தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இந்தியா முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால், தமிழக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே வரும் ஜீலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என திரையுலகினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து டி. ராஜேந்தர் கூறியுள்ளதாவது…
இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யார் யாரோ எவ்வளவோ துறையில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் வாங்கியிருப்பார்கள்.
ஆனால் மக்கள் தலையில் எப்படி வரி விதிப்பது என்று ஆராய்ச்சி செய்து பிரதமர் மோடி பிஎச்டி வாங்கி விட்டார். இந்த ஜி.எஸ்.டி வரி மக்களைப் பாதிக்கும். சினிமாவைச் சீரழிக்கும்.
மத்திய அரசே வடக்கை வாழ வைக்கவும் தெற்கைத் தீர்த்துக் கட்டவும் நினைக்காதே. சினிமாவுக்கு வரிவிதித்து பிராந்திய மொழிப் படங்களை ஒடுக்க நினைக்காதே.
தென்னகத்தை நசுக்காதே. திரை உலகத்தைப் பொசுக்காதே. நூறு ரூபாய் தாண்டினால் மத்திய அரசு 28 சதவிகிதம் வரி விதிக்குமாம் , மாநில அரசு கேளிக்கை வரி 30 சதவிகிதம் விதிக்குமாம். இதர வரிகள் சேர்த்தால் 64 சதவிகிதம் அரசுக்கே கட்டிவிட்டால் மீதி இருப்பது என்ன?
இந்தக் கொடுமையை எதிர்த்து திரையுலகம் தாமதமாகவே குரல் கொடுப்பது ஏன் ?
ஆனால் நான் முன்னாலேயே பேரரசு நூல் வெளியீட்டு விழாவில் இதை எதிர்த்துப் பேசினேன் .
துணிவாக முதலில் கமல் குரல் கொடுத்தார். அவருக்கும் எனக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் அவரது துணிவைப் பாராட்டுகிறேன்.
ஆனால் ரஜினி மெளனம் சாதிப்பது ஏன்? தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பிலிருந்த டி.சிவா சொன்னார். ரஜினி மோடிக்கு நெருக்கம் ஏதாவது செய்து விடுவார் என்று .
ஆனால் ரஜினி எதுவுமே செய்யவில்லை. வாயே திறக்கவில்லை. தன்னை வாழவைத்த தாய் சினிமா என்கிறார். தன்னைப் பெற்று வாழவைத்த சினிமாவையே காப்பாற்ற முன்வராத ரஜினியா தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார்? ” இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.
Why Rajini not rising his voice on GST issue on Cinema says TRajendar