பதுங்கி பாயனும் தல பட சிங்கிள் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

பதுங்கி பாயனும் தல பட சிங்கிள் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi stillsMEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல”.

மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி, சிங்கம்புலி, M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார்.

இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது. இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்க எம்ஜிஆர் நடிக்க ஆரம்பித்தார்

முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்க எம்ஜிஆர் நடிக்க ஆரம்பித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR movie pooja picsமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார்.

‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ், இந்தப் படத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

எம்.ஜி.ஆராக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிளாக் பாண்டி, சிங்கம்புலி, முத்துராமன், செளந்தர ராஜா ஆகியோர் நடிக்கின்றனர்.

வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரிர் கேரக்டரில் நடிக்க உருவ ஒற்றுமை கொண்ட நடிகைகளைத் தேடி வருகின்றனர்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் ஜூலி சினிமாவில் நாயகியாக நடிக்கிறார்

பிக்பாஸ் ஜூலி சினிமாவில் நாயகியாக நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg boss fame Julie going to act in movieஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கு பெற்றார் ஜூலி.

இதனையடுத்து தற்போது கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் இயக்கியுள்ள ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இது ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பாபா பகுர்தீன் இயக்கள்ள ஒரு திரைப்படத்தில் ஜூலி இரண்டாவது நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

Bigg boss fame Julie going to act in movie

தன் பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்

தன் பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஒரு சில மாதங்களுக்கு முன் தன் ரசிகர்களின் வேண்டுகோளுக்குகிணங்க ரசிகர்கள் சந்தித்தார் ரஜினிகாந்த்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது போர் வரும்போது சந்திப்போம். அதுவரை அவரவர் வேலையை பார்ப்போம் என 2.0 மற்றும் காலா படங்களில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

இனி ரசிகர்களை அடுத்த கட்டமாக எப்போது சந்திப்பார் ரஜினி? என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இவரின் 67-ஆவது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் ரசிகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில் தன் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பினராயி விஜயன்-கெஜ்ரிவாலை அடுத்து மம்தாவை சந்தித்தார் கமல்

பினராயி விஜயன்-கெஜ்ரிவாலை அடுத்து மம்தாவை சந்தித்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasan and mamta banerjeeதிரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்த கமல், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

அண்மையில் மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தி, விரைவில் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்தார்.

இதனிடையில் இந்தியாவில் பல முக்கிய மாநிலங்களின் முதல்வர்கள் சந்தித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சந்தித்து அரசியல் கற்க வந்தேன் என கூறியிருந்தார்.

அதன்பின்னர் டெல்லி முதல்வர் கமல் வீட்டுக்கே வந்து அவரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க கமல்ஹாசன் விமானம் மூலம் இன்று காலை கொல்கத்தா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விரைவில் இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துவருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவரை கமல் சந்திப்பது தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விளம்பரத்தில் நடித்து கல்விக்காக 50 லட்சம் உதவிய விஜய்சேதுபதி

விளம்பரத்தில் நடித்து கல்விக்காக 50 லட்சம் உதவிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIJAY SETHUPATHIசத்தமில்லாமல் உதவிகள் செய்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த சில நாட்களாக விஜய்சேதுபதி தோன்றும் ஒரு விளம்பரம் டிவிக்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

அது அணில் சேமியா நிறுவனத்தின் ஒரு விளம்பரம் ஆகும்.

தற்போது அதில் பெற்ற சம்பளத்தின் ஒரு பகுதியை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்ச ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய இருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த நிதியுதவியை தமிழக அரசிடம் வழங்கி, அவர்கள் மூலமாக உதவிசெய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

மேலும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த அனிதாவின் நினைவாக இந்த நிதியுதவியை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vijay sethupathi donates rs 50 lakhs to TN Govt schools

More Articles
Follows