உலக நாயகனை பாலோ செய்யும் இளைய தளபதி

உலக நாயகனை பாலோ செய்யும் இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayபரதன் இயக்கத்தில் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதுவரை இதன் படப்பிடிப்புகள் 75% முடிவடைந்துள்ளது.

அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து, இதன் பணிகளை விறுவிறுப்பாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் முதன்முதலாக நெல்லைத்தமிழில் பேசி நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

இவருடன் டேனியல் பாலாஜியும் நெல்லை தமிழில் பேசவிருக்கிறாராம்.

அண்மையில் வெளியான பாபநாசம்’ படத்தில் கமலும் நெல்லைத் தமிழ் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் அன்பினால் மீண்டும் அசந்து போகும் அப்புக்குட்டி

அஜித் அன்பினால் மீண்டும் அசந்து போகும் அப்புக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith appukuttyசிறுசிறு வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டிக்கு இளையராஜாவின் இசையில் உருவான ‘அழகர்சாமியின் குதிரை’ தேசிய விருதை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, சுந்தர பாண்டியன், வீரம், வேதாளம் படங்களில் நடித்து அஜித்தின் அன்பை பெற்றார்.

இதன் பின்னர் அவருக்காக ஒரு போட்டோ சூட் நடத்தி, இவரின் இயற்பெயரான சிவபாலன் பெயரில் இனி நடிக்க வேண்டும் என அஜித்தும் வலியுறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘தல 57’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

முதலில் அப்புக்குட்டியின் காட்கிளை சென்னையில் படமாக்க முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால் தற்போது அந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு பின்னணியில் அஜித் இருந்திருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகமொத்தம் அஜித்தின் அன்பை முழுவதுமாக பெறப்போகிறார் அப்புக்குட்டி.

ரஜினி-விஜய்-சூர்யா வரிசையில் இணைந்த விக்ரம்

ரஜினி-விஜய்-சூர்யா வரிசையில் இணைந்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram irumugan keralaவிக்ரம் நடித்துள்ள இருமுகன், செப்டம்பர் 8ஆம் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் புரேமோஷன் பணிகளுக்காக தற்போது கேரளாவில் உள்ளார் விக்ரம்.

இதற்காக தனி ஹெலிகாப்டரையும் ஏற்பாடு செய்துள்ளார் இதன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சினி கேலக்ஸி பெற்றுள்ளதாம்.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 படங்களை இந்நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanush ranjith join for kabali 2ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி உலகளவில் பெரும் சாதனை படைத்தது.

மேலும் இதன் க்ளைமாக்ஸில் அடுத்த பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக காட்சி இருந்தது.

தற்போது இதனை மெய்பிக்கும் வகையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை தனுஷின் வுண்டெர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. அதை தனுஷே சற்று முன் ட்விட்டரில் வீடியோ பதிவுடன் அறிவித்தார்.

இதனால் இணையம் முழுவதும் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

இது கபாலி படத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய படமாக குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அவரை மட்டும் ராம்கோபால் வர்மா வாழ்த்த என்ன காரணம்.?

அவரை மட்டும் ராம்கோபால் வர்மா வாழ்த்த என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram gopal varmaநடிகர்கள் விஷால், நாகர்ஜீனா, விஜயகுமார் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 29) தங்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இவர்களுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகார்ஜீனாவை வாழ்த்தியது குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

இதுவரை யாருக்கும் நான் பிறந்த நாள் வாழ்த்து கூறியது இல்லை. ஆனால் எனக்கு இயக்குனராக பிறப்பு கொடுத்தது நாகார்ஜீனாதான்.

எனவே என் பாலிசியில் அவருக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

‘நான் உயர பறக்க விஜய்தான் காரணம்…’ அருண்ராஜா காமராஜ்

‘நான் உயர பறக்க விஜய்தான் காரணம்…’ அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay arunraja kamarajநடிகர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதிவந்தாலும், கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் இவரை உலகளவில் கொண்டு சேர்த்தது.

இப்பாடலை எழுதி இவரே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜீலை மாதம் இறுதியில் விஜய் இவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் இன்று விஜய்யை சந்தித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

இச்சந்திப்பு பற்றி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது… “நான் உயர பறக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows