கேப்டன் விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி எம்எல்ஏ

கேப்டன் விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி எம்எல்ஏ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalin met vijayakanthதமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

இவரின் முதல் தேர்தலிலேயே இவர் வெற்றி கண்டு எம்எல்ஏ ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் உதயநிதி.

அப்போது உதயநிதியை எல்.கே.சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி.

பின்னர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Udhayanidhi Stalin meets Vijayakanth at his residence

அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக-வினர்..; கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை

அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக-வினர்..; கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amma unavagam attacked by dmkசென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் தமிழக அரசின் அம்மா உணவகம் உள்ளது.

இதில் ஜெயலலிதா புகைப்படத்துடன் இருந்த பதாகைகளை சில திமுகவினர் அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பெயர் பலகையை அங்கேயே வைத்து விட்டனர்.

இதுகுறித்து பேசிய சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன்…

“ஸ்டாலின் அறிவுரையின்படி.. “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழகத் தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

DMK men ransack Amma canteen in Chennai

திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்து வனிதா காணிக்கை.; விழிகள் குளமாகியதாக ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்து வனிதா காணிக்கை.; விழிகள் குளமாகியதாக ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMK Vanithaபரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா (32).

இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போடுவதாக வேண்டியுள்ளார்.

அதன்படி நேற்று காலை பரமக்குடி முத்தாளம்மன் கோயிலில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்துள்ளார்.

அதனை கோயில் உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக் கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.

அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் முக ஸ்டாலின்.

Woman cuts off her tongue to keep promise as DMK wins TN

அமெரிக்கா பறக்கும் ‘அண்ணாத்த’.; ரஜினி நெக்ஸ்ட் ப்ளான் என்ன..?

அமெரிக்கா பறக்கும் ‘அண்ணாத்த’.; ரஜினி நெக்ஸ்ட் ப்ளான் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பலத்த பாதுகாப்புடன் தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில தினங்களில் இப்பட சூட்டிங் முடியவுள்ளது.

இதனை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்புவார்.

அதன்பின் சென்னையில் படத்திற்கான டப்பிங் பேசுகிறார்.

படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்த மாதம் ஜுனில் தன் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார் என கூறப்படுகிறது.

ஜூலை / ஆகஸ்ட் மாதத்தில் தன் அடுத்த படத்தில் ரஜினி நடிப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

Actor Rajinikanth to travel USA

JUST IN கொரோனா ஊரடங்கு முழு விவரம்.: காய்கறி மளிகை மதியம் 12 வரை மட்டுமே அனுமதி.. மற்றவை தடை..- தமிழக அரசு

JUST IN கொரோனா ஊரடங்கு முழு விவரம்.: காய்கறி மளிகை மதியம் 12 வரை மட்டுமே அனுமதி.. மற்றவை தடை..- தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

ஏற்கெனவே, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

(மே 7ல் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் திமுக தலைவர் முக.ஸ்டாலின்.)

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.

இவை தவிர தனியாக செயல்படுகின்றன மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

மருந்தகங்கள் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்த தடையுமின்ற செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்.

ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதியில்லை.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாநகராட்சி நகராட்சிப் பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

உள் அரங்குங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.

ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

*எதற்கெல்லாம் அனுமதி உண்டு..?*

அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities) இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்

* தரவு மையங்களில் (data centres) பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

*ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு*

* அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்

* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

மற்ற மின் வணிக (e-commerce) நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities) செயல்பட அனுமதி.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம்/ திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் 10 எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

TN Govt imposes Lockdown fresh restrictions for 2 weeks from May 6

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தன் ரசிகரின் இயக்கத்தில் ரஜினி.?; அவரு செம தெளிவாத்தான்யா இருக்காரு…

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தன் ரசிகரின் இயக்கத்தில் ரஜினி.?; அவரு செம தெளிவாத்தான்யா இருக்காரு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஅரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்து 3 ஆண்டுகளில் (2018-2020) தமிழகத்தை பரபரப்பாக்கினார் ரஜினிகாந்த்.

திடீரென சினிமா சூட்டிங் போவார். பின்னர் சில தினங்களில் அரசியல் பேசுவார்.

இப்படியாக 3 ஆண்டுகளில் ரஜினியை சுற்றியே சினிமா & அரசியல் இருந்தது.

ரஜினி ரசிகர்களும் தங்கள் பங்குக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பூத் கமிட்டி வேலைகளில் ஈடுப்பட்டனர்.

ஆனால் 2020 டிசம்பர் 29ல் தன் உடல்நிலை மற்றும் கொரோனாவை காரணம் காட்டி “இப்போதைக்கு அரசியலுக்கு வரப் போவதில்லை” என்றார்.

ஆனாலும் ரஜினி ரசிகர்களின் மனக்காயம் ஆறவில்லை. ரஜினி போட்டியிடாத தேர்தலில் நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என சிலர் பேசினர்.

ஓட்டுன்னு போட்டி அது ரஜினிக்கு மட்டும்தான் என சொல்லி திரிந்தனர்.

இதன்பின்னர் கொரோனா & தேர்தல் அரசியல் பரபரப்புக்கிடையிலும் ‘அண்ணாத்த’ சூட்டிங் கிளம்பினார் ரஜினிகாந்த்.

கொரோனாவை காரணம் காட்டி அரசியலுக்கு வராத ரஜினி சினிமா சூட்டிங்கில் மட்டும் கலந்து கொள்வது என்ன நியாயம்.? என ரஜினி ரசிகர்களே நொந்து கொண்டனர்.

நேற்று மே 2 சட்டமன்ற தேர்தல் முடிவும் வந்துவிட்டது. திமுக ஆட்சியமைக்க ஸ்டாலின் முதல்வராகவுள்ளார். ரஜினியும் வாழ்த்து சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் ‘அண்ணாத்த’ சூட்டிங் முடிந்து ரஜினி வீடு திரும்புகிறார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளராம் ரஜினி.

இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் ரஜினி கதை கேட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஆகஸ்டில் ரஜினி தன் அடுத்த படத்தை அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தன் ட்விட்டரில்…

“என் அடுத்த பட குறித்த தகவல் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரும் ரஜினி வெறியர்கள்.

இதில் ஒருவர் ரஜினியை இயக்கவில்லை என தெரிவித்துவிட்டார். அடுத்தவர் என்ன சொல்வாரோ..??

Rajinikanth to act in his fan direction

More Articles
Follows