்டர்களாக தெரிகிறார்கள்.

சுசீந்திரனின் நன்றிக் கடனுக்காக சூரி இந்த படத்தில் நடித்துள்ளார் என நன்றாகவேத் தெரிகிறது. ஆபிசர் கேரக்டர் வரும் வில்லன் நல்ல பெர்மான்ஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பின்னணி இசை மிரட்டல். கபடியை விட இவரது இசை பெரிதாக பேசப்படும். பாடலும் சரி பாடல் வரிகளும் சூப்பர். பொம்பள சடுகுடு… வீரத்தமிழன் கபடி என்ற வரிகள் எனர்ஜியாக உள்ளது.

ஆர் பி குருதேவ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபடி காட்சிகள் அருமை. க்ளைமாக்ஸ் காட்சி நிச்சயம் சீட் நுனியில்தான் படத்தை பார்ப்பீர்கள். செம கலக்கலான காட்சி.

பாரதிராஜா பயிற்சியில் ஆண்களுடன் பெண்கள் மோதும் கபடி போட்டியை தெறிக்க விட்டுள்ளனர். ஆனால் பெண்கள் தொட்டவுடன் ஆண்கள் பறந்து செல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

பெண்கள் கபடியை மையப்படுத்தி இதுவரை எந்த படமும் வரவில்லை. அரைக்கால் சட்டை போட்டு வந்தால் பெண்களை தவறாக நினைப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி வசனங்களும் கைகொடுத்துள்ளது.

பாரதிராஜா சசிகுமார் மோதிக் கொள்ளும் காட்சியில் ட்விஸ்ட் வைத்திருந்தால் ஏதாவது சுவாரசியம் இருந்திருக்கும். அதுவும் இல்லாமல் போச்சு.

ஆக மொத்தம்.. கென்னடி கிளப்… கெத்து கிளப்

Comments are closed.