பிரியதர்ஷன்-உதயநிதி இணையும் பட தலைப்பு முடிவானது

பிரியதர்ஷன்-உதயநிதி இணையும் பட தலைப்பு முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Priyadarshan combo movie titled Nimirமலையாளத்தில் ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் தமிழில் இயக்கி வருகிறார் பிரியர்ஷன்.

இப்படத்தில் உதயநிதி, நமீதா பிரமோத், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்க, தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.

சூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தாலும் இதுவரை படத்திற்கு பெயரிடாமல் காத்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘நிமிர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Udhayanidhi Priyadarshan combo movie titled Nimir

விக்ரம் முதல் விஜய்சேதுபதி வரை; ட்ராக் மாறும் தமிழ் படத்தலைப்புகள்

விக்ரம் முதல் விஜய்சேதுபதி வரை; ட்ராக் மாறும் தமிழ் படத்தலைப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After GST Tamil movie titles are in english language

கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது, தமிழில் தலைப்பு வைத்தால்தான் தமிழக அரசின் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு கிடைக்கும் என அறிவித்தார்.

அப்போது ரஜினியின் ரோபா படத்திற்கு எந்திரன் என பெயரிட்டனர்.

பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழில் தலைப்பு வைத்தாலும் தரமான படமாக இருந்தால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும் என அறிவித்தார்.

இதில் சில அரசியல் குளறுபடியாக இருப்பதும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் வரியும் சேர்ந்திருப்பதால், இனி கேளிக்கை வரிவிலக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாக்களுக்கு இங்கிலீஷ் டைட்டில் வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.

விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச், விஜய்சேதுபதியின் ஜுங்கா, சூப்பர் டீலக்ஸ், மகேஷ்பாபுவின் ஸ்பைடர், வெங்கட்பிரபுவின் பார்ட்டி, லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என வரிசை கட்டி நிற்கின்றன.

ரஜினி-கமல்-விஜய்-விஷால் அரசியலுக்கு வரட்டும்.. சீமான் ஓபன்டாக்

ரஜினி-கமல்-விஜய்-விஷால் அரசியலுக்கு வரட்டும்.. சீமான் ஓபன்டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Any actors can come to Politics Says Naam Tamilar Party leader Seemanநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளனர்.

இவர்களின் கட்சி அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இவர்களின் வருகை குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பேசும்போது…

ரஜினிகாந்த் வரட்டும், கமல்ஹாசன் வரட்டும். விஜய், விஷால் கூட வரட்டும்.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும்.

அரசியலுக்கு வந்த பின்தான், அவர்களுக்கு நாட்டை ஆள நடிப்பு திறமை மட்டும் போதாது என்பது தெரியும்” என்று பேசினார்.

Any actors can come to Politics Says Naam Tamilar Party leader Seeman

அறிவழகன் இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-நயன்தாரா

அறிவழகன் இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arivazhaganஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன்.

அருண்விஜய் நடிப்பில் உருவான ‘குற்றம் 23’ படத்தை அண்மையில் இயக்கியிருந்தார் அறிவழகன்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பார் என கூறப்பட்டது. அவருடன் முக்கிய வேடத்தில் ராஜ்கிரனும் நடிக்கவிருந்தார்.

தற்போது மஞ்சு வாரியருக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் ஓவியாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர்

பிக்பாஸ் ஓவியாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviyaaபிக்பாஸ் நிகழ்ச்சியால் இந்தளவு புகழ் கிடைக்கும் என ஓவியாவே நினைத்திருக்க மாட்டார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும், இன்னும் அந்த மகிழ்ச்சி கடலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்.

இந்நிலையில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் உடன் அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதற்கான ஒப்பந்தமும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சரவணன் ஏற்கெனவே தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகம் டீசரால் அகில உலக சாதனை படைத்தார் அஜித்

விவேகம் டீசரால் அகில உலக சாதனை படைத்தார் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith movie Vivegam teaser set new world recordகடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிப்பில் விவேகம் படம் வெளியானது.

இப்படத்தின் டீசர் கடந்த மே மாதம் 10-ம் தேதி இணையத்தில் வெளியானது. வெளியானது முதலே இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது 5,73,000 லைக்ஸ் பெற்று உலகளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை இது நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பு ‘ஸ்டார்வார்ஸ் – தி லாஸ்ட் ஜெடி’ என்ற ஹாலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதனை கடந்துள்ளது ‘விவேகம்’ படத்தின் டீஸர்.

அஜித்தின் இந்த அகில உலக சாதனையை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #VivegamTeaserAllSetToNewWR மற்றும் #VIVEGAMTeaserSetsWorldRecord ஆகிய ஹெஷ்டேக்குகளில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith movie Vivegam teaser set new world record

More Articles
Follows