தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜூனியர் எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் ‘இரும்பன்’.
இதில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.
கீரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லெமூரியா மூவிஸ் சார்பாக இந்த படத்தை தமிழ் பாலா மற்றும் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கேகே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் முதலிலேயே பேசத் தொடங்கினார் சீமான். அவர் பேசியதாவது..
“நாயகன் ராமச்சந்திரன்.. நீங்கள் ஜூனியர் எம் ஜி ஆர் என்ற பெயரில் உங்கள் பயணத்தை ஆரம்பித்து உள்ளீர்கள். ஆனால் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
நடிகர் விஜய் ஆரம்பத்தில் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தற்போது சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்” என்று சீமான் பேசினார்.
சீமானின் இந்த பேச்சு ரஜினி ரசிகர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Seeman speech about Rajini and Vijay in Irumban Audio launch