தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
அறிமுக இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ‘777 சார்லி’.
நாய் ஒன்று சார்லி என்ற கேரக்டரில் நடித்துள்ளது.
கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
கதைக்களம்..
தனது குடும்பத்தை ஒரு விபத்தில் இழந்து விடுகிறார் நாயகன் தர்மா (ரக்ஷித் ஷெட்டி).
விரக்தியில் இருப்பதால் ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் தர்மா.
இப்படியான சூழ்நிலையில் அவரிடம் வந்து தஞ்சம் அடைகிறது சார்லி என்ற ஒரு பெண் நாய்.
முதல் அதை வெறுக்கும் நாயகன் நாட்கள் செல்ல செல்ல வேறு வழியின்றி நாய் மீது பாசம் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் சாமி மீது அதீத அன்பை கொண்டிருக்கிறார் நாயகன் தர்மா
அப்போதுதான் சார்லிக்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது.. இதனால் உடைந்து போன தர்மா, சார்லிக்காக என்ன செய்தார்.?
மேலும் தர்மாவின் வாழ்க்கையை மாற்றும் சார்லிக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்ன ஆசை? என்பதே படத்தின் மீதிக் கதை..
கேரக்டர்ஸ் & டெக்னீஷியன்ஸ்…
இந்தப் படத்தில் நடிப்பவர் ஆக இருந்தாலும் அல்லது டெக்னீசியனாக பணி புரிபவராக இருந்தாலும் அவர்களுக்கு மிருகங்கள் மீது பாசம் வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.? அதற்கு ஏற்றவர்களை இந்த படத்தில் பணிபுரிய வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நாயின் ஒவ்வொரு முக பாவனைகளையும் அழகாக படம்பிடித்துள்ளார்.. நாய் நடப்பது ஆகட்டும்.. நாய் கலங்குவது ஆகட்டும்… நான் துள்ளிக் குதிப்பது ஆகட்டும்… இதுபோல நாயின் ஒவ்வொரு அசைவுகளையும் கதையின் உணர்வுக்கு ஏற்றவாறு படம்பிடித்து நமக்கு விருந்து அளித்துள்ளார்.
அதுபோல சார்லீக்கு நாம் கண்டிப்பாக ஒரு பெரிய சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.
நாம் எத்தனையோ படங்களை பார்த்து இருப்போம் அதில் வரும் நாய்கள் ஏதோ ஒரு காட்சிக்கு பயன்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் நாய் தான் கதையின் நாயகனே.
நாம் நாய்களை விரும்பாவிட்டாலும் இந்த படத்தை பார்த்தால் நாயின் மீது நமக்கே கண்டிப்பாக ஒரு ஈர்ப்பு ஏற்படும் அப்படியான ஒரு படத்தை கொடுத்துள்ளார்
நாயகனாக ரக்ஷித் ஷெட்டி. எமோஷ்னல், தவிப்பு, விரக்தி, பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். சில இடங்களில் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார் ரக்ஷித்.
சிறப்பு தோற்றத்தில் அசத்தியிருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா. நடிகை சங்கீதாவும் தன் அழகிலும் நடிப்பிலும் பாராட்டைப் பெறுகிறார்.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நாய்க்கான காட்சிகளில் கூடுதல் கவனத்தை படக்குழுவினர் செலுத்தி உள்ளனர்.
அரவிந்த் எஸ் காஷ்யப்பின் ஒளிப்பதிவு மற்றும் நோபின் பாலின் பின்னணி இசை ரசிக்கத்தக்க வகையில் உள்ளது.
வயதான தம்பதியரின் காதல், மழலை மொழி பேசும் குழந்தை, டாக்டர் மற்றும் உதவியாளரின் டைமிங்க் காமெடி, என பலவற்றை ரசித்து உணர்ந்து இயக்கியுள்ளார் இயக்குநர் கிரண்ராஜ்.
படத்தின் நீளம் பெரும் குறையாக உள்ளது. தேவிகா கேரக்டரில் நடித்திருக்கும் சங்கீதா, காட்சி தேவையில்லை. இரண்டாம் பாதியில் தடுமாறியிருக்கிறது படைப்பு.
அதில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் சார்லியை தூக்கி வைத்து கொஞ்சலாம்.
நாய்களுக்கான இனப்பெருக்க முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வை படம் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
777 charlie movie review in Tamil