தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எல்லோரும் காத்திருந்தது போல இறுதியாக நடிகர் விஜய் மேடை ஏறி பேசினார்.
விஜய் பேசியதில் ஹைலைட்டான பேச்சு துளிகள் இதோ…
என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகபெருமக்களுக்கு வணக்கம்..
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.. என்னை செதுக்கிய உளிகள் தான் நண்பா நண்பீஸ் என்றார்.
இயக்குனர் வம்சி சொல்லும் கதைகளை நடிகர் நடிகைகள் உடனே ஓகே சொல்லி விடுவார்கள்.. ஆனால் எங்கள் நடிப்பை அவர் உடனே ஓகே சொல்லவே மாட்டார். மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டு பர்ஃபெக்ட்டாக வரும் வரை நடிக்க வைப்பார். என்றார்.
என்னுடைய சினிமா கேரியரில் வாரிசு முக்கியமான படமாக இருக்கும். எனவே இயக்குனர் வம்சிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்” என்றார்.
அன்புதான் எப்போதும் ஜெயிக்கும்.. தேவையில்லாத வெறுப்பு தான் நம்மை வளர்க்கும்’ என்றார்
Soul of Varisu பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு நண்பா நம்பி எல்லாம் என்னுடைய குடும்பம் தான். வாரிசு படத்தை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.
பிரகாஷ்ராஜை பற்றி குறிப்பிடும்போது செல்லம் முத்துப்பாண்டி என்றார்
நான் ஒவ்வொரு முறையும் பேசும்போது ரத்த தானம் குறித்து பேச நினைப்பேன். ஏனென்றால் ரத்தத்தில் மட்டும்தான் ஜாதி மதம் என்ற எதையுமே யாரும் பார்ப்பது கிடையாது. அதனால் என் ரசிகர்களும் ரத்தம் தானம் செய்து வருகின்றனர்.
நடிகர் ஷாம் குறித்து பேசும்போது.. குஷி படம் முதலே எனக்கு நல்ல நண்பராக இருந்து வருகிறார். அவர் எப்போதும் படக்குழுவினரை எனர்ஜியாக வைத்திருப்பார் என்றார்.
யோகி பாபு பற்றி பேசும்போது அவரின் வளர்ச்சியை கண்டு தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என பாராட்டினார்.
இந்த ‘வாரிசு’ படம் உறவு முறையை பற்றி சொல்லும் கதை என்றார்.
தயாரிப்பாளர் தில்ராஜ் குறித்து பேசும்போது.. ‘வாரிசு’ என்ற குழந்தை நன்றாக வந்துள்ளது. வாரிசு படத்தின் பார்ட் 2 எப்போது வரும்? என தயாரிப்பாளரிடம் கேட்டார்.
ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் ரசிகர்களை பார்த்து முத்தம் கொடுத்தார். அதன் பின்னர் தொகுப்பாளர் முத்தம் கேட்டபோது அதை கிரிக்கெட் பந்து போடுவது போல கொடுத்தார்.. பின்னர் முத்தம் கொடுப்பதற்கு என்று ஒரு ஸ்டைல்.. இனிமேல் இதுதான்.. என்றார். அப்போது ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பிரச்சனைகளை எப்படி சந்தித்து வருகிறீர்கள்? என்ற தொகுப்பாளர்கள் கேட்டபோது ‘அது பழகிட்டு..’ என்றார்.
இறுதியாக தனது உதவியாளர் ஜெகதீஷை அழைத்து.. ‘என் நெஞ்சில் குடியிருக்கும்..’ என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் செல்பி வீடியோ பதிவிட சொல்லி இருந்தார். அதை விஜய் ட்விட்டர் பக்கத்தில் பதிவானது. பதிவான நொடி முதலில் பல லைக்ஸ் குவித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Vijay speech highlights at Varisu Audio Launch
வாரிசு இசை வெளியிட்டு விழா மேடையில் ரசிகர்களுடன் #Selfie வீடியோ எடுத்து #EnNenjilKudiyirukkum என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டார் நடிகர் விஜய் #VarisuAudioLaunch








