தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன் கேரியரை தொடங்கியவர் வாணி போஜன். இதனையடுத்து இவருக்கு டிவி சீரியல்களில் வாய்ப்பு வரவே. அதில் முதன்மை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தெய்வமகள் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி் இருந்தார் வாணி போஜன். சின்னத்திரையில் ரசிகர் வட்டம் பெருகவே வெள்ளித்திரையிலும் இவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சீயான் விக்ரமுடன் ‘மகான்’ படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படம் ஓடிடியில் வெளியான போதிலும் வாணி போஜன் காட்சிகள் ஒன்று கூட இல்லை. எனவே மிகக் கடுப்பில் இருந்தார் வாணி.
ஆனாலும் இணையதளங்களில் நீக்கப்பட்ட காட்சிகள் என்ற வீடியோ வெளியானது.
பரத்துடன் வாணி போஜன் இணைந்துள்ள ‘மிரள்’ படம் நாளை நவம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் ஜெய்யுடன் இவர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக வதந்திகள் பரவியது
இந்த நிலையில் ‘மிரள்’ புரோமோசன் நிகழ்ச்சியில்…
“நான் எந்த நடிகருடனும் உறவிலும் இல்லை. காதலும் இல்லை. தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். என் கதைகளை நானே கேட்டு ஒப்புக்கொள்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.








