மிஸ் யூ வடிவேல் பாலாஜி.; மறைந்த காமெடி நடிகருக்காக விஜய் டிவி நடத்தும் ஷோ..!

மிஸ் யூ வடிவேல் பாலாஜி.; மறைந்த காமெடி நடிகருக்காக விஜய் டிவி நடத்தும் ஷோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivel balaji tribute show in vijay tvவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி.

மற்றவர்களை காட்டிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

42 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு செப்டம்பர் 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வடிவேல் பாலாஜியின் குழந்தைகளுடைய கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றார்.

நடிகர் விஜய் சேதுபதி குடுமபத்தினருக்கு பண உதவி செய்திருந்தார்.

ஆனால் அந்த கலைஞனுக்கு அந்த டிவி நிர்வாகம் சார்பில் எதுவும் செய்யவில்லை் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் விஜய் டிவி கலைஞர்கள் இணைந்து வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கான புரமோ வீடியோவும் வெளியானது.

இந்த நிகழ்ச்சி ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

Vadivel Balaji tribute in Vijay TV on october 4th

‘அண்ணாத்த’ பாட்டு பெருசா பேசப்படும்.; விவேகாவை பாராட்டி தன் கடைசி பாட்டை பாடிய எஸ்பிபி

‘அண்ணாத்த’ பாட்டு பெருசா பேசப்படும்.; விவேகாவை பாராட்டி தன் கடைசி பாட்டை பாடிய எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viveka SPBரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’ .

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் (தன் மறைவுக்கு முன்னர்) ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியிருக்கிறார்.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் 7 மாதங்களாக நிறுத்தப்பட்டது.

அடுத்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் இன்ட்ரோ சாங் குறித்து பிரபல இணையதளத்திற்கு விவேகா பேட்டியளித்துள்ளார்.

அதில்.. இவரின் பாடல் வரிகளை பார்த்த எஸ்பி் பாலசுப்ரமணியம் அவர்கள் “இந்த பாட்டு பெருசா பேசப்படும்” என்று பாராட்டி அந்த பாடலை பாடினாராம்.

பாவம்… அந்த பாடும் நிலா பாலுக்கு… அதுதான் அவரின் கடைசி பாடல் என தெரியாமல் போய்விட்டது.

Lyricist Viveka opens up on SPB’s last song in Annaatthe

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி.; தாக்கு பிடிப்பாரா..?

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி.; தாக்கு பிடிப்பாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shetty in bigg boss 4கதம் கதம், மாயை, சவாரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி.

இவர் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சனம் ஷெட்டிக்கு அறிமுகமானவர்தான் தர்ஷன்.

பின்னர் இருவரும் காதலிக்க நிச்சயதார்த்தமும் செய்துக்கொண்டனர்.

தர்ஷனுக்கு விளம்பர பட வாய்ப்புகளை சனம் ஷெட்டிதான் வாங்கிக்கொடுத்துள்ளார்.

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் தர்ஷன்.

சனம் மூலமாகத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார் தர்ஷன்.

இதன்பின்னர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி துரோகம் செய்ததாக தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார் அளித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்பு பகுதியான திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் “நம் மக்களின் குரல்” என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றையும் தொடங்கி உதவி வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் சனம் ஷெட்டி.

Will sananm shetty win Bigg Boss title 4 ?

உறிச்சி வச்ச 2 வாழைப்பழம்.. டூ பீஸ் கேர்ள்ஸ்..; இரட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டரின் அடுத்த படம்.?!

உறிச்சி வச்ச 2 வாழைப்பழம்.. டூ பீஸ் கேர்ள்ஸ்..; இரட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டரின் அடுத்த படம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர ஹர மஹாதேவகி & இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார்.

இவை இரண்டும் அடல்ட் காமெடி வகையை சேர்ந்தது.

இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன்பின்னர்… இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை சந்தோஷ் ஜெயகுமார் தெலுங்கில் ரீமேக் செய்தார்.

அங்கு மோசமான விமர்சனங்களை பெற்றது.

இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.

இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்திருக்கிறாராம்.

சென்சார் வேலை எல்லாம் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளதாம்.

இரண்டாம் குத்து படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. கோடை விடுமுறை ஸ்பெஷலாக படத்தை ரிலீஸ் செய்யவிருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லையாம்.

இந்த நிலையில் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

இதன் டைட்டிலை நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிடவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பான போஸ்டர் டிசைனில்… உறிச்சி வச்ச 2 வாழைப்பழம்.. டூ பீஸ் கேர்ள்ஸ்.. பீர் பாட்டில்.. கடற்கரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இப்பட தலைப்பு நாளை அக்டோபர் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

IAMK Director next film

Gautham Karthik will annnounce IAMK directors next film details tomorrow

BREAKING இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்

BREAKING இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rama Gopalanஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலன். அவருக்கு 95 வயதாகிறது.

இவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதியானது.

கடந்த ஆகஸ்டு மாதமும் ராமகோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ராம கோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Hindu Munnani founder Rama Gopalan succumbs to Corona

இதெல்லாம் ரொம்ப டூ மச்..; சிம்பு ரசிகர்களின் வேற லெவல் வம்பு

இதெல்லாம் ரொம்ப டூ மச்..; சிம்பு ரசிகர்களின் வேற லெவல் வம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்காக தங்கள் உடல் எடையை மெய்ண்டெயின் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் கலைஞர்கள்.

ஒரு சிலர் நடிகர்கள் மட்டும் உடல் எடையை கூட்டுவதிலும் ரிஸ்க் எடுப்பார்கள்.

AAA படத்திற்காக தன் உடல் எடையை தாறுமாறாக மாற்றியிருந்தார் சிம்பு.

ஆனால் கொரோனா லாக்டவுன் சமயத்தில் 100 கிலோ எடையிருந்த சிம்பு 21 கிலோ எடை வரை குறைத்து விட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

ஆனால் அது தொடர்பான எந்த போட்டோவும் வெளியாகவில்லை.

ஊரடங்கில் சிம்புவின் உருப்படியான காரியம்.; 100 கிலோவிலிருந்து 21 கிலோ எடை குறைத்தார்

இதனால் சிம்புவின் நியூ லுக்கை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

போட்டோவை ரிலீஸ் பண்ணுங்க என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வலியுத்தியும் வந்தனர்.

ஆனால் மதுரை ரசிகர்கள் வேற லெவலில் போஸ்டர்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுரை சிட்டி STR வெறியர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அதாவது… “உங்களுடைய லேட்டஸ்ட் போட்டோவை வெளியிடுங்கள் ப்ளீஸ் என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்தேவிட்டனர்

மேலும் அதில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புவின் நண்பர்கலான மகத், விடிவி கணேசன், பத்திரிகையாளர் ஆகியோரது போட்டோவையும் போஸ்டரில் அச்சிட்டு அவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அட நீங்க வேற லெவல்தாம்ப்பா…

Madurai STR fans poster

Madurai simbu fans stick posters to release new photo of STR

More Articles
Follows