விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ehumin Movie Shoot Starts with Poojaவையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’.

‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே ஆரம்பமானது.

இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான ‘உரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek and Devayani teams up for Ehumin movie

 

 

 

 

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbu chezhiyan and H Rajaசசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு காரணம் தயாரிப்பாளர் அன்புசெழியன்தான் என கடிதம் எழுதிவிட்டு இறந்துவிட்டார்.

இதனால் ஒரு சிலர் அசோக்குமாருக்கு ஆதரவாகவும் மற்ற சிலர் அன்பு செழியன் நல்லவர் எனவும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக.வை சேர்ந்த எச். ராஜா தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

H Raja‏Verified account @HRajaBJP 4m4 minutes ago
பொதுவாக கொலை மற்றும் தற்கொலை வழக்கில் இறந்தவரின் கடிதம் மற்றும் மரண வாக்குமூலம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும். எனவே கடலூர் ஆனந்தின் மரண வாக்குமூலம் மற்றும் அசோக்குமார் கடிதம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும்.நிழல் உலக தாதா அன்புச் செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விஷால்..?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalஇந்த டிசம்பர் மாதம் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் விஷால் தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது.

அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இதுபோன்ற செய்திகள் வருகின்றன.

தமன்னாவை காக்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திய சிம்பு

தமன்னாவை காக்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Tamannahமைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது சிம்பு பல பிரச்சினைகளை கொடுத்து வந்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சொன்ன நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார் சிம்பு. இவரை நம்பி தமன்னா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். அவருடன் மேக்அப் மேன் உள்ளிட்ட உதவியாளர் 5,6 பேர் வருவார்கள்.

ஒருமுறை 2 நாட்கள் காத்திருந்து சென்றுவிட்டார் சிம்பு.

பின்பு மீண்டும் தமன்னாவிடம் கெஞ்சி, மற்றொரு நாள் கால்ஷீட் வாங்கினேன். அப்போதும் சிம்பு வரவில்லை. எனவே தமன்னா காத்து கிடந்தார்.

இதனால் எனக்கு ரூ. 6 லட்சங்கள் வரை வீணானது.” என்று தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

நான் திருந்திட்டேன்.. சிம்புவின் வார்த்தையை கேட்டு ஏமாந்த தயாரிப்பாளர்

நான் திருந்திட்டேன்.. சிம்புவின் வார்த்தையை கேட்டு ஏமாந்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer michael rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

எனவே தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு சிம்பு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மைக்கேல்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்…

சிம்பு வைத்து படம் எடுத்த பிறகுதான் அவரை முழுமையாக தெரிந்துக் கொண்டேன்.

சொன்ன நேரத்திற்கு படத்திற்கு வரமாட்டார். என் மகள் திருமணம் முடிந்த மறுநாள் விருந்து வைத்திருந்தேன். அப்போது மாப்பிள்ளையை கூட கவனிக்காமல் சிம்பு வீட்டிலேயே இருந்தேன்.

சூட்டிங் அழைத்தாலும் அவர் வருவதில்லை. பிறகு பார்க்கலாம் என்பார்.

அவர் படம் என்றால் பைனான்சியர் கூட பணம் தரமறுக்கிறார்.

நான் திருந்திவிட்டேன். என்னை நம்பி என்னிடம் வேலை பார்க்கும் சில குடும்பங்கள் உள்ளது.

அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை. என்னை வைத்து படம் எடுங்கள். நான் ஒத்துழைக்கிறேன் என கூறினார்.

ஆனால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை. இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். என தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்றால் பல மணிநேரம் காக்க வைக்கிறார். அவரால் எனக்கு ரூ 18 கோடி நஷ்டம். கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், அவர் திருந்துவதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கேவலமான படத்தை எடுத்தேன்.. ஆதிக்ரவிச்சந்திரன் ஓபன் டாக்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கேவலமான படத்தை எடுத்தேன்.. ஆதிக்ரவிச்சந்திரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu with adhik ravichandranஜிவி. பிரகாஷ் நடிப்பில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்தில் காமெடி என்ற பெயரில் காம நெடி அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் பிட்டு படம் ரேஞ்சுக்கு பாடல்களும் இருந்தன.

ஆனால் படம் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.

எனவே இதனையடுத்து சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக்ரவி.

ஆனால் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்து விட்டது.

இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தயாரிப்பாளரும் இயக்குனரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சிம்பு மீது சரமாரி புகார்களை கூறினார் தயாரிப்பாளர்.

இயக்குனர் பேசும்போது… முதல் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஒரு கேவலமான படம்தான். ஆனால் நன்றாக ஓடியது.

2வது படத்தை ஒரு கமர்ஷியலாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் சிம்பு செய்த பிரச்சினைகளால் படம் வேறுமாதிரி ஆகிவிட்டது.

அவர்தான் AAA படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வற்புறுத்தி இப்படி செய்துவிட்டார்” என தெரிவித்தார்.

More Articles
Follows