*எழுமின்* தந்த ஏற்றம்; மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுக்க முதல்வர் உத்தரவு

*எழுமின்* தந்த ஏற்றம்; மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுக்க முதல்வர் உத்தரவு

Ezhumin movie impact Martial arts should be lesson in Govt Schoolsபள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி.

இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக் கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது,

தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ’எழுமின்’ படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது, எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார், எழுமின் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி.

Ezhumin movie impact Martial arts should be lesson in Govt Schools

ezhumin martial arts

சபரிமலை சந்நிதானத்தில் பெண்களை அனுமதிக்க சிவகுமார் வலியுறுத்தல்

சபரிமலை சந்நிதானத்தில் பெண்களை அனுமதிக்க சிவகுமார் வலியுறுத்தல்

All women should be allowed in Sabarimala Temple says Sivakumarகடந்த 60-70 வருடங்களுக்கு மேலாக சபரிமலையில் 10 முதல் 50 வரையில் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை.

ஆனால் அண்மையில் எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேரள அரசை கேட்டுக் கொண்டது.

ஆனால் இதற்கு சபரிமலை தேவசம் போர்ட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் சபரிமலை பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று 2 பெண்கள் சபரிமலை சந்நிதானத்திற்கு இன்று செல்ல முயன்ற போது, போராட்டக்காரர்கள் தடுத்தனர்.

இறுதியாக அவர்கள் பக்தர்கள் இல்லை என போலீசாரும் அவர்களை திருப்பி அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது…

“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது.

எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை.

தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது.

இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்” என சிவகுமார் கூறியுள்ளார்.

All women should be allowed in Sabarimala Temple says Sivakumar

sabarimala ayyappan

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்கள் தொடர் தோல்வி.; ரஜினி உஷார்!

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்கள் தொடர் தோல்வி.; ரஜினி உஷார்!

Failure of Sequel movies in Tamil Cinemaகடந்த சில வருடங்களாகவே வெற்றிப் பெற்ற படங்களின் 2ஆம் பாகத்தை எடுப்பதை தமிழ் சினிமா உலகினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

முனி வெற்றிப் பெற்றதை அடுத்து அதே கதைக்களத்தில் காஞ்சனா 1 வெளியானது. இதனையடுத்து காஞ்சனா 2 படமும் வெளியானது.

ஆனால் முதல் பாகத்தை போன்று மற்ற படங்கள் இல்லை என கூறப்பட்டது.

அதுபோல் சிங்கம் 1 வெற்றிப் பெற்றதை அடுத்து சிங்கம் 2, சிங்கம் 3 படங்கள் வெளியானது. 3ஆம் பாகம் எதிர்பார்த்த அளவு வெற்றிப் பெறவில்லை.

அதுபோல் தமிழ்படம் 1, தமிழ்ப்படம் 2 ஆகியவை வெளியானது. இந்த படங்களாவது ஓரளவு பேசப்பட்டது.

ஆனால் டார்லிங்2, விஐபி2, மணல் கயிறு2, பில்லா2, ஜித்தன்2, கோ2, சென்னையில் ஒரு நாள்2 ஆகியவை தோல்வியை தழுவியது.

அதுபோல் அண்மையில் வெளியான விஸ்வரூபம்2, சாமி2 மற்றும் சண்டக்கோழி2 படங்களும் முதல் பாகத்தை போல ஹிட் அடிக்கவில்லை.

முதல் பார்ட்டில் தந்த சுவாரஸ்யத்தை இயக்குனர்கள் 2ஆம் பாகத்தில் தரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் நடிகர், நடிகைகளின் தேர்விலும், திரைக்கதை அமைப்பதிலும் இயக்குனர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மாபெரும் சூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் 2ஆம் பாகத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு பாட்ஷா. அந்த படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பது சரியல்ல என ரஜினி உஷாராக தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

அதுபோல் மற்ற டைரக்டர்களும் உஷாராக இருப்பார்கள் என நம்புவோம்.

விரைவில் எந்திரன் படத்தின் 2ஆம் பாகம் 2.0 ரிலீஸாகவுள்ளது.

அதுபோல் இந்தியன்2, தேவர் மகன்2 ஆகிய படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.

அதுபோல் உள்ளே வெளியே 2 படத்தை பார்த்திபன் இயக்கவுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பாகுபலி படமானது ஒரே கதையை 2 பாகங்களாக எடுத்திருந்தார் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.

Failure of Sequel movies in Tamil Cinema

தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் *வடசென்னை* வசூல் எவ்வளவு.?

தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் *வடசென்னை* வசூல் எவ்வளவு.?

Dhanushs VadaChennai Box office collection reportபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷை வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் வடசென்னை.

நேற்று வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

மேலும், இது ஏ சான்றிதழை பெற்றுள்ளதால் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 7.2 கோடியை வசூலித்துள்ளதாம். தனுஷ் படங்களிலேயே இது மிக பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது.

Dhanushs VadaChennai Box office collection report

சஞ்சய் ராமசாமி பாணியில் விஜய்க்கு பெயர் வைத்த ஏஆர். முருகதாஸ்

சஞ்சய் ராமசாமி பாணியில் விஜய்க்கு பெயர் வைத்த ஏஆர். முருகதாஸ்

Sarkar movie one line story and Vijay Character name revealsஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள படம் சர்கார்.

விஜய் நடித்துள்ள இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரியும் அதில் விஜய்யின் கேரக்டர் பெயர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிரபல கூகுள் இணையத்தளத்தின் CEO ஆக தமிழரான சுந்தர் பிச்சை இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு கேரக்டரை விஜய் சர்காரில் செய்திருக்கிறார்.

இதில் விஜய்யின் பெயர் சுந்தர் ராமசாமி என்பதாகும்.

அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வரும் விஜய், இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த சிஸ்டங்களை மாற்றியமைக்கிறார்.

மேலும் எப்போதும் அரசியல்வாதிகளையே குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நாமும் திருந்த வேண்டும் என்கிறாராம்.

ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தினால் நாடு சுத்தமாகும் என்று விஜய் தமிழகத்தை சரி செய்வதாக படத்தின் கதையுள்ளதாம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் சூர்யாவின் பெயர் சஞ்சய் ராமசாமி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sarkar movie one line story and Vijay Character name reveals

தீபாவளிக்கு *சர்கார்* உடன் மோத காத்திருக்கும் படங்கள்

தீபாவளிக்கு *சர்கார்* உடன் மோத காத்திருக்கும் படங்கள்

List of movies plans to clash with Sarkar on 2018 Diwaliஇந்தாண்டு 2018 தீபாவளிக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் அதிக தியேட்டர்களில் வெளியிட உள்ளனர்.

இருந்தபோதிலும் அதே நாளில் மற்ற படங்களும் சர்கார் உடன் மோத தயாராகி வருகின்றன.

விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன், தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி ஆகியவை வெளியாகும் எனத் தெரிகிறது.

இத்துடன் சசிகுமாரின் நாடோடிகள் 2 படமும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மொத்தம் 5 படங்கள் தீபாவளி ரேஸில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளி நெருங்க நெருங்க சில படங்கள் இதிலிருந்து விலக வாய்ப்பு இருக்கலாம்.

தனுஷின் வடசென்னை படம் நேற்றுதான் வெளியானது. எனபே 3 வார இடைவெளியில் அடுத்த (எனை நோக்கி பாயும் தோட்டா) படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்று நம்பலாம்.

List of movies plans to clash with Sarkar on 2018 Diwali

More Articles
Follows