சூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் கலக்கும் ‘காக்கி’

சூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் கலக்கும் ‘காக்கி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antonys Khaki movie trade updatesதிமிரு பிடிச்சவன் மற்றும் கொலைக்காரன் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் படம் காக்கி.

ஏ. செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய அவ்கத் இசையமைத்துள்ளார்.

ஜீன் மாதம் இதன் முதற்கட்ட சூட்டிங் தொடங்கியது.

அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் ஒட்டு மொத்த சூட்டிங்கும் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்டு இப்பட உரிமைகளை வாங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு 2020 ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Vijay Antonys Khaki movie trade updates

திருட்டு கதையில் சிக்கிய விஜய்யின் ‘பிகில்’ மீதான வழக்கு தள்ளுபடி

திருட்டு கதையில் சிக்கிய விஜய்யின் ‘பிகில்’ மீதான வழக்கு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bigil movie story theft case dismissed by court‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது.

இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.

இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள்.

இயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.

Vijays Bigil movie story theft case dismissed by court

Breaking அனிருத் இசையில் தளபதி 64 & ரிலீஸ் அறிவிப்பு வெளியானது

Breaking அனிருத் இசையில் தளபதி 64 & ரிலீஸ் அறிவிப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 64 official announcement and release date is hereஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படம் விஜய்யின் 63வது படமாகும்.

இதனையடுத்து அவரது 64 படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தோம்.

அதன்படி தற்போது முறையான அறிவிப்பும் வெளியானது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க  ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

2019 அக்டோபரில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர்.

Thalapathy 64 official announcement and release date is here

ஒருவழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி வெளியானது

ஒருவழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Finally Enai Noki Paayum Thota release date is hereகௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இதில் நடிகரும் இயக்குருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் கடந்த 2 வருடங்களாக தள்ளிக் கொண்டே போனது.

தற்போது படம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

Finally Enai Noki Paayum Thota release date is here

நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.

நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கிச்சா சுதீப் நடிப்பில் “பயில்வான்” திரைப்படத்தின் டிரைலரை தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சில மணி நேரத்திற்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் ஒரு நிமிடம் நாற்பத்தைந்து நிமிடம் உள்ளது. இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார். இந்த டிரைலரில் வரும் வசனங்கள் அனைத்தும் கதாநாயகனனைப் பற்றிய தோற்றத்தை பிரதிபலிக்கின்றன. நாயகனின் பலம், பலவீனம், வீழ்ச்சி மற்றும் தடைகளை உடைத்தெறியும் வெற்றி என்று நாயகனின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கிறது டிரெய்லர்.

இன்னொருபுறம் டிரெயலர் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான திகழ்ந்த சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்திருப்பதையும் அறிவிக்கிறது. டிரைலர் முழுவதும் நிறைந்திருக்கும் சண்டைக் காட்சிகளை இயக்கியிருக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஸ்மன், Dr.ரவி வெர்மா, லார்னல் ச்டோவல்(பாக்சிங்) மற்றும் A. விஜய்(குஸ்தி). இப்படத்தில் வரும் தெறிக்கும்படியான வசனங்கள் அனைத்தும் வாழ்க்கையின் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR motion pictures நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர். இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் செட் வொர்க் மிகவும் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்படத்தில் ஆகண்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடியோகிரபியாக பணியாற்றியவர் நிதின் லுகோஸ். யோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் 1 லுக் போஸ்டரை இந்திய சினிமாவின் முக்கியப் புள்ளிகள் வெளியிட்டுள்ளன. இந்தி மொழியில் சுனில் ஷெட்டி, தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மலையாலத்தில் மோகன்லால் மற்றும் தமிழ் மொழியில் விஜய் செய்துபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

 

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் ருசிகர பேச்சு

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் ருசிகர பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப்-ல் நடைபெற்றது,

விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் “ஜாகுவார் தங்கம் பேசியதாவது,

“கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவுசெய்து நல்லபழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும். இந்தியாவின் அடையாளமாக பாக்கியராஜ் சார் இருக்கிறார். அவர் இப்படத்தின் விழாவிற்கு வந்தது சந்தோஷம். இப்படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்துகள். ஆங்கில மொழியை பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். தமிழ் பல ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டது. தயவுசெய்து தமிழில் பேசுங்கள். படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும். ஏன் என்றால் இப்படியான படத்தை நாம் வரவேற்க வேண்டும். படத்தில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், எடிட்டர் உள்படம் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப்படத்தில் எல்லாரும் ஒரு குடும்பமாக வேலை செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.”

இயக்குநர் மோத்தி.பா பேசியதாவது..

“இந்தக் கோலா படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்று கூறும் விழா தான் இவ்விழா. இசை அமைப்பாளருக்கும் நடனத்தை சிறப்பாக அமைத்து தந்தவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மாஸ்டர் தருண் அவர்களுக்கும், மற்றும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. இந்தியாவின் அடையாளமான பாக்கியராஜ் அவர்களுக்கும் நன்றி” என்றார்

இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது..

,”கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ரவுடி கடைகாரனிடம் கிராஜ் இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன் என்றானாம்

அனைவரும் பயந்தார்கள்..ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் “உனக்குப்பயம் இல்லையா”என்று கேட்டான். அதற்கு சிறுவன் சொன்னான், ” கிராக் ஆனால் நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்” என்றார். ஆக துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை

கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது..புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். தருண் மாஸ்டர் நல்லா பன்றார் என்று என் படத்திற்கு கூப்பிட்டேன். என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வரவேண்டும் என்பது என்கனவு” என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர். தயாரிப்பாளர் மூர்த்தி பா சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் எனக்கு முந்தானை முடிச்சு படம் தான் பிடிக்கும். என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதில் வந்து, ” எனக்குப் பிடிச்ச படம் சின்னவீடு” என்றார். அவர் போலீஸ்காரர் என்பதால் வாங்கி தான் பழக்கம் என்று நினைத்தேன்..ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்றார்

More Articles
Follows