விக்கியை வீசி எறிந்த அஜித்.; விஜய்சேதுபதியுடன் சூப்பர் ஹீரோவை இணைக்க திட்டம்.?

விக்கியை வீசி எறிந்த அஜித்.; விஜய்சேதுபதியுடன் சூப்பர் ஹீரோவை இணைக்க திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் 62வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவார் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி நிர்பந்தம் ஏற்பட்டதாலும் அதற்கு இயக்குனர் ஒத்து வரவில்லை என்பதாலும் இயக்குனரை படக்குழு நீக்கியது.

தற்போது அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கடுப்பான விக்னேஷ் சிவன் அடுத்து அதிரடி வெற்றி கொடுக்க புதிய திட்டங்களை தீட்டி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிப்பார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் மற்றொரு ஹீரோ கேரக்டரில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதனை் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளன.

பிரதீப் ரங்கநாதன்

Vignesh Shivan with Vijay Sethupathi and Pradeep Ranganathan

மித்ரன் ஜவஹர் சாந்தமானவர்.; ஈஷான் கண்கள் உயிரோட்டமானவை.. – பாக்யராஜ்

மித்ரன் ஜவஹர் சாந்தமானவர்.; ஈஷான் கண்கள் உயிரோட்டமானவை.. – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈஷான் – ப்ரணாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரியவன்’. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை & ட்ரைலர் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது.

அப்போது இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது,..

“அரியவன் படம் டிரெய்லர் நன்றாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

இந்தப்படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் மித்ரனுடன் உத்தம புத்திரன் படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது.

புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ” என பேசினார் பாக்யராஜ்.

அரியவன்

Bhagyaraj talks about Ishaan at Ariyavan Audio launch

தொழில் நுட்ப குழு..:

இயக்குநர் – மித்ரன் R. ஜவஹர்
கதை – மாரிசெல்வன் சு
வசனம் – ஜெகஜீவன் / மாரிசெல்வன் சு
பாடல், இசை – ஜேம்ஸ் வசந்தன் / வேத் சங்கர் / கிரி நந்த்
தயாரிப்பு நிறுவனம் – எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
எடிட்டர் – M.தியாகராஜன்
ஒளிப்பதிவு – கே.எஸ் விஷ்ணு ஸ்ரீ
பின்னணி இசை – VV & குழு
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் – சிவா (AIM)

அரியவன்

பெண்களுக்கு அட்வைஸ்… அரியவனை கண்டால் பாசிட்டிவ் எனர்ஜீ – ஈஷான்

பெண்களுக்கு அட்வைஸ்… அரியவனை கண்டால் பாசிட்டிவ் எனர்ஜீ – ஈஷான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈஷான் – ப்ரணாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரியவன்’. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை & ட்ரைலர் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது.

அப்போது நாயகன் ஈஷான் பேசியதாவது….

“இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம் தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி.

பொதுவாக இயக்குநர் மித்ரன் R ஜவஹர் படங்கள் கருத்துச் சொன்னாலும், குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இந்தப்படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. அதை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் சொல்லியுள்ளது.

இந்தப்படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எல்லோரும் இந்தப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

Ariyavan will give you positive energy says Ishaan

மித்ரன் ஜவஹருக்காக உடனே ஓகே சொல்லிட்டேன் – ஜேம்ஸ் வசந்தன்

மித்ரன் ஜவஹருக்காக உடனே ஓகே சொல்லிட்டேன் – ஜேம்ஸ் வசந்தன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈஷான் – ப்ரணாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரியவன்’. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை & ட்ரைலர் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது.

அப்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது…

இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன்.

அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குநர் மித்ரன் R ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குநர் மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நாயகி ப்ரணாலி பேசியதாவது…

தமிழில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் சேர்ந்து வேலை பார்க்கும் படத்தில் நான் நாயகியாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள் படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது…

என் நண்பர் வெளிநாட்டில் இருக்கிறார் அவர் படமெடுக்கலாம் எனச் சொன்ன போது, முன்னணி நாயகனுக்குப் பதிலாக புது நாயகர்களை வைத்துப் பண்ணலாம் என்றார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அப்படித் தேடிப்பிடித்தவர் தான் ஈஷான். அவர் மிகப்பெரிய ஹீரோவாக வருவார். எம்.ஜி.பி. மாஸ் மீடியா இனி நிறைய படங்கள் செய்யும். நல்ல படைப்புகளை ரசிகர்களுக்குத் தருவோம். இப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

அரியவன்

I said OK for Mithran R Jawahar says James Vasanthan

தமிழில் அமிதாப்பச்சன் இல்லாத குறையை ஈஷான் நிறைவேற்றுவார்.. – சூப்பர் குட் சுப்ரமணி

தமிழில் அமிதாப்பச்சன் இல்லாத குறையை ஈஷான் நிறைவேற்றுவார்.. – சூப்பர் குட் சுப்ரமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”.

மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது…

இப்படத்தில் வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. நான் ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது,

அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக்கதை, ஆனால் இந்தக்கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்பது தான் உண்மை. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்து கொண்டே தான் இருக்கிறது அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்டும். இந்தப்படம் அதைப்பற்றிப் பேசும். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

சூப்பர் குட் சுப்ரமணி பேசியதாவது…

பாக்யராஜ் சார் இந்தப்படத்தை வாழ்த்த வந்ததே இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. உலகைப் பொறுத்தவரை ஆக்சன் ஹீரோவுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழில் அமிதாப்பச்சன் இல்லாத குறையை ஈஷான் நிறைவேற்றுவார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை காவ்யா பேசியதாவது…

நாம் நிறைய படங்கள் நடித்தாலும் சில படங்கள் தான் மனதுக்கு நெருக்கமாக, முக்கியமான படமாக தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட படம், எனக்கு வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

இசையமைப்பாளர் கிரி நந்த் பேசியதாவது…

இந்த படத்தில் ஒரு பெப்பியான பாடல் செய்துள்ளேன். அனைவரும் விருப்பப்பட்டு உழைத்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

அரியவன்

Ishaan will became Amithab of Tamil Cinema says Super Good Subramani

நகைச்சுவை நடிகர்களுக்கு எதிர்கால சிந்தனை இருந்தது.. – டாக்டர் பிரபு திலக்

நகைச்சுவை நடிகர்களுக்கு எதிர்கால சிந்தனை இருந்தது.. – டாக்டர் பிரபு திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன் இணைந்து நடித்துள்ள படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

இயக்குனர் விக்னேஷ் ஷா பி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் நாளை பிப்ரவரி 24 இல் வெளியாகியுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் பேசுகையில்…

“திரைப்படங்கள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாதித்திருக்கிறேன். ‘ரோட்டி கபடா மக்கன்.. உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம்.’ இந்த மூன்றும் இருந்தால் மனித வாழ்க்கை நிறைவு பெறுகிறது என்றொரு தத்துவம் இருக்கிறது.

இது அனைத்து மக்களிடத்திலும் பொதுவான நம்பிக்கையாக இருந்தாலும், இதையும் கடந்து ஒரு சமுதாய அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நமக்குள் எவ்வளவு அழுத்தங்களும்.. நெருக்கடிகளும்.. உண்டாகின்றன என்பது குறித்தும் மிர்ச்சி சிவாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய அடையாளத்திற்காக அல்லது நம்முடைய இலக்கை அடைவதற்காக.. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் பல வகையிலான ஓட்டங்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம்.

ஒரு மருத்துவராக இது குறித்து என்னிடம் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளிடம் பேசும் போது.. ‘ஐம்பது வயது வரையிலும் நாம் நிறைய ஓடுகிறோம். எந்த துறையினராக இருந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

இந்த ஓட்டத்தின் போது நாம் நம்முடைய ஆரோக்கியத்தை தவற விட்டு விடுகிறோம். ஆனால் ஐம்பது வயதிற்கு பிறகு, ஒரு மருத்துவரை தேடி, சந்தித்து, அவருக்கு இழந்த ஆரோக்கியத்தை மீட்பதற்காக கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு தேவையான விசயம் தான் நகைச்சுவை எனும் உணர்வு. நகைச்சுவை என்ற உணர்வு இல்லாத போது வாழ்க்கை வற்றி விடுகிறது.’ என குறிப்பிடுவேன்.

