ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..?

Will Allu Arjun prove his mass in TN by En Peyar Surya En Veedu India movieஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் அல்லு அர்ஜுன்.

இவரது படங்களுக்கு கேரளாவிலும் அதிக எதிர்பார்ப்பு அண்மை காலமாக இருந்து வருகிறது.

தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை அதிகளவில் கவர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன் அவர்கள் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார்.

இன்று, மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரையிட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

”அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த.

மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.

இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Allu Arjun prove his mass in TN by En Peyar Surya En Veedu India movie

Overall Rating : Not available

Related News

Latest Post