மேரேஜ் இப்போ இல்ல.. ஒன்லி டேட்டிங்.. விஷ்ணு லவ்வர் ஓபன் டாக்

மேரேஜ் இப்போ இல்ல.. ஒன்லி டேட்டிங்.. விஷ்ணு லவ்வர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu vishal loverரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை காதலித்து 2018ல் திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணுவிஷால்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் கருத்து வேறுபாட்டினால் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இவர்களை நிறைய படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை..

இந்த நிலையில் ஜுவாலா கட்டா தன் சமீபத்திய பேட்டியில்…

நாங்கள் டேட்டிங் செய்து வருவது உண்மைதான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம். ஆனால் இப்போது இல்லை.” என தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி

பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gayathrie shankarசிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது பிரபுதேவா நடிக்கும் பகீரா என்ற படத்தை இயக்குகிறார்.

கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

பகீரா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

ஒருவர் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர். தற்போது மற்றொரு நாயகியாக காயத்ரி நடிக்கிறாராம்.

விஜய் சேதுபதி நடித்த நடுவுல சொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

3வது ஹீரோயின் யார்? என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.

பால் & காய்கறிகளை இலவசமாக வழங்கும் தளபதி விஜய் ரசிகர்கள்

பால் & காய்கறிகளை இலவசமாக வழங்கும் தளபதி விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans helping poor those who suffer in Corona lock downகொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 9 நாட்களாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களை வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல கூட மக்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து வடசென்னை விஜய் ரசிகர்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பால் பாக்கெட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.

பால் இல்லாமல் கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் உதவி பேருதவியாக உள்ளது என அங்குள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Vijay fans helping poor those who suffer in Corona lock down

ஓவர் அலைச்சல்… இப்ப கொரோனாவால் அவஸ்தை படும் அஜித் பட நடிகை

ஓவர் அலைச்சல்… இப்ப கொரோனாவால் அவஸ்தை படும் அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith movie NKP actress quarantine in her houseவிக்ரம் வேதம் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அதன்பின்னர் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கொரானா நோய் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வருவதற்கு முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் பறந்து சென்று வந்தாராம்.

இந்த நிலையில் இவர் பயணித்து வந்த விமானத்தில் பயணித்த மற்றொரு பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாம்.

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனால் இவர் தனி அறையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம்.

Ajith movie NKP actress quarantine in her house

கொரோனாவுக்கு சிவகார்த்திகேயன் பன்ச் டயலாக்கை சொன்ன கலெக்டர்

கொரோனாவுக்கு சிவகார்த்திகேயன் பன்ச் டயலாக்கை சொன்ன கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

District Collector said Sivakarthikeyan punch dialogue for Coronoகொரோனா வைரஸ் தொடர்பான மீம்ஸ், வீடியோக்கள் தினம் தினம் இணையத்தில் உலா வருகின்றன.

சில மீம்ஸ்கள் உண்மைக்கு புறம்பாக வருகின்றன. சிலர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் சினிமா சம்பந்தமான காட்சிகளும் டயலாக்குகளுமே பொருந்தி வருகின்றன.

பெரும்பாலானா வீடியோ மற்றும் படங்களில் வடிவேலுவே வருகிறார்.

இந்த நிலையில் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் சொன்ன டயலாக்கை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய் கார்த்திகேயன் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த டயலாக்கை எழுதியவர் இயக்குனர் பொன்ராம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அந்த டயலாக் தான் இது…

Thank you brother @Siva_Kartikeyan
“நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு “ #SocialDistancing

District Collector said Sivakarthikeyan punch dialogue for Corono

https://twitter.com/Vijaykarthikeyn/status/1245657044067049473

ஒரு அறிக்கை கூட இல்லையே.. தல-தளபதியை நம்பி நொந்த ரசிகர்கள்

ஒரு அறிக்கை கூட இல்லையே.. தல-தளபதியை நம்பி நொந்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fans disappointment with Vijay and Ajith in Corona issue ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை நிலைக்குலைய வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

உலகெங்கிலும் பல மனிதர்கள் இதன் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியா முழுவதும் (கடந்த 10 நாட்களாக) ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் நிறைய பேர் அதனை அலட்சியப்படுத்தி வெளியே சுற்றி வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன.

நிவாரண நிதிக்கு தாராளமாக பணத்தை வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கு மற்றும் வட இந்திய நடிகர்கள் கோடிகளை கொட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் நடிகர்கள் தங்கள் துறை சார்ந்த பெப்சிக்கு வழங்கி வருகின்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை சிவகார்த்திகேயன் மட்டுமே 25 லட்சம் கொடுத்துள்ளார்.

ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதுவரை இவர்கள் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கவில்லை.

ஆனால் தமிழத்தின் தல தளபதி என்றழைக்கப்படும் அஜித் மற்றும் விஜய் இதுவரை 1 ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை. சரி அவர்களின் விருப்பமாக கூட இருக்கலாம்.

ஆனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என ஒரு அறிக்கை கூடவா வெளியிட கூடாது? என சம்பந்தபட்ட நடிகர்களின் ரசிகர்களே நொந்து போய் உள்ளனர்.

ம்…ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Fans disappointment with Vijay and Ajith in Corona issue

More Articles
Follows