தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த செப். 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி (2016) வரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால், தன் நவம்பர் 7ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கமல் கூறியிருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு ஜெயலலிதா காலமானார்.
தற்போதுவரை அந்த துயரத்தில் இருந்து மீளாத சோகத்தில் தமிழகம் உள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது.
எனவே ரஜினியும் கமலை பின்பற்றி தன் பிறந்தநாளை கொண்டாட்டங்களை தவிர்க்க ரசிகர்களிடம் சொல்லுவாரா? என்று பார்க்கலாம்.