தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா.
இவர் குழந்தை பருவத்தில் தனியார் டிவி..க்களில் விஜே-ஆக பணிபுரிந்துள்ளார்.
தற்போது வளர்ந்து குமரியான பிறகு ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார்.
‘காதல் கசக்குதய்யா’, ‘பள்ளி பருவத்திலே’, ‘மாயநதி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தற்போது நந்தா பெரியசாமி இயக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக நடித்து வருகிறார்.
இவருடன் சிவாத்மிகா, சரவணன், சேரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அண்மையில் வெளியான ‘அல்வா’ என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார் வெண்பா.
விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜிவி. பிரகாஷ் உடன் நடித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாட்டு உலகின் முதல் முயற்சியாக உருவாகியுள்ளது. இதல் 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களைக் கவிஞர் வைரமுத்து உருவாக்கியுள்ளார்.
தொலைக்காட்சித் தொடர்களைப்போல இது வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் பாட்டுத் தொடராகும். ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி இரண்டிலும் நாட்படு தேறல் ஒளிபரப்பாகி வருகிறது.
‘இந்த இரவு தீர்வதற்குள்ளே… என்று தொடங்கும் ஒரு பாடல் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. இதில் வெண்பா நாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் ‘டீல் ல வுடாத’ என்ற அடுத்த இசை ஆல்பத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் வெண்பா.
பீட்டர் என்பவர் நாயகனாக நடிக்க லோகித் ஜித் இயக்கியுள்ளார்.
இப்பாடலின் டீசர் நாளை வெளியாகவுள்ள நிலையில் முழுப்பாடல் வீடியோ ஏப்ரல் 30ல் ரிலீசாகிறது.
Venbas 2nd album song titled Deel la udatha Teaser from tomorrow