நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்… சிம்பு அதிரடி

simbu at ezhumin trailer launchவிவேக் நாயகனாக நடித்துள்ள எழுமின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துக் கொண்டார்.

அப்போது சிம்பு பேசியதாவது….

”எழுமின் படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க.

நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா.. அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனு தான் பாக்குறாங்க.

பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ.. அந்த திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை, போட்டிலாம் வேணாம்.

உங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப்பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள் தான்.” என்று பேசினார் சிம்பு.

நடிகர் சிம்புக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும்,…
...Read More
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத்…
...Read More
விவேக் மற்றும் தேவயாணி இணைந்து நடித்துள்ள…
...Read More

Latest Post