‘லால் சிங் சத்தா’ அப்டேட் : அமீர்கான் கேட்ட உடனே ஓகே சொன்ன உதயநிதி

‘லால் சிங் சத்தா’ அப்டேட் : அமீர்கான் கேட்ட உடனே ஓகே சொன்ன உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

”நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’.

அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நாக சைதன்யா, மோனாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். பாரஸ்ட் கெம்ப் எனும் ஆங்கில படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான அமீர்கான், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன், நடிகை மோனாசிங், படத்தினை தயாரித்திருக்கும் வயாகாம் 18 எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்…

” நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’டடித்துவிட்டு அமீர் கானின் ‘ரங்கீலா’ படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன்.

மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் லால் சிங் சத்தா படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள்.

நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘லால் சிங் சத்தா’ படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம்.

முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.

பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்.” என்றார்.

வயாகாம் 18 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே பேசுகையில்…

,’ அமீர்கான் மற்றும் லால் சிங் சத்தா உடனான எங்களது பதினான்கு ஆண்டுகால பயணம், ஒரு நல்ல இடத்தை தொட்டிருக்கிறது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இப்படம் வெளியாவது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

இந்தப் படைப்பு இந்திய அளவில் உருவானது. இதனை சாத்தியப்படுத்தியது எளிதானதல்ல. அமீர்கான் என்ற ஒரு கலைஞரால் மட்டுமே… அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் மட்டுமே இது சத்தியமாகியிருக்கிறது.

இயக்குநர் அத்வைத் சந்தன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர், பல்வேறு தடைகளை கடந்து லால் சிங் சத்தாவை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பை ரசிகர்கள் அங்கீகரிப்பார்கள்.”
என்றார்.

நடிகை மோனா சிங் பேசுகையில்…

” லால் சிங் சத்தா படத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். சென்னையில் இப்படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தை உங்களுடன் கண்டுகளித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அமீர்கான், அத்வைத் சந்தன் மற்றும் லால் சிங் சத்தா உடனான பயணம் இனிமையானது. மறக்க இயலாது. இந்தத் திரைப்படம் ஒவ்வொரு இந்தியனையும் உணர்வு பூர்வமாக அவர்களது மனதை தொடும். படத்திற்கும் பேராதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் அத்வைத் சந்தன் பேசுகையில்…

”பாரஸ்ட் கெம்ப் எனும் படைப்பு, லால் சிங் சத்தா என்ற பெயரில் உருமாற்றம் பெற்றிருப்பதும், அதனை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதும் அமீர்கான் எனக்கு அளித்த ஆசி. திரைக்கதை ஆசிரியர் அதுல் குல்கர்னியின் உழைப்பு எளிதானதல்ல. அமீர்கான், அஜித் ஆந்த்ரே, மோனோசிங், நாக சைதன்யா போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த படைப்பு நிறைவு பெற்றிருக்காது. சென்னைக்கு வருகை தந்து இந்தப் படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தை பார்வையிடும் போது புதிய படம் போல், புது அனுபவத்தை அளித்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் படைப்பு என்பதால் இதற்கு ரசிகர்களிடத்தில் பெரும் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன்.” என்றார்.

நடிகர் நாக சைதன்யா பேசுகையில்…

” நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். சென்னைக்கு வருகை தருவது நீண்ட நாட்களாகி விட்டது. லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்காகவும், அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னைக்கு வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என நினைக்கிறேன்.

இந்தத் திரைப்படம் என்னுடைய கலை உலக பயணத்தில் முக்கியமான திரைப்படம். ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் அத்வைத் சந்தன், தயாரிப்பாளரும், நாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை, உங்களுக்காக ஆகஸ்ட் 11ம் தேதி அன்று வழங்குகிறோம். திரையரங்கத்திற்கு சென்று கண்டு களித்து ஆதரவு தர வேண்டுகிறேன். ” என்றார்.

நாயகன் அமீர்கான் பேசுகையில்…

” லால் சிங் சத்தா படத்தை தமிழகம் முழுவதும் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் மறுப்பு தெரிவிக்காமல் வெளியிடவிருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதனை பின்பற்ற வேண்டும் என்பதனை இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் நேர்மறையாக உணர்த்திருக்கிறார்கள். இந்தப் படைப்பினை உருவாக்கிய அனைவருக்கும், பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு இந்த படைப்பு கவரும் என நினைக்கிறேன்.” என்றார்.

லால் சிங் சத்தா

Udayanidhi accepted immediately after Aamir Khan asked

ஆகஸ்ட் 18ல் தனுஷ் வருகிறார்.; ஆகஸ்ட் 19ல் மேதகு பிரபாகரன் வருகிறார்.!

ஆகஸ்ட் 18ல் தனுஷ் வருகிறார்.; ஆகஸ்ட் 19ல் மேதகு பிரபாகரன் வருகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான படம் ‘திருச்சிற்றம்பலம்’. இதில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

திருச்சிற்றம்பலம்

இதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 19ல்..

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாக பணிபுரிந்துள்ளார்கள்.

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது.

இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலை மறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

1983- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

அதே போன்று 1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் பிரபாகரன்
கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம், பாடகர்கள் சைந்தவி, புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.

ஏற்கனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அனைத்து மக்களுக்கும் இந்த படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் துவங்கியுள்ளனர்.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.

இதற்கு முன்னதாக பழ. நெடுமாறன், பெ. மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு, நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேதகு -2

Methagu 2 release date announcement is here

JUST IN பால் தயிர் ஜிஎஸ்டி.. ஜெயிலர் சூட்டிங்.; ஆளுநரை சந்தித்த பின் ரஜினி பேட்டி

JUST IN பால் தயிர் ஜிஎஸ்டி.. ஜெயிலர் சூட்டிங்.; ஆளுநரை சந்தித்த பின் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். அங்கு தெலுங்கு அரசியல் பிரமுகரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.

தற்போது சென்னை திரும்பி உள்ள கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

ரஜினிகாந்த்

ராஜ் பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

இதை தொடந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆளுநருடன் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை ஆளுநரை மிகவும் கவர்ந்துள்ளது என்றார்.

பால், தயிர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதே என்பது குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்கவில்லை.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 25ம் தேதி தொடங்கும் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Rajinikanth meets governor R.N.Ravi

‘கட்டம் சொல்லுது’.. என்ன சொல்லுது.? கார்த்தி அமீர்கான் சூர்யாவுடன் சேர்ந்து வர்றாங்களாம்.

‘கட்டம் சொல்லுது’.. என்ன சொல்லுது.? கார்த்தி அமீர்கான் சூர்யாவுடன் சேர்ந்து வர்றாங்களாம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் ஆகஸ்ட் 11 & 12 தேதிகளில் ரிலீசாகவுள்ள படங்களை பற்றி பார்ப்போம்.

ஹிந்தியில், ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான்.

அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதியில்…

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘கடமையை செய்’.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் யாசிகா ஆனந்த் நடித்துள்ளார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்செட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

——-

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 12ல் இப்படம் ரிலீசாகிறது.

இத்துடன் ‘கட்டம் சொல்லுது’ படமும் ஆகஸ்ட் 12ல் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

——–

அறிமுக இயக்குனர் எஸ் ஜி எழிலன் இயக்கத்தில் தீபா சங்கர், எழிலன், திடியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ‘கட்டம் சொல்லுது’.

ஒளிப்பதிவாளர் சபரீஸ். இசையமைப்பாளர் தமீம் அன்சாரி. எடிட்டிங் – விஜய் வேலுக்குட்டி.

Kattam Solluthu movie to clash with Karthi and Ameer Khan films

ஹிந்தி தெரியாது போடா சொல்லிட்டு ஹிந்தி படத்தை ரிலீஸ் பண்றிங்களே.? அமீர்கான் முன்னிலையில் உதயநிதி விளக்கம்

ஹிந்தி தெரியாது போடா சொல்லிட்டு ஹிந்தி படத்தை ரிலீஸ் பண்றிங்களே.? அமீர்கான் முன்னிலையில் உதயநிதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில், ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான்.

ஹாலிவுட்டில் உருவான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் தழுவல் இப்படமாகும்.

அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

இந்த வேடத்தில் தான் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பாக உதயநிதி பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை அமீர்கான் உள்ளிட்ட பட குழுவினர் சந்தித்தனர்.

இந்த விழாவில் உதயநிதியும் கலந்து கொண்டார்.

அப்போது.. “ஹிந்தி தெரியாது போடா என்று எதிர்க்கும் நீங்கள் ஹிந்தி படத்தை வெளியிடுவது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு உதயநிதி பதிலளிக்கையில்…

“எந்த மொழியும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்க கூடாது என்பதைதான் கூறி வருகிறோம்.

இது நாங்கள் வெளியிடும் முதல் ஹிந்தி படம் ஆகும். இதற்கு முன்பு சில தெலுங்கு படங்களை வெளியிட்டு இருக்கிறோம்” என்று உதயநிதி பதிலளித்தார்

Explanation of Udayanidhi in the presence of Ameer Khan

இவர்தான் என் புது கணவர்.; நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி சொன்னதை கேளுங்க..

இவர்தான் என் புது கணவர்.; நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி சொன்னதை கேளுங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பு, காதல் கிசுகிசு, புலி முருகன், வீரம் & அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.

இவர் இயக்குநர் சிவாவின் தம்பி ஆவார்.

இவரின் முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ். (தற்போது மறுமணம் செய்துவிட்டார் பாலா)

பின்னணி பாடகியான அம்ருதா மலையாள படங்களில் நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை அம்ருதா காதலித்து வருவதாக தகவல்கள் வந்தன.

இவர்களும் தங்களது நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

தற்போது அம்ரிதா தனது பிறந்த நாள் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ”உனக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை. எனக்கு இது மிகவும் சிறப்பான பிறந்த நாள். என் கணவரே, நீ சிறப்பானவர்’ என பதிவிட்டுள்ளார்.

கூடுதல் தகவல்..

தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

bala amrutha

Amrutha Suresh opens up about her relation ship with Gopi Sundar

More Articles
Follows