ஆண்களுக்கு எச்சரிக்கை… 90ML விமர்சனம் 3.25/5

ஆண்களுக்கு எச்சரிக்கை… 90ML விமர்சனம் 3.25/5

நடிகர்கள்: ஓவியா மற்றும் பலர்.
இயக்கம் – அனிதா உதீப் (அழகிய அசுரா)
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
இசை – சிம்பு
பிஆர்ஓ – யுவராஜ்

கதைக்களம்…

தன் அறிமுக காட்சியிலேயே சிகரெட் அடித்தப் படி ஆட்டோவில் வந்து இறங்குகிறார் ஓவியா.

தன் பாய் பிரெண்ட் உடன் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்கிறார். சரக்கு சிகெரட், ரொமான்ஸ், செக்ஸ் என தன் இஷ்டப்படி இருக்கிறார்.

அங்குள்ள 4 பெண்களின் (3 திருமணமானவர்கள்) நெருங்கி பழகுகிறார்.

தோழிகளில் ஒருவருக்கு மட்டும் திருமணமாகவில்லை. அப்போதுதான் அந்த பெண்ணின் காதல் பிரச்சினை தெரிய வருகிறது. அது என்ன பிரச்சினை, எப்படி தீர்த்து வைக்கிறார்.

அந்த பெண்களுடன் ஓவியா அடிக்கும் லூட்டியே 90 எம்.எல். படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்தையே தன் பக்கம் கவர்ந்தவர் ஓவியா. அப்போது வெட்டப்பட்ட ஹேர் ஸ்டைலுடன் இந்த படத்திலும் நடித்துள்ளார்.

ஆண்கள் மட்டும்தான் சரக்கு, கஞ்சா, சிகரெட் அடிக்கனுமா? நாங்களும் செய்வோம்ல என்று ஓபனாக பேசி மணிக்கு ஒரு முறை பாட்டில்களை ஓப்பன் செய்கிறார்.

சரக்கு அடித்துவிட்டு ஆண்கள் என்ன வெல்லாம் பேசுவார்கள்? என்பதை எல்லாம் பெண்களும் பேசுவார்கள்.. என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் பெண் இயக்குனர் அனிதா உதீப்.

மார்பு சைஸ் முதல் செக்ஸ் வரை அனைத்தையும் பேசுவார்கள் என்பதையும் ஓபனாக பேசி இளைஞர்களை சூடேற்றியிருக்கிறார்கள். மேலும் ஆண்கள் இல்லாமலும் செக்ஸ் செய்துக் கொள்ள லெஸ்பியன் இருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டார்கள். (அதான் இந்திய அரசே அதற்கு ஓகே சொல்லிவிட்டதே..)

ஓவியாவை விட அப்பார்ட்மெண்ட் பெண்களும் அழகாகவே இருக்கிறார்கள். அதிலும் தாமரை மற்றும் பாரு என இரண்டு ஆன்டிகள் ரசிகர்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.


தொழில்நுட்ப கலைஞர்கள்…

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்.

சிம்பு இசையில் மரண மட்டை, பீப் பிரியாணி பாடல்கள் பட்டைய கிளப்புகிறது. அதுவும் பெண்களின் ப்ரெண்ட் ஷிப்புக்காக உருவாக்கப்பட்ட ப்ரெண்ட்டி டா பாடல்கள் இனி தோழிகளின் தேசிய கீதம் பாடலாக இருக்கும்.

இசையில் கலக்கிய சிம்பு பின்னணி இசையில் தேறவில்லை. முக்கியமாக கார் சேசிங் சீனில் ஆக்சன் வராமல் ஆட்டம் போட வைக்கும் இசையாக உள்ளது.

சிம்புவும் ஒரு காட்சியில் வந்து எனக்கு லவ் செட்டாகாது. லிவிங் டுகெதர் ஓகே என்று டயலாக் எல்லாம் பேசி ஓவியாவுக்கு லிப் கிஸ் அடித்து செல்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

இதற்கு முன் இப்படியொரு படம் வந்திருக்குமா? தெரியாது. அந்தளவுக்கு பெண்கள் பற்றிய அனைத்தையும் அக்கு வேறு பிரிச்சி மேய்ந்திருக்கிறார் டைரக்டர்.

தைரியமாக சொன்ன இயக்குனர் அனிதாவுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்றே சொல்ல வேண்டும்.

ஆண்கள் சரக்கு அடித்துவிட்டு என்ன வேணாலும் செய்யலாம். அதையே பெண்களும் செய்தால் குடும்பம் என்னவாகும் என்பதையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இந்திய சட்டப்படி பெண்களின் லெஸ்பியனை ஆதரித்து இருக்கிறார் அனீதா. ஆனால் திருமணமான பெண்களோ அல்லது ஆண்களோ கள்ளக்காதல் வைக்க கூடாது என்பதையும் சொல்லியிருக்கிறார்.

அதாவது… கல்யாணம் ஆகிவிட்டால் ஒருவன் ஒருத்தியுடன் வாழு. அதாவது கள்ளக்காதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு வேளை (கணவனோ அல்லது மனைவியோ) பிடிக்கவில்லை என்றால் ஒரேடியாக அவரை பிரிந்து சென்றுவிட்டு என்ன வேணாலும் செய்துக் கொள் என்ற தத்துவத்தையும் பேசியிருக்கிறார்.

பெண்களை அரைகுறை ஆடையுடனும் செக்ஸியாகவும் காட்டியுள்ளார். சேலையில் இருந்தாலும் அதிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்தப்படத்தை பாருங்கள். இல்லை என்றால் உங்களுக்கு ஒரு சதவிகிதம் கூட படம் பிடிக்காது.

90 எம்எல்… ஆண்களுக்கு எச்சரிக்கை…

Comments are closed.

Related News

கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய படங்களை…
...Read More
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களின்…
...Read More