விஜய் தேவரகொண்டாவின் LIGER Saala Crossbreed மாஸ் டான்ஸ் சூட்டிங் அப்டேட்

விஜய் தேவரகொண்டாவின் LIGER Saala Crossbreed மாஸ் டான்ஸ் சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்சன் படமாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிவருகிறது.

விஜய் தேவரகொண்டா தனது முந்தைய படங்களில், பாடல்களில் பெரிதாக நடனமாடவில்லை. அவரது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதைகள் அப்படங்களில் இல்லை.

ஆனால் இந்த Liger திரைப்படத்தில், உங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்படி, அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தவுள்ளார்.

படக்குழு இந்த அதிரடி மாஸான டான்ஸ் பாடலை, மும்பையில் மிகப்பெரும் பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட அரங்கில் படமாக்க ஆரம்பித்துள்ளது. விஜய்தேவரகொண்டா, சார்மி இருவரும் இதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டா டான்ஸ் ஆடுவதில், மிக மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

இப்புகைப்படத்தை சார்மி கவுர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் உற்சாகத்துடன் வெளியிட்டு, அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது..

#liger நடன பாடல் மும்பையில் படமாகிறது. நம்புங்கள் @TheDeverakonda முன்னெப்போதும் கண்டிராத வகையில் நடனமாடியுள்ளார். அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் பின்குறிப்பு – இந்த ஆணழகனின் நடனத்தை கண்டு, எனது அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சி உணர்வால், பாடல் தந்த உற்சாகத்தால் இந்த டிவிட் பகிரப்பட்டது @PuriConnects @DharmaMovies ,”
என்று பகிர்ந்துள்ளார்.

இப்படத்தினை Puri connects நிறுவனம், பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தியளவில் பன்மொழி திரைப்படமாகும் உருவாகும் இப்படத்தை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய அகதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

Vijay Devarakonda’s Liger Song Shoot Begins in Mumbai

JUST IN அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது..; ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் சௌந்தர்யா ரஜினி

JUST IN அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது..; ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் எந்த மூலையில் எவர் வசித்தாலும் அவரை தொடர்பு கொள்ளும் எளிய சாதனமாக சமூக வலைத்தளங்கள் உருவெடுத்துள்ளன.

நம்முடைய நிஜ சமூகத்தை கூட மறந்து சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பவர்களும் உண்டு.

புதிய உறவுகளை, நட்புகளை உருவாக்கவும் தொலைந்து போன தொலைத்து விட்ட பழைய நண்பர்கள் உறவை மீண்டும் புதுப்பிக்கவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் தொடங்கியுள்ளார்.

இதை ரஜினி தன் குரலில் பதிவு செய்து நேரலையில் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது…

எனக்கு எல்லாமே என் அப்பா தான். அவரின் ஆசியுடன் இதை தொடங்குகிறேன்.

தலைவர் குரலை கேட்கும் போது எனக்கு இந்த ஹூட் வாய்ஸ் சோஷியல் மீடியா குறித்த யோசனை தோன்றியது.

சிலருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள் தங்கள் குரலில் இதில் பதிவு செய்யலாம்.

என் அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது. ஆனால் அவருக்கு பல மொழிகள் தெரியும்”

என பேசினார் சௌந்தர்யா.

ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Soundarya Rajinikanth revealed shocking truth about her father

புகை பழக்கத்தால் பிரிந்த 2K லவ்வர்ஸ் பற்றி சொல்லும் ‘ஒசர காதல்’

புகை பழக்கத்தால் பிரிந்த 2K லவ்வர்ஸ் பற்றி சொல்லும் ‘ஒசர காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக ஆல்பம் பாடல் என்ற தனி பாடல்களுக்கு மக்கள் தரும் வரவேற்பு மிகவும் ஆச்சிரியப்படுத்திக்கிறது.

அந்த வரிசையில் “ஒசர காதல்” என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது.

தற்போது இளம் ஜோடிகளாக வளம் வரும் 2k கிட்ஸ் என்பவர்களுக்குக்காகவே பிரதியேகமாக இந்த பாடல் உருவாக்க பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் எத்தனையோ உண்டு அதில் மிக முக்கியமான ஒன்று புகை பழக்கம்.

