கமலை சந்தித்தது ஏன்? ரஜினியை சந்திப்பீர்களா..? விஷால் விளக்கம்

கமலை சந்தித்தது ஏன்? ரஜினியை சந்திப்பீர்களா..? விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and kamal haasanவேலை நிறுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் விஷால் அவர்கள் கமல்‘ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது…

சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல்ஹாசன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.

இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு.

சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை.

எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த வி‌ஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன்.

அவரது ஆதரவு வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. இதுபோன்ற நேரங்களில் அவருடைய ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.

இதுவரை ரஜினி அவர்களை சந்திக்கவில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.” இவ்வாறு விஷால் கூறினார்.

மிஷ்கின்-சாந்தனு-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் ஆஸ்கர் நாயகன்..?

மிஷ்கின்-சாந்தனு-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் ஆஸ்கர் நாயகன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin and shanthanuதுப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது சூப்பர் டீலக்ஸ், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சாந்தனுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகிகளாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சூட்டிங் மே மாதம் துவங்கவுள்ளது.

காலா ரிலீசுக்காக காத்திருக்கும் விஸ்வரூபம்-2

காலா ரிலீசுக்காக காத்திருக்கும் விஸ்வரூபம்-2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala and viswaroopam 2கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ படம் மாபெரும் வெற்றியடைய ‘விஸ்வரூபம்-2’ படத்தை உருவாக்கினார் கமல்ஹாசன்.

இதில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சென்சாரில் விஸ்வரூபம்-2 படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனை முன்னட்டு அடுத்த ஏப்ரல் மாதம் இதன் பாடல்கள் வெளியிட உள்ளனர்.

ரஜினி நடித்த ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. எனவே அந்த படத்துக்கு பிறகு விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக்கால் ஒருவேளை காலா தாமதமானால் விஸ்வரூபம் 2 படமும் தள்ளிப் போகும் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ‌ஷங்கர் டைரக்‌ஷனில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவுள்ளார் உலகநாயகன்.

கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் பட ரிலீஸ் அப்டேட்ஸ்

கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் பட ரிலீஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadigaiyar thilagamநடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார் நாக் அஷ்வின்.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்து வருகிறார்கள்.

அண்மையில் இப்பட கேரக்டர் போஸ்டர் வெளியானது. அதை பார்த்த எல்லோரும் சாவித்ரி போல் கீர்த்தி இருப்பதாக கூறியிருந்தனர்.

இவர்களோடு சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வருகிற மே 9ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சந்தானத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணையும் ராஜேஷ்

சந்தானத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணையும் ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam and rajeshகடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை எம்.ராஜேஷ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுநாள் வரை சந்தானத்தை ஒரு காமெடியன் ஆகத்தான் ராஜேஷ் இயக்கியிருந்தார்.

ஆனால் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளார்.

சிவா மனசுல சக்தி, பாஸ்கர் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் அமோக வெற்றியால் சந்தானம், ராஜேஷின் இந்த புதிய கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் எம்.ராஜேஷ்.

காமெடி கதைக்களத்தில் ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகவுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

தியேட்டர்கள் மூடல்; சூட்டிங் நிறுத்தம்; 410 கோடி ரூபாய் முடக்கம்

தியேட்டர்கள் மூடல்; சூட்டிங் நிறுத்தம்; 410 கோடி ரூபாய் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 daysசினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டது.

தற்போது மூன்றாவது வாரமாக எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.

இதுவரை 20 படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.100 கோடி வரை முடங்கியுள்ளது.

மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் துவக்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மார்ச் 16 முதல் கிட்டதட்ட 42 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் ரூ.410 கோடி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிடவில்லை.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 days

More Articles
Follows