பதுங்கி பாயனும் தல பட டீசரை வெளியிட்டார் பிரேம்ஜி அமரன்

பதுங்கி பாயனும் தல பட டீசரை வெளியிட்டார் பிரேம்ஜி அமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Premji launch Pathungi Paayanum Thala movie teaserMEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல “.

இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின் இயக்கத்தில் உருவான பதுங்கி பாயனும் தல படத்தின் டீஸரை – 13.01.2018 இன்று மாலை 5 மணிக்கு பார்ட்டி படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் வெளியிட்டார்.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தயாரிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் ராகுல் தாத்தா, சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி நடித்துள்ளனர் காமெடி நன்றாக வந்துள்ளது.

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பாடல்கள் அமைந்துள்ளது.

Actor Premji launch Pathungi Paayanum Thala movie teaser

pathungi paayanum thala winsun

 

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் இணைந்தார் உத்தமி ஜூலி

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் இணைந்தார் உத்தமி ஜூலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public Star Durai Sudhakar and Julie romance in Uthamiதமிழக இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தின் பிரபலமானவர் ஜூலி.

இதனையடுத்து ஓடி விளையாடு பாப்பா என்ற டிவி நிகழ்ச்சியை தனியார் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனையடுத்து நடிகர் விமல் தயாரித்துள்ள மன்னர் வகையறா படம் மூலம் கோலிவுட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் உத்தமி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

உத்தமி படத்தில் ஜூலியின் கேரக்டர் பெயர் ஜூலியானா. ஆம். அவரது நிஜ பெயரில்தான் நடிக்கிறாராம்.

Public Star Durai Sudhakar and Julie romance in Uthami

மணிரத்னம்-சிம்பு இணையும் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர்

மணிரத்னம்-சிம்பு இணையும் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mani ratnam and simbu‘காற்று வெளியிடை’ என்ற தோல்வி படத்திற்கு பிறகு மல்ட்டி ஸ்டாரர் படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம்.

இதில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

தன் சொந்த நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம்.

படத்தில் நடிப்பவர்களுக்கு சில பயிற்சிகளையும் கொடுத்து வருகிறாராம் டைரக்டர்.

விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த தகவல் வந்துள்ளது.

இதில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே ‘சேதுபதி’ படத்தில் போலீஸாக நடித்து பெரும் பாராட்டை பெற்றவர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் இவ்வளவு பிரச்சினை.?

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் இவ்வளவு பிரச்சினை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natchathira vizhaநடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, சில தினங்களுக்கு முன் மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்றன.

நட்சத்திரக் கலைவிழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், த்ரிஷா, நயன்தாரா போன்றவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

மேலும் சில மூத்த கலைஞர்களை அவமதிப்பு செய்துவிட்டதாக நடிகர் எஸ்வி. சேகர் குற்றம் சாட்டி நடிகர் சங்கத்தில் தன் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள், குளறுபடிகள் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

இந்த விழாவைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என கூறப்பட்டதாம்.

ஆனால் குறைந்த அளவே பார்வையாளர்கள் இருந்தனர் என தெரியவந்துள்ளது.

மேலும், மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதால் நட்சத்திர விழாவைப் புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் ‘மை ஈவண்ட்ஸ்’ என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் அலட்சிய போக்கால் பல குளறுபடியும் நடந்துள்ளதாம்.

அதாவது… மே காரணம் என்கிறார்கள் விஷால் தரப்பினர்.

பெரும்பாலும் பாஸ்போர்ட்டில் இருந்த நடிகர்களின் பெயரும், அவர்களின் உண்மையான பெயரும் பொருத்தமாக இருக்காது.

முன்கூட்டியே பாஸ்போர்ட் ஜெராக்ஸை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தரவில்லையாம். இதனால் ஒரு சில நடிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களுக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸில் டிக்கெட் போடப்பட்டதாம்.

மற்ற கலைஞர்களுக்கு எக்னாமிக் கிளாஸ்தானாம். ஆனாலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு பிசினஸ் கிளாஸ்தான் வேண்டும் என அடம்பிடித்தார்களாம்.

இவையில்லாமல் தங்கும் இடம், உணவு போன்றவற்றிலும் பிரச்சினையாம்.

இந்த விழாவை ஏற்பாடு செய்த நடிகர் சங்க நிர்வாகிகள் முன்கூட்டியே மலேசியா சென்று ஏற்பாடுகளை கவனித்திருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்றனர்.

அநாகரீகமாக பேசும் எச்.ராஜாவே..; வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா!

அநாகரீகமாக பேசும் எச்.ராஜாவே..; வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathi Rajaகவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாளைப் பற்றித் தவறாக குறிப்பிட்டதாக சில தினங்களுக்கு பிரச்சினை எழுந்தது என்பதை பார்த்தோம்.

வைரமுத்து பாஜ கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா கடுமையான வார்த்தைகளால் பேசியிருந்தார்.

இதற்கு வைரமுத்து மன்னிப்பு தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் அவர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் போராடி வருகின்றனர்.

மேலும் சில இடங்களில் வைரமுத்துவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது…

“தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி எனத் தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்கு கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன் வைரமுத்து.

மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம், இல்லை மேற்கோள் காட்டலாம். அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடைதோறும் முழங்கி, அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை, எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது?

எச்.ராஜாவே… நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை, இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டாய்.

வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையில் இருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா?

எச்.ராஜாவே… திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்துகொள். கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை, அநாகரீகமாக பேசும் ராஜாவே… இப்படிப் பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே.

எளிய, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை, எப்படி உன்னால் பேச முடிகிறது? வைரமுத்துவின் படைப்புகளைப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறைய பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள்.

அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடமாய் வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும் முயற்சியையும் பார்த்து, எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படிப் பேசமுடியும்? உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப் போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது.

கவனமாகப் பேசுங்கள் ராஜாவே… உன்னைப் போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து போன்ற சில நல்ல அடையாளங்கள்தான் இருக்கின்றன.

எங்கள் வம்சாவழி, எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான். கால மாற்றமும், விழிப்புணர்வும்தான் எங்களை ஆயுதக் கலாச்சாரத்தில் இருந்து மாற்றி வைத்தது. கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை. எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை, எங்கள் தொப்புள்கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்திவிட்டாய்.

உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது, தமிழ் உணர்வுகளை சிதைத்தது. நீ தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை… மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே…

இப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு, உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள் பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

பெண் வேடமிட்டு பிப்ரவரியில் பொட்டு வைக்கும் பரத்

பெண் வேடமிட்டு பிப்ரவரியில் பொட்டு வைக்கும் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath in Pottuபெண் போல வேஷமிட்டு பரத் நடித்துள்ள படம் பொட்டு.

இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தம்பி ராமைய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வசனங்களை செந்தில் எழுத, இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாடல்களை விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் எழுத அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படமாக உருவாகியுள்ளதாம்.

தமிழிலும் தெலுங்கிலும் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர்.

தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows