விஜய் தம்பி விக்ராந்துக்கு கைகொடுக்கும் விஜய்சேதுபதி

விஜய் தம்பி விக்ராந்துக்கு கைகொடுக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu vishal and vikranthநடிகர் விஜய்யின் உறவினர் விக்ராந்த் என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான்.

இவர் நாயகனாக அறிமுகமானாலும் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

பாண்டியநாடு படத்தில் விஷாலுடன் இணைந்தார். கெத்து படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்தார்.

தற்போது, வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவரது சகோதரர் சஞ்சீவ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளராம். இதில் இவருடன் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதையை நண்பர்களுக்காக விஜய்சேதுபதி எழுதுகிறாராம்.

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி திரைக்கதை எழுதும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi agreed to pen the screenplay of Vikranths new film

விஜய்சேதுபதியை காப்பியடித்த சிவகார்த்திகேயன்; உங்க கிரியேட்டிவ் இவ்வளவுதானா..?

விஜய்சேதுபதியை காப்பியடித்த சிவகார்த்திகேயன்; உங்க கிரியேட்டிவ் இவ்வளவுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans Production team copied Super Deluxe dialoguesகனா படத்தை தொடர்ந்து தன் எஸ்.கே.புரடக்ஷன்ஸ் சார்பாக அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை பிளாக் ஷீப் யு-டியூப் சேனல் நபர்களுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில், சரவணன் மீனாட்சி புகழ் ரியோ நாயகனாக நடிக்க, இவருடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை ஆர்.ஜே. விக்னேஷ் எழுதியுள்ளார்.

அண்மையில் சூட்டிங்கை முடித்துக் கொண்ட இப்படக்குழு தற்போது டப்பிங் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் (நாம் முன்பே சொன்னப்படி) ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என டைட்டிலை அறிவித்துள்ளனர்.

இதற்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் புதுமையாக செய்வதாச நினைத்துக் கொண்டு அண்மையில் வெளியான விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட டிரைலரை காப்பியடித்துள்ளனர்.

அதில் நீண்ட வசனத்தை முதலில் மெதுவாக பின்னர் வேகமாக பேசுவார் விஜய்சேதுபதி. அதை அப்படியே காப்பியடித்து ஆர்ஜே விக்னேஷ் பேசியுள்ளார்.

என்னப்பா? உங்க கிரியேட்டிவிட்டு இதுதானா? என பலரும் கேட்கின்றனர்.

Sivakarthikeyans Production team copied Super Deluxe dialogues

ஜெனிவாவில் உரையாற்றிய கருணாஸ்

ஜெனிவாவில் உரையாற்றிய கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சட்ட மன்றத்தில் முன்னாள் மறைந்த முதலமச்சர் அம்மா ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக போடப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி ஜெனிவாவில் நடை பெற்ற 40 வது ஐ.நா கூட்ட தொடரில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்கள் உரையாற்றினார்.

இதில் , 24.10.2014 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடந்த கூடாது என்று அம்சங்கள் கொண்டு தீர்மானத்தை வலியுறுத்தி பேசினார், இந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பதிவு செய்தார்.

பன்னாட்டு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்திற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்க கூடாது.

இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்க வேண்டும் என்று இந்த அமர்வில் கலந்து கொண்டு வலியுறுத்தினார் ..

ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் விருது பெற போகும் 96 பட இயக்குனர்

தெலுங்கில் விருது பெற போகும் 96 பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 movie stillsஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான். அப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படம்.

தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகுமே இந்த விருதை மிகவும் உணர்வுப்பூர்வமான விசயமாக கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது.

அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான ‘பிரமே புஸ்தகம்’ என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாக காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்த படைப்பாளியின் கனவுக்கு மரியாதை செய்யும் விதமாக “கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது” என்னும் விழா 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் கொண்டாட வைத்த முதல்பட இயக்குநர்களுக்குத் தான் இந்த உணர்ச்சிகரமான விருதை வழங்குவார்கள். அந்த வகையில் இன்னும் 96 வருடங்கள் கடந்தாலும் நம் மனதை இதமாக வருடும் 96 படத்தைத் தந்த இயக்குநர் ப்ரேமிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வழங்க இருக்கிறார்கள். இந்த விருது குறித்து இயக்குநர் ப்ரேம் பேசும்போது,
“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியான விருதுகளாக இருந்தாலும் விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை தான். ஆனால் இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு வாழ்த்து கூறிய பலரும் ‘கங்க்ராட்ஸ்’ என்பதோடு கடந்துவிடவில்லை. ஒவ்வொருவரும் இதைப்பற்றி மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசினார்கள். விஜய்சேதுபதி திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். தற்போது படத்தைத் தெலுங்கில் இயக்க இருக்கும் நிலையில் இப்படியான விருது கிடைத்திருப்பது பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது” என்றார்.

மீண்டும் ‘பாகுபலி’ கூட்டணி..; ரெஜினா- RJ பாலாஜி இணைகின்றனர்!

மீண்டும் ‘பாகுபலி’ கூட்டணி..; ரெஜினா- RJ பாலாஜி இணைகின்றனர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali team again joins for bilingual movie Madai Thirandhuகழுகு, சவாலே சமாளி, சிவப்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சத்யசிவா.

இவர் தற்போது கழுகு2 படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பாகுபலி ராணா மற்றும் ரெஜினா கசண்ட்ரா இணைந்துள்ள மடை திறந்து என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சத்யராஜ், நாசர், ஆர்.ஜே.பாலாஜி, கே.கே.மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்க, யுவன் இசையைமைத்து வருகிறார்.

சத்யா ஒளிப்பதிவு செய்ய கே புரடெக்ஷன் சார்பில் எஸ்.என்.ராஜேந்திரன் தயாரித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இப்படத்தை ஒரு பீரியட் பிலிமாக உருவாக்கி வருகின்றனர்.

தெலுங்கில் 1945 என்று டைட்டில் வைத்துள்ளனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஒரு வீரனின் கதையாம் இது.

பணப் பிரச்சினை காரணமாக சில காலம் நிறுத்தி வைக்கப்பட்ட இப்படத்தை தற்போது மீண்டும் துவக்கியுள்ளனர்.

Baahubali team again joins for bilingual movie Madai Thirandhu

மே 10ல் என்ஜிகே; ஆகஸ்ட் 15ல் காப்பான்.. பக்கா ப்ளானில் சூர்யா

மே 10ல் என்ஜிகே; ஆகஸ்ட் 15ல் காப்பான்.. பக்கா ப்ளானில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya plans to release NGK on 10th May and Kaappaan on 15th Augustசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் சில பிரச்சினைகளால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே இந்த வருடம் மார்ச் வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தை ஆகஸ்ட் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

Suriya plans to release NGK on 10th May and Kaappaan on 15th August

More Articles
Follows