இதனால் பிரியும் ஜோடிகள், இறுதியில் காதலை கை விட்டாரா? புகை பழக்கத்தை கை விட்டாரா? என்பது பாடல் முடிவு, முக்கியமான இந்த கருத்தை பேசும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஜாலியாகவும் துள்ளல் இசையோடும் நடனத்தோடும் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாயகனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் பிராசாந்தாக கலக்கிய வசந்த் மற்றும் நாயகியாக பிகில் திரைப்படத்தில் மின்னொளி ஆக கலக்கிய ஆதிரை சௌந்தர்ராஜன் நடித்துள்ளனர்.

கிங் PICTURES இந்த பாடலை தயாரிக்க , இதனை இயக்கியிருக்கிறார் ஹரி பிரகாஷ் , இவர் இதற்கு முன் 80க்கும் மேற்பட்ட குறும் படம் வெப்சீரிஸ் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது,.

( R2BROS ) ராஜா ரவி வர்மா மற்றும் ரவி ராஜ் சக்ரவர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர்,

இவர்கள் இருவரும் 50 க்கும் மேற்பட்ட தனி பாடல்களை இசை அமைத்துள்ளனர்.

ஒளிப்பதிவு சதீஸ்.MS இவர் பலூன் , கோப்ரா போன்ற படங்களில் ஒளிப்பதிவு குழுவில் பணியாற்றியுள்ளார், எடிட்டிங் அஜய் மனோஜ் இவர் பிரபல எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர், கோகுல்,ஹரி,ரவி என்ற மூவரும் பாடலை எழுதியுள்ளனர்.

ஆகாஷ் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார், “என் கணவே” பாடலின் வெற்றியை தொடர்ந்து “ஒசர காதல்” பாடலை தயாரித்து இருக்கிறார் கிங் pictures கௌரி சங்கர், மிகவும் துள்ளலாக இந்த பாடல் வந்துள்ளதால் தீபாவளி அன்று வெளியிட்டு தீபாவளி கொண்டாட்டத்துடம் இதையும் சேர்த்து கொண்டாடலாம் என்று சிரிப்புடன் கூறுகின்றனர் பாடல் குழுவினர்.

King pictures have launched their 2nd single “Osara Kadhal”

JUST IN திரைவானின் சூரியன் ரஜினி உலக விருதுகளை பெற வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்

JUST IN திரைவானின் சூரியன் ரஜினி உலக விருதுகளை பெற வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பேசினார்.

“அப்போது குருநாதர் கே பாலசந்தர், அண்ணன் சத்யநாராயணன், நண்பர் ராஜ்பகதூர் ஆகியோரை நினைவு கூர்ந்தார். மேலும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில்

பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தன் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்…

திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth (ரஜினிகாந்த்) அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

MK Stalin wishes to Super Star Rajinikanth

தமிழ் கலாச்சார உடையணிந்து தேசிய விருது பெற்ற பார்த்திபன் தனுஷ் விஜய்சேதுபதி

தமிழ் கலாச்சார உடையணிந்து தேசிய விருது பெற்ற பார்த்திபன் தனுஷ் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2021 அக்டோபர் 25 டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

ரஜினி விருது பெற மேடைக்கு வந்த போது விழாவில் பங்கேற்ற அனைவருமே எழுந்து நின்று வாழ்த்தினர்.

தமிழ் சினிமா சார்பாக தேசிய விருது பெற்ற கலைஞர்கள்…

சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி. இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோர்..

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது 2வது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருந்தார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்க்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.. இது அவருக்கு முதல் விருது.

ஜூரி சிறப்பு விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் ஹவுஸ்புல் உள்ளிட்ட படங்களுக்காக தேசிய விருதை ஏற்கெனவே பெற்றுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பார்த்திபன், தனுஷ், விஜய்சேதுபதி ஆகியோர் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி சட்டை அணிந்து வந்து விருது பெற்றனர்.

Dhanush Vijay Sethupathi Parthiban wear traditional attire in National film awards

விருது பெற்ற ரஜினி தனுஷ் விஜய்சேதுபதி இமான் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு நாசர் வாழ்த்து

விருது பெற்ற ரஜினி தனுஷ் விஜய்சேதுபதி இமான் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு நாசர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள்.

அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான, தாதா சாகேப் பால்கே விருதினை அவர் பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

அவரது கலைப்பயணம் மேலும் தொடர
அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் இன்று தேசிய விருது பெற்ற கலைஞர்களான…

சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி. இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோருக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி!

அன்புடன்,
நாசர், நடிகர்,
அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பு

Actor Nasser wishes to National award film winners

More Articles
Follows