குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க த்ரிஷா விழிப்புணர்வு பேரணி

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க த்ரிஷா விழிப்புணர்வு பேரணி

Trisha lends her support to end all forms of child labourஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி, சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார்.

அங்குள்ள பூங்காவில் துவங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, தங்களது கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய நடிகை திரிஷா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, கொத்தடிமை முறையை தடுத்து நிறுத்தி, குழந்தைகளுக்கான கல்வி தரும் இயக்கமாக யுனிசெப் (UNICEF) விளங்கி வருவதாகவும், தெரிவித்தார்.

Trisha lends her support to end all forms of child labour

Trisha lends her support to end all forms of child labour

பிரேம்ஜிக்கு *இசை சுனாமி* பட்டம் கொடுத்த யுவன் சங்கர் ராஜா

பிரேம்ஜிக்கு *இசை சுனாமி* பட்டம் கொடுத்த யுவன் சங்கர் ராஜா

Yuvan Sankar Raja gave Isai Tsunami title to Actor Premjiபிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரேம்ஜி, தனக்கு எப்படி இசை சுனாமி பட்டம் வந்தது என்பது குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

” பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், தேனிசை தென்றல் தேவா என காலநிலையை தொடர்புப்படுத்தியே பட்டம் வைப்பார்கள்.

அதுபோல் எனக்கு இசை சுனாமி, அதாவது இசைக்கு வந்த பேரழிவு போல இருக்கட்டுமே என அச்சமின்றி பட தலைப்பில் போடுமாறு இயக்குனர் ராஜபாண்டி சாரிடம் கேட்டேன்.

ஆனால் அவர், நீங்கள் நன்றாக தானே இசையமைக்கிறீர்கள் எனக் கூறி, இசை இளவல் என பட்டம் கொடுத்தார்.

அதன் பின்னர் எனது அண்ணன் யுவன், இசை சுனாமி என என்னை அழைத்தார். சரி அதுவே இருந்துவிட்டு போகட்டுமே என ஆர்.கே.நகர் டைட்டிலிலும் இசை சுனாமி என போட சொல்லிவிட்டேன். மற்றதை எல்லாம் நைட் கட்டிங் போட்டுட்டு பேசலாம்.” என்றார்.

Yuvan Sankar Raja gave Isai Tsunami title to Actor Premji

rk nagar audio launch event

அதர்வாவின் பூமராங் படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டம்

அதர்வாவின் பூமராங் படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டம்

Director Kannan and Atharvaa plans to release Boomerang on August 2018ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன?

இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை.

இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது.

இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அத்தகைய பண்புகள் தான் அவருக்கு, அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, அவரின் தயாரிப்பில் உருவாகும் பூமராங் படத்திலும் கைகொடுத்திருக்கிறது.

பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம்.

4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.

அதர்வாவை பாராட்டி பேசும் இயக்குனர் கூறும்போது, “முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.

மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்.

ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இயக்குனர் கண்ணன் தன் வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ் தலைப்பை வைக்க தான் திட்டமிட்டிருந்தார். பின் பூமராங் என்ற தலைப்பு படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்த தலைப்பை வைத்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆர் ஜே பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதோடு படத்தை இயக்கி வருகிறார் கண்ணன்.

Director Kannan and Atharvaa plans to release Boomerang on August 2018

நடிகர் விஜய்யை விக்னேஷ் சிவன் சந்தித்தது ஏன்..?

நடிகர் விஜய்யை விக்னேஷ் சிவன் சந்தித்தது ஏன்..?

Director Vignesh Shivan met Actor Vijayசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 62வது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய், முருகதாஸ் இணையும் 3வது படம் இது.
இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்ல்லை.

இயக்குனர் பட்டியில் மோகன் ராஜா, வெற்றிமாறன், சதுரங்கவேட்டை வினோத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் வருங்கால கணவரான விக்னேஷ் சிவன், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று விஜய்யை விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் தனது கதையை பற்றி சொல்லியிருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் விஜய்யோடு எடுத்த போட்டோவை விக்னேஷ் சிவன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Director Vignesh Shivan met Actor Vijay

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்னை வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் – கமல்

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்னை வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் – கமல்

kamal haasan newsகமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2′ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ் பதிப்பின் டிரெயிலரை நடிகை ஸ்ருதிஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் அமீர்கானும் வெளியிட்டனர்.

ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு படம் குறித்து பேசுவதற்காக தனது எல்டாம்ஸ் சாலை அலுவலகத்தில் செய்தியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த ‘விஸ்வரூபம்-2’ திரைப்படம் தாமதமானதற்கு ராஜ்கமல் நிறுவனம் காரணமல்ல.

முதல் பாகத்தை உருவாக்கியபோது எந்த மாதிரியெல்லாம் பிரச்னைகள் இருந்தனவோ அதேபோல சில பிரச்னைகள் இந்த முறையும் இருந்தன.

அதேபோன்று முதல் பாகத்தை படத்தை வெளியிடுவதற்கு முன்னரே திரையிட்டுக் காட்ட வேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளானேன்.

இப்போது அந்த மாதிரியான வற்புறுத்தல்கள் எதுவும் இருக்காது என்றே நம்புகிறேன். ஒருவேளை பட வெளியீட்டில் ஏதாவது பிரச்னை என்றாலும் அதை நிச்சயம் தைரியமாக
அரசியல்வாதியாக எதிர்கொள்வேன்.”

இவ்வாறு கமல் பேசினார்

ரஞ்சித்தை போன்று ரஜினிக்கு வயதான வேடம் கொடுக்க நினைத்த ஷங்கர்

ரஞ்சித்தை போன்று ரஜினிக்கு வயதான வேடம் கொடுக்க நினைத்த ஷங்கர்

director shankarடைரக்டர் ஷங்கர் என்றாலே அவரது படங்களில் மிகப்பிரம்மாண்டம் இருக்கும்.

படத்தில் நடிக்கும் கலைஞர்கள் முதல் ஒவ்வொரு காட்சியிலும் அந்த பிரம்மாண்டத்தை நாம் பார்க்கலாம்.

இவர் ரஜினியை வைத்து இதுவரை சிவாஜி, எந்திரன் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

3வது படமாக லைகா தயாரிப்பில் 2.0 படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

தொழில்நுட்ப பணிகள் தொடர்ந்து 1 வருடமாக நடந்து வருவதால் அடுத்த ஆண்டு 2019ல் தான் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவரது படங்களில் ரஜினிகாந்த் மிகவும் இளமையாக இருப்பார். ஆனால் இவர் ரஜினியை வயதானவராக ஒரு படத்தில் காட்ட நினைத்திருந்தாராம்.

அதை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

வாழ்ந்துக் கொண்டிருக்கும் 85வயது இளைஞர் சமூக போராளியான டிராபிக் ராமசாமி கேரக்டரில்தான் ரஜினியை அப்படி வயதான வேடத்தில் காட்ட நினைத்திருந்தாராம்.

ஆனால் அதற்குள் எஸ்ஏசி. சார் டிராஃபிக் ராமசாமி கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.

பொதுவாக ரஜினியை எல்லா இயக்குனர்களும் இளமையாக காட்டிதான் நடிக்க வைத்தார்கள்.

ஆனால் ரஞ்சித் மட்டுமே ரஜினியின் நிஜ வயது கேரக்டரில் நடிக்க வைத்தார். அதுபோல் நடிக்க வைத்த நினைத்த ஷங்கரின் கனவும் தற்போது தவிடு பொடியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows