இளையராஜாவுக்கு படம் போட்டு காட்ட விரும்பும் நடிகர் விஷால்

இளையராஜாவுக்கு படம் போட்டு காட்ட விரும்பும் நடிகர் விஷால்

vishal ilayarajaமிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இமானுவேல், பிரசன்னா நடிப்பில் 2017ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதால் , இப்படத்தின் இராண்டாம் பாகத்தை படமாக்கி வந்தனர்.

இதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க விஷால் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்து வந்தனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலக மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு விஷால் ஒரு ட்விட் பதிவிட்டார்.

அதில்… இசைஞானிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தை இசையமைப்பாளர் இளையராஜா அவர்களிடம் போட்டு காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார் விஷால்.

Update on Vishal’s Thupparivaalan 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *