தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செம போதை ஆகாது என்ற படத்தை தொடர்ந்து அதர்வா நடிக்கவுள்ள படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.
அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.
இதில் ஜெமினி கணேசனாக அதர்வாவும், சுருளிராஜனாக சூரியும் நடிக்கின்றனர்.
முதலில் அதர்வா வேடத்தில் கலையரசன் நடிப்பார் என கூறப்பட்டது.
தெய்வ வாக்கு, ராசய்யா, சரோஜா உள்ளிட்ட படங்களை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இன்று இதன் படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியுள்ளனர்.
‘ஜெமினிகணேசன் மற்றும் சுருளிராஜன் என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலும் காமெடியும்தான். எனவே இவ்விரண்டையும் மையமாக கொண்டே இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.