நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்; *நிமிர்* நாயகியின் ஆசை நிறைவேறுமா?

நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்; *நிமிர்* நாயகியின் ஆசை நிறைவேறுமா?

namita pramodதமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமையை அளித்ததில்லை.

மாறாக எல்லா மொழியில் இருந்தும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் சிறந்த கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தே வந்திருக்கிறது.

கலை திறன்கள் சங்கமித்து ஒரு பெருங்கடலை உருவாக்கும் ஒரு முக்கிய இடமாக தமிழ் சினிமா விளங்குவதாக நடிகை நமீதா பிரமோத் தன் ஆழ்மனதில் இருந்து உணர்கிறார்.

மேலும் அவர் இதை பற்றி குறிப்பிடும்போது…

“கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது.

எங்கள் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நானும் எப்போதும் தமிழ் சினிமாவின் கிரியேடிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறேன்” என்றார்.

சமீபத்தில் நமீதா பிரமோத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதோடு, அவருக்கு பாராட்டுக்களையும் பெற்றுத் தந்த கம்மர சம்பவம் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் நமீதா பிரமோத்.

சித்தார்த், திலீப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தில் நமீதா நடித்த ‘பானுமதி’ கதாபாத்திரம் கூடுதல் ஈர்ப்பாக திகழ்ந்தது.

தற்போது திலீப் உடன் ஒரு 3D படத்தில் இணைந்து நடிக்கிறார் நமீதா பிரமோத். இது பற்றி அவர் கூறும்போது…

“இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது.

அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது” என்கிறார்.

அவருடைய பெயர் வெளியில் தெரியும் முன்பே பலரையும் ஈர்த்தது அவரின் நடனம் சிறப்பான நடன திறமை தான்.

பாரம்பரிய நடனத்திற்கென தனியாக சிறப்பு பயிற்சி எடுத்தீர்களா? என்று கேட்டால், “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

யார் கட்டுப்பாட்டிலும் நான் இல்லை… நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்! – நடிகை ஸ்ரீப்ரியங்கா

யார் கட்டுப்பாட்டிலும் நான் இல்லை… நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்! – நடிகை ஸ்ரீப்ரியங்கா

actress sri priyankaசமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்தத் தயாரிப்பாளர் / இயக்குநர் / மேனேஜர் கட்டுப்பாட்டிலும் இல்லை. திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் சுதந்திரமான நடிகை நான்.

வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து என் நடிப்பில் ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது.

இதுவரை என் நடிப்பையும் நடத்தையையும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படித்தான் இருப்பேன். எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்குப் பிடித்த, எந்த பிரச்சினையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக் கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், ஹீரோ என எதற்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொண்டதில்லை.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப் பற்றிய எந்த தகவல் வேண்டுமானாலும், இனி எனது பிஆர்ஓ ஷங்கரைத் தொடர்பு கொண்டு சரியான தகவலை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

மீண்டும் மோகன் லாலுடன் இணைந்தார் அஜித் பட வில்லன்

மீண்டும் மோகன் லாலுடன் இணைந்தார் அஜித் பட வில்லன்

mohanlalமலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்திவிராஜ் மோகன்லாலை ஒரு படத்துக்காக இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ‘லூசிஃபர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதில் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், மம்தா மோகன் தாஸ், சான்யா, மற்றும் பிருத்திவிராஜின் சகோதரர் இந்திரஜித் ஆகியோர் நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

விவேக் ஓபராய் சமீபத்தில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே மோகன்லாலும், விவேக் ஓபராயும் ராம்கோபால் வர்மா ஹிந்தியில் இயக்கிய ‘கம்பெனி’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அந்த படம் 2002-ல் வெளியானது. இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘லூசிஃபர்’ மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

பொலிடிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் ‘லூசிஃபரி’ன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

ஆசிரியையாக நடிப்பது சவால்தான்; பயப்படாத *பைரவா* நாயகி அபர்ணா !

ஆசிரியையாக நடிப்பது சவால்தான்; பயப்படாத *பைரவா* நாயகி அபர்ணா !

aparna vinodஅபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின.

ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது பரத்தின் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

“நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது.

அது தான் ‘ஞான் நின்னோடு’, ‘கோஹினூர்’ போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜயின் பைரவாவில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த 22 வயதான அபர்ணா வினோத்.

பரத் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க எவ்வாறு தேர்வானார் என்று அவரே விவரிக்கும்போது,..

“இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர்.

இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான்
நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது.

இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

கடவுளுடைய சொந்த தேசத்தில் அவரது சக நடிகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதை அவரே விசேஷமாக விவரிக்கவும் தவறவில்லை. ”

அவரது ‘4 தி பீப்புள்’ வெற்றி பெற்றதிலிருந்தே, அவர் அங்கு மிகவும் பிரபலமான நடிகர்.

கண்டேன் காதலை படத்தில் அவரது நடிப்பை நான் பார்த்திருந்தேன், அவர் காட்சிகளுக்கு தேவையான மிகவும் யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார்.

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் பெயரிடப்படாத இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் நடிகர் ஷரண் (இனிது இனிது மற்றும் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க இருக்கிறது.

கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்

கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்

kanne kalaimaaneதிரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல்.

அத்தகைய படைப்புகள் ஒவ்வொரு சினிமா துறையிலும் இருக்கும், அவை அவர்களுக்கு பெருமையையும் மரியாதையையும் கொண்டுவரும். சந்தேகமே இல்லாமல், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எப்பொழுதும் அந்த தளத்திலேயே உயரிய திறமையோடு இருக்க முயற்சிப்பவர் என்று சொல்லலாம்.
மிகவும் குறிப்பாக, அத்தகைய படைப்புகள் இசை என்னும் மந்திரத்தால் மிகவும் அழகாக இருக்கின்றன.

தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை தன் முந்தைய படங்களில் நமக்கு பரிசாக அவர் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது.

குறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த தர்மதுரையை சொல்லலாம்.

அதே கூட்டணி ‘கண்ணே கலைமானே’ என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் வேளையில், தமிழ் சினிமாவில் இருந்து அந்த படம் ஒருபோதும் மங்காது, எதிர்பார்ப்புகள் மிகப்பெரியவை.

ஏன் என்றால், பாடல் வரிகளின் பேரரசர் கவிப்பேரரசு வைரமுத்துவாக இருந்தால். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த கூட்டணியின் காரணிகள், இயற்கையாகவே அனைவரின் எதிர்பார்ப்பையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளன. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

நல்ல குழுவுடன் இணைந்து மிகச்சிறந்த இசை ஆல்பங்களை வழங்குவதற்காக நன்கு அறியப்பட்ட இந்த நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.

தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என் குடும்பத்திலிருந்து வந்த டார்ச்சர் பிரேம்ஜிதான்… – வெங்கட் பிரபு

என் குடும்பத்திலிருந்து வந்த டார்ச்சர் பிரேம்ஜிதான்… – வெங்கட் பிரபு

venkat prabhuரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் “பேய் பசி” இதில் யுவனின் சகோதரர் ஹரிகிருஷ்ணா நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் கருணாகரன்,டேனியல் பாலாஜி, அம்ருதா, ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

“ஒரு ஷாப்பிங் மாலில்” நாயகன் மற்றும் நாயகி மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு இரவில் அவர்களுக்கு அங்கு நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களே படத்தின் திரைக்கதை.

இதில் பேய் இல்லை. ஆனால் திரில்லிங்கான சம்பவங்கள் இருக்கிறது. இது ரசிகர்களை ஈர்க்கும்.’ என்றார்.

இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன். ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர்கள் நலன் குமாரசுவாமி, வெங்கட்பிரபு, கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர் காரகட்ட பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்..

“ஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம்.

ஏற்கெனவே எங்கள் குடும்பத்தில் இருந்த டார்ச்சர் பிரேம்ஜி வந்துவிட்டார். அது போதும்.

அதன் பிறகு ஹரி தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்த பேய்பசி படம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி.

இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விஷுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.” என்று பாராட்டினார்.

More Articles
Follows