தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
நெல்லை பையன்… மும்பை டான்… சாதாரண ஒருவன் எப்படி டானாக மாறுகிறான் என்பதே ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஒன்லைன்.
கதைக்களம்…
நெல்லையில் ஒரு கிராமத்தில் அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு.
ஒருநாள் வயகாட்டில் அவருக்கு விபத்து ஏற்படுகிறது. எனவே வேறு வேலைக்கு சிம்புவை அனுப்ப நினைக்கிறார் ராதிகா.
அதன்படி மும்பைக்கு சென்று பரோட்டா கடையில் வேலைக்கு சேர்கிறார் சிம்பு.
ஒருகட்டத்தில் எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலுடன் இணையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன்பிறகு சிம்பு வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
டீன்ஏஜ் பையனாக தன்னை காட்ட உடலை வருத்தி அர்ப்பணித்து நடித்து இருக்கிறார் சிம்பு. சென்டிமெண்ட் ஆக்சனிலும் அசத்தல். சிம்பு உழைப்புக்கு அவார்ட் கிடைக்கும்.
ஜாபரின் நடிப்பு தியேட்டரில் விசில் பறக்கிறது.
நாயகியாக சித்தி இதானி. முதல் தமிழ் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பு..
வழக்கமான அம்மாவாக அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் ராதிகா. நடிகர் அப்புகுட்டிக்கு பாராட்டுக்கள்.
டெக்னீஷியன்கள்…
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஜெயமோகனின் கதை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட். ஸ்ரேயா கோஷல் குரலில் “உன்ன நெனச்சதும்… பாடல் அருமையான மெலோடி.
‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடலும் வேற லெவல்.. பின்னணி இசை படத்துடன் ஒன்றி செல்வது சிறப்பு.
சித்தார்தாதாவின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும் சிட்டி காட்சிகளும் சிறப்பு. காஸ்ட்யூம் டிசைனர் உத்ரா மேனனுக்கும் பாராட்டு.
திடீரென வேகம் எடுக்கும் திரைக்கதை பின்னர் காதல் காட்சிகளால் தொய்வடைகிறது. இதேபோல பல இடங்களில் வேகம் குறைந்து பின்னர் ஏறுகிறது.
வழக்கமாக கௌதம் படங்களில் வாய்ஸ் ஓவரில் காட்சிகள் நகரும். ஆனால் இந்த படத்தில் அது இல்லை என்பது பெரிய ஆறுதல்.
இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் வெறித்தனம்.
ஆக வெந்து தணந்தது காடு.. சிம்புவின் சிறப்பான சம்பவம்