தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது மனைவி ரஜினியை நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் விவாகரத்து செய்தார். இதை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க நாம் நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.
இந்நிலையில், ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலை அவர் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவியது. (நம் இணைய தளத்தில் அதுபோன்ற செய்திகள் பதிவிடவில்லை)
இதை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்து, அவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளதாவது… என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி, பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
நாங்களும் மனிதர்கள் தான், குடும்பத்துடன் வசிக்கிறோம். எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இயக்குனர் விஜய்யை அமலாபால் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
VISHNUU VISHAL – VVVerified account @vishnuuvishal
VISHNUU VISHAL – VV Retweeted
Wat a stupid news..plz b responsible ..we r humans too n v hav lives n family..just dnt write anything for d sake of it..