BREAKING மீண்டும் ஒரு எம்ஜிஆர் வேண்டும்.. அது உன்னால் முடியும்..- கே. ராஜன்

BREAKING மீண்டும் ஒரு எம்ஜிஆர் வேண்டும்.. அது உன்னால் முடியும்..- கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர் எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் ‘இரும்பன்’.

இதில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

கீரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லெமூரியா மூவிஸ் சார்பாக இந்த படத்தை தமிழ் பாலா மற்றும் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கேகே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரும்பன்

இந்தப் பட விழாவில் கே ராஜன் கலந்து கொண்டு பேசினார்.. அவர் பேசும்போது..

“இப்போது எம்ஜிஆர் இல்லை. தமிழ் சினிமா ஹீரோக்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.. ஆனால் எம்ஜிஆர் போல ஒருவரும் இல்லை.

இன்றைக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. எனவே ராமச்சந்திரன் புதிய எம்ஜிஆர் ஆக உருவாக வேண்டும்.

மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.. எம்ஜிஆரை போல எவரும் வாழவில்லை.

அவர் வீட்டிற்கு சென்றால் எப்போதும் எல்லாருக்கும் உணவு அளிப்பார்.

ஆனால் இன்று பெரிய ஹீரோக்கள் கூட தங்கள் வீட்டில் ஒரு மோர் கூட கொடுப்பதில்லை. தாகம் தீர்ப்பதில்லை.

இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நான் தான்… நான் தயாரித்த டபுள்ஸ் திரைப்படத்தில் தான் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.” என்று வாழ்த்தி பேசினார்.

கூடுதல் தகவல்…

முதலில் இந்த படத்துக்கு குறவன் என்று தலைப்பு வைத்திருந்தனர். தற்போது படத்தின் பெயரை மாற்றி ‘இரும்பன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இரும்பன்

https://t.co/myRnoVt0eg

We need MGR again says K Rajan at Irumban event

BREAKING ஜூனியர் எம்ஜிஆர் பட விழாவில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சீமான்

BREAKING ஜூனியர் எம்ஜிஆர் பட விழாவில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர் எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் ‘இரும்பன்’.

இதில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

கீரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லெமூரியா மூவிஸ் சார்பாக இந்த படத்தை தமிழ் பாலா மற்றும் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கேகே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரும்பன்

இந்த விழாவில் முதலிலேயே பேசத் தொடங்கினார் சீமான். அவர் பேசியதாவது..

“நாயகன் ராமச்சந்திரன்.. நீங்கள் ஜூனியர் எம் ஜி ஆர் என்ற பெயரில் உங்கள் பயணத்தை ஆரம்பித்து உள்ளீர்கள். ஆனால் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்.

நடிகர் விஜய் ஆரம்பத்தில் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தற்போது சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்” என்று சீமான் பேசினார்.

சீமானின் இந்த பேச்சு ரஜினி ரசிகர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரும்பன்

https://t.co/myRnoVt0eg

Seeman speech about Rajini and Vijay in Irumban Audio launch

தோனி தயாரிப்பில் உருவாகும் படம் ஜனவரி 23ஆம் தேதி படப்பிடிப்பு; நடிகர் யார் தெரியுமா..?

தோனி தயாரிப்பில் உருவாகும் படம் ஜனவரி 23ஆம் தேதி படப்பிடிப்பு; நடிகர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி புதிதாக நிறுவப்பட்ட ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறது.

தோனி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தமிழ் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

தமிழில் தோனி தயாரிக்கும் முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பெயரிடப்படாத இப்படம் ஜனவரி 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்றும், தலைப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண்9

Harish Kalyans new film project by Dhoni produced

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’.

இந்தப் படத்தில், காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சராசரியான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை ஜனவரி 15 முதல் பிரபல நெட்ஃபிக்ஸ் தளத்தில் திரையிடப்பட உள்ளது.

வரலாறு முக்கியம்

Jeeva’s ‘Varalaru Mukkiyam’ OTT Release Date Announcement

தன் பிறந்தநாளில் டிஜிட்டல் தளத்திற்கு தமிழ் பெயர் வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தன் பிறந்தநாளில் டிஜிட்டல் தளத்திற்கு தமிழ் பெயர் வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இன்று ஜனவரி 6ல் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார்.

இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும்.

இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார்.

பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும்.
HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

https://youtu.be/OmizuGpm2sU

Ace music director @arrahman to launch a digital platform for independent musicians and artists on his birthday today. Called #Katraar, the platform will enable artists and musicians to list and monetize their creations.

@HBAR_foundation @MyQyuki

AR Rahman gave a Tamil name to the digital platform on his birthday

‘வால்டேர் வீரய்யா’: டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வால்டேர் வீரய்யா’: டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டிரைலர் சனிக்கிழமை (ஜனவரி 7) வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டிற்கான சரியான நேரம் இது என அறிவித்துள்ளனர்.

மெகா மாஸ் ஈவென்ட் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இது ஒரு பொது நிகழ்வாக இருக்கும் மற்றும் அதற்காக அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. நிகழ்வில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் இதயப்பூர்வமான பேச்சு மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு சமீபத்தில் யு/ஏ வழங்கப்பட்டது. சிரஞ்சீவி மற்றும் ரவி தேஜா இருவரும் அதன் ஹீரோக்கள்.

‘Waltair Veerayya’: Trailer release date announced!

More Articles
Follows