தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதல்வா் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார் வடிவேலு.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது…
“ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார்.
மக்களே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.
நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு விட்டேன்.
தமிழகத்தை பிரித்து கொங்கு நாடு தனி நாடு பற்றிய சர்ச்சை கேள்விக்கு…
ராம் நாடு, ஒரத்தநாடு ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது.
அதை ஏன் பிரிக்கனும். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது.”
இவ்வாறு வடிவேலு பேசினார்.
Vadivelu donated Rs 5 lakhs to cm corona relief fund