தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதில் இவருடன் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார்.
இதில் தேவையில்லாத பன்ச் டயலாக்குகளை இடம் பெற செய்ய வேண்டாம் என்றும் கதையின் கேரக்டருக்கு என்ன தேவையோ? அதை வைத்தால் போதும் என கூறிவிட்டாராம் விஜய்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என பெயரிடப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம்.
இப்பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செப்டம்பரிலும், பாடல்களை நவம்பரிலும் வெளியிடவுள்ளனர்.
அடுத்த ஆண்டு (2017) பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது.