விஷ்ணு நடிக்கும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஷால்!

விஷ்ணு நடிக்கும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஷால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maaveeran kittu first lookவெண்ணிலா கபடி குழு, ஜீவா படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஷ்ணு.

இதில் ஜீவா படத்தை தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவுடன் ஜோடி சேர்கிறார் ஸ்ரீதிவ்யா.

முக்கிய வேடத்தில் பார்த்திபன் மற்றும் சூரி நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

இதுநாள் வரை இப்படம் தொடர்பாக செய்திகள் வந்த நிலையில் சில நொடிகளுக்கு முன் இப்படத்தின் பெயரை அறிவித்துள்ளனர்.

மாவீரன் கிட்டு என பெயரிட்டப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டார்.

ஏ.ஆர். சூர்யா ஒளிப்பதிவு செய்ய, மு. காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்கிறார்.

சந்திரசாமி, தாய் சரவணன் மற்றும் ராஜீவன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரஜினிக்கு அடுத்து தனுஷ், சித்தார்த், சிவகார்த்திகேயன்..!

ரஜினிக்கு அடுத்து தனுஷ், சித்தார்த், சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanushதமிழ் சினிமாவின் எவர் கிரீன் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களாலும், நட்சத்திரங்களாலும் பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு தங்கள் பக்கத்திற்கு பாலோயர்களை சேர்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் இதுவரை 29 ட்வீட்டுகளே பதிவிட்டுள்ளார். ஆனாலும் இவரை 3.03 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

தற்போது இவருக்கு அடுத்த இடத்தை தனுஷ் பிடித்துள்ளார். இவர் 5,500 அதிகமான ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார்.

தற்போது இவர் 3 மில்லியன் பாலோயர்களை கடந்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள நட்சத்திரங்களை காணலாம்…

(இன்று ஜீலை 14, 2016) வரை உள்ள தகவல்கள் படி…

1. சித்தார்த் – 2.24 million
2. சிவகார்த்திகேயன் – 1.88 million
3. மாதவன் – 1.49 million
4. பிரகாஷ்ராஜ் – 1.33 million
5. சிம்பு – 1.29 million
6. ஜி.வி.பிரகாஷ் – 1.28 million
7. ஜெயம் ரவி – 1.16 million
8. சூர்யா – 1.03 million

சமூகத்திற்கு தேவையான பேய்ப்படம்… சோனியா அகர்வாலின் ‘சாயா’

சமூகத்திற்கு தேவையான பேய்ப்படம்… சோனியா அகர்வாலின் ‘சாயா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saya photosஅறிமுக நாயகன் சந்தோஷ் நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடிக்கும் படம் சாயா.

இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

இவர்களுடன் ஆர் சுந்தர்ராஜன், Y.G. மகேந்திரன், ‘பாய்ஸ்’ ராஜன், பயில்வான் ரங்கநாதன், பாலாசிங், கராத்தே ராஜா, கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் எஸ். பார்த்திபன்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“சாயா என்றால் சக்தி நிறைந்த பொருள். அந்த சக்திக்கும் ஆத்ம சக்திக்கும் தொடர்பு இருப்பதால் படத்திற்கு சாயா என பெயரிட்டுள்ளோம்.

பேய் படம் என்றாலே ஆவிகளைப் பற்றி காட்டுகின்றனர். ஆனால் இப்படம் புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும். ஆத்மாக்களின் நல்ல நோக்கம் இந்த சமுதாயத்திற்கும் மாணவர்களுக்குமான தேவையை நிறைவேற்றும்” என்றார்.

எலெக்ஷனை போல் கபாலி கலெக்ஷனுக்கும் கருத்து கணிப்பு..!

எலெக்ஷனை போல் கபாலி கலெக்ஷனுக்கும் கருத்து கணிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabaliஎந்த எலெக்சன் வந்தாலும் அதற்கு முன்பு ஒரு கருத்து கணிப்பு உலா வரும்.

ஆட்சியை பிடிப்பது யார்? என்று மீடியாக்களில் பரவலாக பேசப்படும்.

அதுபோல் முதன்முறையாக ரஜினியின் கபாலி திரைப்படத்திற்கும் கலெக்ஷனை கணித்து உள்ளனர் திரையுலக வல்லுனர்கள்.

உலகமெங்கும் நான்கு மொழிகளில் இப்படம் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

எனவே இப்படத்தின் முதல் நாள் வசூலை கணித்துள்ள வல்லுனர்கள் கிட்டதட்ட ரூ 50 கோடியை தாண்டும் என தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரம் காத்திருந்தால் இதற்கான விடை கிடைத்துவிடப் போகிறது. காத்திருப்போம்.

மீண்டும் அஜித்துக்கு வில்லனாக பவர்புல் ஹீரோ..!

மீண்டும் அஜித்துக்கு வில்லனாக பவர்புல் ஹீரோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor ajith kumarசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் நடைபெறவுள்ளது.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, கருணாகரன், தம்பி ராமையா நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகை ஸ்னேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காகதான் சில நாட்களுக்கு முன்பு பிரசன்னாவின் சிக்ஸ்பேக் போட்டோக்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்திலும் ஹீரோவாக இருந்த அருண்விஜய் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்பத்திரியில் கமல் அனுமதி.. தள்ளிப்போகும் சபாஷ் நாயுடு..!

ஆஸ்பத்திரியில் கமல் அனுமதி.. தள்ளிப்போகும் சபாஷ் நாயுடு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhaasan stillsநடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி வரும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து விழுந்துள்ளார்.

அப்போது அவருக்கு முதுகு தண்டுவடத்திலும் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விரைவில் குணமாகிவிடுவார் என்றும் அவருக்கு சில வாரங்கள் ஓய்வு தேவை எனவும் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்ததையொட்டி லண்டனில் நடைபெறுகிற இந்திய திரைப்படவிழாவில் கமல் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவந்துள்ளது.

அங்கு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் நாயுடு படத்தின் 42 நிமிட காட்சிகள் தயாராகி இருக்கிறது.

விரைவில் ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

More Articles
Follows