விஜய்சேதுபதி தொடங்கிய வைத்த அமெரிக்காவின் மொபைல் ஆப் ரேடியோ

விஜய்சேதுபதி தொடங்கிய வைத்த அமெரிக்காவின் மொபைல் ஆப் ரேடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi launched Mobile App Universal Live Radio இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ.? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.

அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யுனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது.

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார்.

இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யுனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை நாள்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள்.’ என்று கூறினர்.

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல் உங்களுக்காக:

1.Rj Porco for Vanakam USA and Manadhin Neram
2. Rj Shobana for just Relax please and tea kada bench
3. Rj Sundar for Namaku Soru than Mukiyam and Konjam fun neraya paatu.
4. Rj Rishi for Oora Suthalam Vanga
5. Rj Sathish for Daily Diary with Legend Story.
6. Rj Tamiz for Cinewood and Political Corner.
7. Rj Thendral for Vetti Neayam and Political Corner
8. Rj Ramesh for Podu Thileley
9. Rj Anbarasi Voice over Artist

இதன் ஒரு அங்கமாக மாற மற்றும் எங்களை தொடர்புகொள்ள www.universalradio.live

Vijay Sethupathi launched Mobile App Universal Live Radio

BREAKING கமல் பட சூட்டிங்கில் விபத்து; 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்

BREAKING கமல் பட சூட்டிங்கில் விபத்து; 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர், அனிருத் இணைந்துள்ள படம் இந்தியன் 2.

இதில் கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கமலின் அரசியல் வருகை, ஆப்ரேசன் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சூட்டிங் தாமதமானது.

தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tamil Director Raj Kapoor Bio Data

இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் இன்றிரவு (புதன்கிழமை) நடைபெற்று வந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்துள்ளது.

பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் 3 பேர் தகவல்கள் கிடைத்துள்ளன. மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் இறந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர் 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இந்தியன் 2 படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 set workers died in Kamals Indian 2 shooting spot

‘இந்தியன் 2’ சூட்டிங்கையும் பாதித்த கொரோனா வைரஸ்

‘இந்தியன் 2’ சூட்டிங்கையும் பாதித்த கொரோனா வைரஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர், அனிருத் இணைந்துள்ள படம் இந்தியன் 2.

இதிலும் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார்.

85 வயது கேரக்டரில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சில கட்ட சூட்டிங்கை முடித்து விட்ட அடுத்தகட்டமாக படப்பிடிப்பை சீனாவில் நடத்த இருந்தனர்.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசனமான நிலையில் உள்ளது.

இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தியன் 2 சூட்டிங் வேறு நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலி நாட்டில் நடைபெறலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

ரீ-மிக்ஸ் பாடல்கள் எரிச்சல்… ஏ.ஆர். ரஹ்மான் ஓபன் டாக்

ரீ-மிக்ஸ் பாடல்கள் எரிச்சல்… ஏ.ஆர். ரஹ்மான் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR rahmanசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ மற்றும் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

இவரது அண்மை பேட்டியில் தன்னுடைய ரீமிக்ஸ் பாடல் குறித்து பேட்டியளித்துள்ளார்.

”கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை.

சிலவை மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தன.

அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து, “இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். ஆனால், இந்தப் பாடலை நான் வெறுக்கிறேன்.

இதை நான் ஆதரித்தால் மக்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ரீமிக்ஸ் ட்ரெண்ட் இப்போது முடிந்து விட்டது என்று கூறினேன்” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் பழைய பாடல்களான தொட்டால் பூ மலரும்…, மற்றும் பொன்மகள் வந்தாள்… ஆகிய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதன்பின்னர் பம்பாய் படத்திற்காக தான் கம்போஸ் செய்து பாடிய, அந்த அரபிக்கடலோரம்… என்ற பாடலை மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தான் இசையமைத்த, ஓகே கண்மணி… படத்திற்காக ரீ-மிக்ஸ் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ சூட்டிங்கில் அஜித் விபத்து; கிண்டல் செய்யும் விஜய் ரசிகர்கள்

‘வலிமை’ சூட்டிங்கில் அஜித் விபத்து; கிண்டல் செய்யும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithநேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி ‘வலிமை’ படத்தற்காக இணைந்துள்ளது.
வினோத் இயக்க அஜித் நடிக்க போனிகபூர் இந்த படத்த தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்கில் பைக் சேஸிங் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

அப்போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள், அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என GetWellSoonThala என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதனையும் விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

அவர்கள் ஐய்யோ அம்மா பைக் ரேஸ் என டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

இருந்தபோதிலும் அஜித் உடனே சூட்டிங்கில் கலந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

‘நெற்றிக்கண்’ ரீமேக் விவகாரம்; விசுவை விளாசிய கவிதாலயா

‘நெற்றிக்கண்’ ரீமேக் விவகாரம்; விசுவை விளாசிய கவிதாலயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Visuகிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் ரஜினி, சரிதா, மேனகா நடிப்பில் வெளியான படம் ‘நெற்றிக்கண்’.

இப்படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

அதற்குள் டைரக்டர் விசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்.

நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் எனவும் எச்சரித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம்.

‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை என கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும்.

விசு கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த விதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது.

இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும், விதி மீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

More Articles
Follows