வீழ்ச்சியில் விஜய்சேதுபதி.; ரஜினி கமல் விஜய் போல அஜித் கை கொடுப்பாரா.?

வீழ்ச்சியில் விஜய்சேதுபதி.; ரஜினி கமல் விஜய் போல அஜித் கை கொடுப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலங்களில் இவரது படங்களும் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தென்மேற்கு பருவக்காற்று சூது கவ்வும் தர்மதுரை விக்ரம் வேதா நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரும் பெயரை பெற்று தந்தது.

மேற்கண்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி அதன் பிறகு மாஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மசாலா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் தொடர் தோல்வியை சந்தித்தார்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘ஜூங்கா’, ‘சீதக்காதி’, ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘சிந்துபாத்’, ‘சங்கத்தமிழன்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ‘டிஎஸ்பி’ படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக.. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக.. ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். இவர் வில்லனாக நடித்த இந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு வில்லனாக நடித்தால் அடுத்த வெற்றியை கொடுக்கலாம் விஜய் சேதுபதி.

தற்போது ‘காந்தி டாக்ஸ்’, ‘கிறிஸ்மஸ்’, ‘ஜவான்’ உள்ளிட்ட ஹிந்தி படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இவர் விஜய்சேதுபதிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இதில் விஜய்சேதுபதி இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

JUST IN விஜய் – லோகேஷ் இணையும்  ‘தளபதி 67’ பூஜை நடைபெற்றது.; நாளை முதல் சம்பவம் ஸ்டார்ட்

JUST IN விஜய் – லோகேஷ் இணையும்  ‘தளபதி 67’ பூஜை நடைபெற்றது.; நாளை முதல் சம்பவம் ஸ்டார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் – லோகேஷ் கூட்டணி அமைந்துள்ளது.

‘தளபதி 67’ என்று தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். இந்த நிறுவனம்தான் ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று டிசம்பர் 5 காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் செல்போன்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பான படங்கள் வெளியாகவில்லை.

விரைவில் பட தயாரிப்பு நிறுவனமே இந்த புகைப்படங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை டிசம்பர் 6ஆம் தேதி இந்த படத்தின் போட்டோ சூட் நடைபெறும்.

டிசம்பர் 7 முதல் 9 தேதி வரை ப்ரோமோ சூட் நடைபெறும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான செட் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத. லேபிள் போடப்பட்டுள்ளது.

‘துணிவு’ படம் பேங்க் கொள்ளை கதை? நெகட்டிவ் ரோலில் அஜித்.? வினோத் சொல்லும் சீக்ரெட்

‘துணிவு’ படம் பேங்க் கொள்ளை கதை? நெகட்டிவ் ரோலில் அஜித்.? வினோத் சொல்லும் சீக்ரெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார் வினோத்.

இந்த படம் பேங்க் கொள்ளை சம்பவத்தை பற்றிய கதை என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வினோத் தன் சமீபத்தை பேட்டியில் ‘துணிவு’ படத்தின் கதை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில்… “இந்த படத்தின் கதையை பற்றி இப்போது சொல்ல முடியாது. அது மற்றவர்களின் யூகமாகவே இருக்கட்டும்.

ஒரு பேங்க் போன்ற செட் போட்டது உண்மைதான். எனவேதான் இந்த படத்தின் கதை பேங்க் கொள்ளை பற்றியது என்று செய்திகள் வலம் வந்தன.

இதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்? எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன அதைப்பற்றி தெரிவித்தால் மீண்டும் மங்காத்தா போன்ற கதையா? என்ற யூகங்கள் எழும்.

எனவே துணிவு ரிலீஸ் வரை காத்திருங்கள்” என தெரிவித்துள்ளார் வினோத்.

‘துணிவு’ வினோத் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு

‘துணிவு’ வினோத் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சதுரங்க வேட்டை’ & ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் வினோத்.

இதனையடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ & ‘வலிமை’ & ‘துணிவு’ ஆகிய மூன்று அஜித் படங்களை தொடர்ந்து இயக்கி வந்துள்ளார்.

‘துணிவு’ படம் விரைவில் வெளியாக உள்ளது

இவர் அடுத்ததாக கமல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இவரின் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் யோகி பாபு்

இந்த படம் ஒரு திருடனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் கதையாம்.

இதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் எச் வினோத்.

3வது முறையாக இணையும் விஜய்சேதுபதி – மணிகண்டன்; ஆனால் இது படமல்ல.!

3வது முறையாக இணையும் விஜய்சேதுபதி – மணிகண்டன்; ஆனால் இது படமல்ல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதையமைப்பில் உருவாக்கப்பட்ட ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருந்தார் .

இதனையடுத்து மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற படத்திலும் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்திருந்தனர்.

இந்த நிலையில் விரைவில் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது.

ஆனால் இந்த முறை இது ஒரு திரைப்படமாக உருவாகாமல் வெப் தொடராக உருவாக்க உள்ளதாம்.

எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக்குகிறாரா சுதா கொங்கரா.?

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக்குகிறாரா சுதா கொங்கரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் 5 தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது.

சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார் சூர்யா. மேலும் அவர் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் இயக்ககுகிறார் சுதா கொங்காரா.

இதன்பின்னர் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை தழுவி புதிய படத்தை சுதா இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நம் FILMISTREET தளத்தில் அப்படி ஒரு தவறான செய்தியை பதிவிடவில்லை.

இந்த தகவலை இயக்குநர் சுதா கொங்கரா மறுத்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், “நான் மிகவும் போற்றும் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

என் அடுத்த படம் குறித்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.. ” என பதிவிட்டுள்ளார் சுதா.

More Articles
Follows