பரத்-வாணி போஜன் இணையும் பட டைட்டில் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

பரத்-வாணி போஜன் இணையும் பட டைட்டில் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘மிரள்’ என்ற பெயரில் அடுத்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்

தொழில்நுட்பக் குழுவில் M.சக்திவேல் (கதை- வசனம்-இயக்கம்), பிரசாத் S.N. (இசை), சுரேஷ் பாலா (ஒளிப்பதிவு), கலைவாணன் R (எடிட்டர்), மணிகண்டன் சீனிவாசன் (கலை), டேஞ்சர் மணி (ஸ்டண்ட்), சச்சின் சுதாகரன்-ஹரிஹரன் M – Sync Cinema (ஒலி வடிவமைப்பு), கவின் முதல்வன் (ADR), அரவிந்த் மேனன் ( ஒலி கலவை), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), M முகமது சுபையர் (ஆடைகள்), வினோத் சுகுமாரன் (மேக்கப்), G.S. முத்து – Accel Media (DI-கலரிஸ்ட்), கிரண் ராகவன் – Resol FX (VFX மேற்பார்வையாளர்), E ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) , சந்துரு – தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), DEC (புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்), பால முருகன் (தயாரிப்பு மேலாளர்).

Miral

Sivakarthikeyan released first look of Bharath-Vani Bojan duo movie title

சிவாஜி இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார்.. தேவையின்றி இழுக்காதீர்.; பிரபு அண்ணன் ராம்குமார் ஆவேசம்

சிவாஜி இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார்.. தேவையின்றி இழுக்காதீர்.; பிரபு அண்ணன் ராம்குமார் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மரியாதைக்குரிய இரா. முத்தரசன் அவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்கும் சாக்கில், எங்கள் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பெயரை தேவையின்றி இழுத்திருக்கிறார்.

நடிகர் திலகம் மற்றும் பிரதமர் மோடி இவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவருமே தங்களின் இடைவிடா மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினால் இந்த உயர்ந்த இடத்தை அடைந்து இருக்கிறார்களே அன்றி உங்களைப் போல் மற்றவர் முதுகில் சவாரி செய்து வந்தவர்களல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எங்கள் தந்தை நடிகர் திலகம் அவர்கள், உங்களின் மூத்த தலைவர்களுடன் நட்போடு இருந்தவர்.

நெருக்கடியான காலங்களில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்.

தன் உடல், பொருள், புகழ் யாவற்றையும் எந்த விதமான எதிர்பார்ப்புமில்லாமல் தன் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.

அவருடைய வழியில் நான் பயணித்து வருகிறேன் என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.

நடிகர் திலகத்தின் திறமை, நேர்மை, கடின உழைப்பு, அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இதன் மூலமாக பல விருதுகள் கிடைத்தன. அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்று அவர் இருந்திருந்தால் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்திருப்பார். அது மட்டுமின்றி என் பக்கம் நின்று பாரதீய ஜனதா கட்சியில் இணையும் என் முடிவை வரவேற்றிருப்பார்.

உலக அரங்கில் பிரதமர் மோடி அவர்களால் நமது பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதையும் நம் நாட்டுக்கு அவரால் பெருமை சேர்வதையும் கண்டு மகிழ்ந்திருப்பார்.

இறக்குமதி செய்யப்பட்டு தற்போது அழிந்து கொண்டிருக்கும் கொள்கையை இப்போது நீங்கள் பின்பற்றி வருகிறீர்கள்.

பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார் நம் பிரதமர்.

நமது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களும் இதே பாதையைப் பின்பற்றி வெற்றி நடை போட்டு வருகின்றார். இடது வலது என எந்தப் பக்கமும் திரும்பாமல் நேர்கொண்ட பார்வையில் எங்கள் தலைவர்களின் பயணம் தொடர்கிறது.

உங்களுடைய கருத்தில் இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தைப் பற்றிய அறியாமை தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சி அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. அளித்த வாக்குறுதி தான், மக்களை கடன் வாங்க வைத்தது. இவையெல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்களாகும்.