பெர்னட் ரஸ்ஸல் எனும் உளவியல் தத்துவ மேதை..,“ரோட்டி கபடா. மக்கன் ஆகிய மூன்றையும் கடந்து கிடைக்கும் சமூக அங்கீகாரம் தான் மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம்” என குறிப்பிடுகிறார்.

தற்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். தயாரிப்பாளர் குமார் படத்தை தயாரித்திருக்கிறார். விக்னேஷ் இயக்கி இருக்கிறார். சிவா நடித்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறீர்கள்.

இவை அனைத்தின் பின்னணியிலும் ஏதோ ஒரு காரணம் இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்தால்.. நாம் அனைவரும் இயந்திரம் அல்ல.. இதனை இழுத்து பிடித்து நிறுத்த ஒரு அழகான உணர்வு தேவைப்படுகிறது.

அந்த அழகான உணர்வும், நகைச்சுவையும் இந்தத் திரைப்படம் உங்களுக்கு வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்காகத்தான் எங்கள் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டின் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும்.

இங்கு தயாரிப்பாளர் பேசுகையில் ‘லாஜிக் தேவையில்லை’ என குறிப்பிட்டார். உண்மையில் சில விசயங்களுக்கு லாஜிக் தேவையில்லை.

தமிழ் சினிமா ஆக சிறந்த நகைச்சுவை கலைஞர்களை நமக்கு அளித்திருக்கிறது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தொடங்கி சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ் .. முதல் தற்போது வரை நிறைய நகைச்சுவை கலைஞர்களை வழங்கி இருக்கிறது.

இவர்கள் அனைவருக்கும் ஃபோர்தாட் எனப்படும் எதிர்காலம் குறித்த சிந்தனை இருந்தது. அதாவது மன அழுத்தத்தை உடைப்பது மட்டுமே நகைச்சுவை கலைஞர்களின் பணி அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

என். எஸ். கே, 1950- 1960களில் அவர் நடித்த படங்களில்.. ஒரு தீர்க்கதரிசியை போல் நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தை கணித்து சில விசயங்களை அவர் பேசியிருக்கிறார். அவர் ஒரு படத்தில் ‘பட்டனை தட்டினால் சட்டினியும் இட்டிலியும் தட்டுல வந்து விழும்’ என ஒரு பாடலை அவர் எழுதிப் பாடியிருக்கிறார். அது போல் தற்போது நடக்கிறது அல்லவா..!!

சந்திரபாபு, “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என பாடியிருப்பார். இந்த பாடல் நம்முடைய வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மறைந்த சோ, எஸ் வி சேகர் போன்ற நாடக கலைஞர்கள் அரசியல் ரீதியான கேலி கேள்விகள் மூலம் நமக்குள் அரசியலை உணர்த்தியிருக்கிறார்கள்.

ஏராளமான சிந்தனையாளர்கள், தங்களுடைய நகைச்சுவையின் மூலம் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

பின்னணி பாடகர் மனோவுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருப்பது, கடவுள் எனக்களித்த ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த ‘டபுள் எஸ் டபுள் எஸ்’ படத்தில் எதிர்காலம் குறித்த சிந்தனை இடம்பெற்றிருக்கிறது.

இப்படத்தின் இயக்குநர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து சிந்தித்திருக்கிறார். இன்றைய சூழலில் நாம் மனிதர்களுடன் பழகுவதற்கு எவ்வளவு தயங்குகிறோம். இந்த திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த விசயத்தை ஆடம்பரமான ஜோடனைகள் எதுவுமில்லாமல்.. யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு பின்னணியில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானவர்களின் உழைப்பு இருக்கிறது. அதனால் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

Producer Dr Ram Thilak talks about Comedy Actors of Tamil Cinema

More Articles
Follows