தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெறி படத்தை தொடர்ந்து தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
பரதன் இயக்கிவரும் இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கோயம்பேடு பஸ்நிலையம் போன்ற செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது.
அடுத்தவருடம் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஏ அண்ட் பி நிறுவனம் பெரும் தொகைக்கு கைபற்றியிருக்கிறதாம்.
இந்நிறுவனம் பிரபல நடிகர் அருண்பாண்டியனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.