“Little Knowledge is Dangerous” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அரைகுறை ஞானம் ஆபத்தானது என்பது உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது.

உங்களுடைய கருத்துக்கள் வன்முறை, பிரிவினைவாதம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவே முதன்மையானது என்ற தேசப்பற்று குறிக்கோளை நிறைவேற்ற பாரத பிரதமர் மோடி அவர்கள் வழியில் பாரதிய ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது.

ஒவ்வொரு இந்தியனையும் உயர்வாக மதிக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி.

அயல்நாட்டு கொள்கைகளை கடைப்பிடித்து, அயல்நாட்டு உதவியைச் சார்ந்து, தேச விரோத சக்திகளின் ஆதரவில் இயங்கும் உங்களின் அறிவுரைகளுக்கு இங்கு தேவையுமில்லை. இடமுமில்லை.

நடிகர் திலகத்தைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால் மற்றவர்களை தரமின்றி விமர்சிப்பதற்கு அவர் பெயரை பயன்படுத்த வேண்டாம். உங்கள் கொள்கைகள், வழிமுறைகள் அனைத்தையும் விட உயர்ந்த மனிதர் நடிகர் திலகம்.

உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்க இந்திய மக்களுக்கு நேரமில்லை.

வணக்கம்.
ஜெய் ஹிந்த்

சென்னை-17
Ramkumar Ganesan
30.05.2022
S/o Nadigar Thilagam Sivaji Ganesan

If Sivaji had been there he would have supported Modi – Ramkumar Ganesan

3 பின்னணி பாடகர்கள் அடுத்தடுத்து மரணம்.; சோகத்தில் மூழ்கிய இசை பிரியர்கள்

3 பின்னணி பாடகர்கள் அடுத்தடுத்து மரணம்.; சோகத்தில் மூழ்கிய இசை பிரியர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 5 நாட்களில் பிரபலமான 3 பாடகர்கள் அடுத்தடுத்து மரணம். இந்த அதிர்ச்சி செய்திகளால் இசை ப்ரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவர் மேடையில் பாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தனர்.

அதன் விவரம் வருமாறு..

மே 28 ஆம் தேதி..:

கேரளா ஆலப்புழாவில் நடந்த நிகழ்ச்சியில் , பின்னணி பாடகர் எடவா பஷீர் (77) பாடிக் கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்து மரணமடைந்தார்.

மே 29 ஆம் தேதி..:

பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா. தன் வசீகரமான குரலால் பல இளைஞர்களை கவர்ந்தவர்.

இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையாகும். இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த அரசு பாதுகாப்பை சில தினங்களுக்கு முன் தான் ஆளும்கட்சி ஆம் ஆத்மி வாபஸ் வாங்கியது.

கடந்த மே 29ம் தேதி மானசா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் சித்து மூசேவாலா.

நேற்று மே 31 தேதி்: பின்னணி பாடகர் கே.கே., என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் மரணம்.

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

பிறப்பால் மலையாளி ஆனாலும் டெல்லியில் வசித்து வந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம், என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ஏஆர்ஆர் இவரை அறிமுகப்படுத்தினார்.

இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

3 playback singers consecutive deaths .; Music lovers immersed in sadness

சூர்யா படத்திற்கு 2 மாஸ் டைட்டில்களை ரெடியாக வைத்திருக்கும் பாலா

சூர்யா படத்திற்கு 2 மாஸ் டைட்டில்களை ரெடியாக வைத்திருக்கும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் .

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் பாலா சூர்யா இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் .

இந்த படத்தை சூரியாவின் 2டி நிறுவனமே தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலா இயக்கும் ‘சூர்யா 41’ பட சூட்டிங்.; சூடான அப்டேட் கொடுத்த சூர்யா

இந்த படத்திற்கு ‘கடலாடி’ அல்லது ‘வணங்கான்’ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது மீனவர் நலன் மற்றும் பிரச்சினை குறித்த படம் என்பதால் ‘கடலாடி’ (நாடோடி பணி) என்ற தலைப்பும் அநீதிக்கு பயந்து எவரையும் வணங்கான் (வணங்காதவன்) என்ற தலைப்பும் வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எனவே படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

Director Bala has 2 mass titles for Surya 41

3 கேரக்டர்கள்… சிங்கிள் ஷாட்… 10 நிமிஷம்..; அசத்துகிறார் ஆதேஷ் பாலா

3 கேரக்டர்கள்… சிங்கிள் ஷாட்… 10 நிமிஷம்..; அசத்துகிறார் ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா.

நடிகர் சிவராமன் – சுப்புலெட்சுமி நட்சத்திர தம்பதிகளின் மகனாவார். தாயார் சுப்புலெட்சுமி விசு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆதேஷ்

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் B.A., செக்ரட்டரிஷிப் படித்தவர்.

விக்ரம் நடித்த சாமி படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக் கோட்டை, முண்டாசுப் பட்டி, இங்கிலீஷ் காரன், விந்தை, குருவி, வஜ்ரம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், ஜன்னலோரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாயம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பொண்டாட்டி மற்றும் நிக்குமா நிக்காதா போன்ற குறும்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். Take 1 shot 1 என்ற குறும்படத்தில் ஒரே ஷாட்டில் நடித்துள்ளார்.

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

சந்தோஷ் நவீன் இயக்கியுள்ள ‘இராஜமாபுரம்’ என்ற படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். ஷாம் ஒளிப்பதிவு செய்ய ரகு சரவணகுமார் இசையமைக்கிறார். Article 21 நிறுவனம் சார்பாக சந்தோஷ்குமார் தயாரித்துள்ளார்.

பேட்ட, ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான், சவரக்கத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

இப்போது பிரசாந்தின் ‘அந்தகன்’ & மணிரத்னத்தின் ‘பொன்னியின்செல்வன்’ உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த 2 படங்களும் விரைவில் ரிலீசாகவுள்ளது.

அதே நேரம் குறும்படங்களிலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் குறும்படம், ‘மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’.

காயத்ரி செந்தில்குமார் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக ஹேமா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக 10 நிமிடங்களில், 3 கதாபாத்திரங்களை வைத்து ஒரே ஷாட்டில் உருவான குறும்படத்தில் ஆதேஷ் பாலா நடித்துள்ளார்.

இதன் தலைப்பு பார்வை (Title look) ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.

நளதமயந்தி, அழகிய தீயே போன்ற பல படங்களின் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

சுபாஷ் அலெக்சாண்டர் ஒளிப்பதிவில், அன்பு எடிட்டர், முருகவேல் மாணிக்கம் இணை இயக்கம்..

3 characters … single shot … 10 min ..; Adesh Bala is awesome

சிம்பு பட இசை விழா தள்ளிப்போக இதான் காரணம்.; இதை படிச்சா நீங்களே சைலண்ட் ஆகிடுவீங்க!

சிம்பு பட இசை விழா தள்ளிப்போக இதான் காரணம்.; இதை படிச்சா நீங்களே சைலண்ட் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் 117 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

‘மாநாடு’ மகா வசூல்..; ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தார் சிம்பு

எனவே சிம்புவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது சிம்பு நடிப்பில் ‘மஹா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் ரீலுசுக்கு தயாராகவுள்ளன.

அண்மையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்…’ என்ற பாடல் வெளியானது.

இப்படத்தை கௌதம் மேனன் இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’ பட இசை விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

‘வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஒவர்.; சிலம்பரசன் கேரக்டர் சூப்பர்ல

சமீபத்தில் கமலின் ‘விக்ரம்’ இசை நிகழ்ச்சி இதே இடத்தில் நடைபெற்றது. அதில் சிம்புவும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இந்த விழா தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டிஆர் உடல்நலம் தேறிய பின்பு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கலாம்.

This is the reason why the Simbu Film audio release was postponed

More Articles
Follows