10 ஹீரோவை மறுத்த பிரியதர்ஷன் உதயநிதிக்கு ஓகே சொன்னார்..: சமுத்திரக்கனி

10 ஹீரோவை மறுத்த பிரியதர்ஷன் உதயநிதிக்கு ஓகே சொன்னார்..: சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi stalinமூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார் என்றார் நடிகர் ஜார்ஜ்.

பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள் என்றார் நாயகி பார்வதி.

தமிழில் நிமிர் எனது 3வது படம். இந்த படத்தில் எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் பிரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் என சொன்னதை யாரும் நம்பவில்லை என்றார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.

பிரியதர்ஷன் சாருடன் நான் வேலை செய்யும் 4வது படம். விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இருந்து நான் சினிமாவில் இருக்கிறேன்.

பிரியதர்ஷன் சாரின் ஒப்பம் படத்தை விட இன்னும் சிறப்பாக ஒளிப்பதிவு பண்ணனும்னு சார் சொன்னார்.

உதயநிதியின் தோற்றத்தை கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறோம். அனைவருக்கும் இந்த தோற்றம் பிடிக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.

பிரியதர்ஷன் என்னுடைய ஃபேவரைட் இயக்குனர். அவர் இயக்கும் படத்தை தயாரித்தது என்னுடைய அதிர்ஷ்டம். சமுத்திகனி, எம்எஸ் பாஸ்கர், மகேந்திரன் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மலையாளம் சினிமாவிலும் வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நாங்கள் மட்டும் தான் சென்னையில் ஆபீஸே இல்லாமல் ஒரு படத்தை முடித்திருக்கிறோம். அந்தளவுக்கு ரெட் ஜெயண்டும், ஃபோர் பிரேம்ஸும் எங்களுக்கு நிறைய உதவி செய்தனர். இனி சென்னையிலும் ஆபீஸ் போட்டு நிறைய படங்களை தயாரிப்போம் என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா.

படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், நிமிர் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை.

தெறி படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரகனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்த படத்தில் தான்.

கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரகனி.

அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன் என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.

சில சமயங்களில் படத்துக்கு பிறகு பிரியதர்ஷன் சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். மலையாளத்தில் ஒரிஜினல் படத்தை பார்த்திருந்தாலும், இந்த படத்தை பார்க்கும்போது புதுவிதமாக இருக்கும் என்றார் நடிகர் சண்முகராஜன்.

இந்த படத்துக்கு 10 நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார்.

அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார்.

பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார் என்றார் சமுத்திரகனி.

இது தமிழில் என்னுடைய 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் இயக்குனர் பிரியதர்ஷன்.

ரெட் ஜெயண்ட் அர்ஜூன் துரை, நடிகர்கள் கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், நாயகி நமீதா பிரமோத், சண்டைப்பயிற்சியாளர் ராஜசேகர், சோனி மியூசிக் அசோக் பர்வாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பரத் போடும் காக்கி சட்டைக்கு கைகொடுத்த தீரன் கார்த்தி

பரத் போடும் காக்கி சட்டைக்கு கைகொடுத்த தீரன் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath in Kalidasபரத் நடிக்கும் புதிய படம் காளிதாஸ்.

ஶ்ரீசெந்தில் இயக்கும் இப்படத்தில் பரத் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நடிகர் கார்த்தி மற்றும் பாண்டிராஜ் இருவரும் வெளியிட்டனர்.

இன்வெஸ்ட்கேசன் திரில்லராக உருவாகியுள்ள “காளிதாஸ்” படம் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்துள்ளது.

தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார்.

இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.

இசை விஷால் சந்திரசேகர், எடிட்டிங்- புவன் ஶ்ரீனிவாசன், ஒளிப்பதிவு- சுரேஷ் பாலா
பாடல்கள்- தாமரை
தயாரிப்பு- தினகரன்.M சிவனேசன்.M.S, LEAPING HORSE

தேவர் ஆட்டம் படத்தில் இணையும் முத்தையா-கௌதம் கார்த்திக்

தேவர் ஆட்டம் படத்தில் இணையும் முத்தையா-கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthikகொடிவீரன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு `தேவர் ஆட்டம்’ என தலைப்பிட்டுள்ளனர்.

இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`முத்துராமலிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஒரு ரியாக்சனும் கொடுக்கலையே… கீ பட விழாவில் விஷால் பேச்சு

சிம்பு ஒரு ரியாக்சனும் கொடுக்கலையே… கீ பட விழாவில் விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and silambarasanசிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடர்ந்து ஜீவா நடிக்கும் கீ படத்தை தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

இப்படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இப்பட இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி, சுஹாசினி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட கீ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது…

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார்.

அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே விஷாலின் ஆதரவாளர் இது பற்றி இங்கு பேசக்கூடாது” என்றார்.

இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால்.. “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் சிம்பு தரப்பில் இருந்து எந்த ஒரு ரியாக்சனும் இல்லை.

எனவே இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்பதே தெரியவில்லை. அதனால் தான் இந்த பிரச்சனையில் இன்னும் காலதாமதம் ஆகிறது” என்றார்.

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டவர் சூர்யா; சன் மியூசிக் தொகுப்பாளினிகள் கிண்டல்

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டவர் சூர்யா; சன் மியூசிக் தொகுப்பாளினிகள் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sun music anchorsசெல்வராகவன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்ற செய்திகள் வந்துள்ளன.

இதில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிப்பார் எனவும் வந்த செய்திகள் பார்த்தோம்.

இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் Franka peseta என்ற நிகழ்ச்சியை நிவேதிதா, சங்கீதா என்ற பெண்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அவர்கள் இது குறித்து பேசும்போது…

சிங்கம் படத்துல அனுஷ்காவுடன் நடிக்கும்போதே சூர்யா ஹீல்ஸ் போட்டு நடித்தார். அமிதாப்புடன் எப்படி நடிப்பார். ஸ்டூல் போட்டுப்பாரா?

உட்கார்ந்துக்கிட்டே நடிக்க வேண்டியதுதான் என சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியுள்ளனர்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் முதல் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் விஷால், இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்களை என்ன சொல்ல…? எவ்வளவு உயரம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு உயருகிறோம் என்பதுதான் முக்கியம் என்ற சூர்யா சொன்ன டயலாக்குதான் தற்போது நினைவுக்கு வருகிறது…

ஆண்டாள்-வைரமுத்து சர்ச்சை வழக்கு; கோர்ட் இடைக்காலத் தடை!

ஆண்டாள்-வைரமுத்து சர்ச்சை வழக்கு; கோர்ட் இடைக்காலத் தடை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthuராஜபாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு, ஆண்டாள் குறித்து பேசினார்.

அப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், ஆண்டளை தேவதாசி என்று குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசினார்.

இதனை அடுத்து இந்து அமைப்புகள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகி, எச்.ராஜா, வைரமுத்துவை அசிங்கமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், வைர முத்துவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூற வில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக் கையை குறிப்பிட்டும், மேற்கோள் காட்டியும் தானே பேசினார்? அப்புறம் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த மனுவுக்கு பிற்பகலில் பதிலளிப்பதாக அரசு வக்கீல் கூறியதால், மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதியாக இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More Articles
Follows