தர்பாருக்கு 4 நாட்கள்.. பிகிலுக்கு மட்டும் 1 நாள் ஏன்?; அமைச்சர் பதில்

தர்பாருக்கு 4 நாட்கள்.. பிகிலுக்கு மட்டும் 1 நாள் ஏன்?; அமைச்சர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister clarify Darbar and Bigil special shows issueசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.

இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அதாவது அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இத்துடன் இன்று வியாழன் ஜனவரி 9ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியுள்ளது தமிழக அரசு.

ஆனால் கடந்த வருடம் 2019 சமயத்தில் விஜய் நடித்த பிகில் படம் வெளியானது. இந்த படத்திற்கு ஒரு நாளைக்கு மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

அதுவும் பல கட்ட பிரச்சினைக்களுக்கு பிறகு முதல் நாள் இரவு இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இன்று தர்பார் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

“எங்களைப் பொருத்தவரை தர்பாரும் ஒன்றுதான் பிகிலும் ஒன்றுதான். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.” என்று கூறினார்.

TN Minister clarify Darbar and Bigil special shows issue

இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babu in Takkarதற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், யோகிபாபு, முனீஷ்காந்த், RJ விக்னேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் G A படத்தொகுப்பு செய்கிறார்.

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mohan1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.

வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் அவரை சந்திப்பதற்கு முன்பதிவு செய்து, மிகுந்த ஆவலுடன் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், சுமார் 200 பேருக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் ரமேஷ், குமாரசாமி, ஜெரால்டு, அம்மாப்பேட்டை கருணாகரன், கிருபானந்தம் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்து, தங்களது வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்காக நன்றியும் தெரிவித்தனர்.

‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்!

‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aghoriசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும்
படமாக்கப்பட்டது.

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.இவர் 144 பட நாயகியும் கூட.

இவர்களுடன் மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,
கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அகோரி படத்துக்கு ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் CG டீம் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார்
இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன்.

‘அகோரி’ படத்தின் ட்ரெய்லர் ‘தர்பார்’ படம் வெளியாகும் அனைத்து திரைகளிலும் வெளியாகிறது.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

‘ அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.
குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்

தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth in darbarபண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது புத்தாடை பலகாரங்கள் இவற்றுடன் முக்கிய பங்கு வகிப்பது பண்டிகை அன்று வெளியாகும் தங்களுடைய அபிமான நட்சத்திரங்கள் நடித்த படத்தைப் பார்ப்பது தான். இந்த ஆர்வம் கூலி தொழிலாளிகள் முதல் பெரும் வணிகர்கள் வரை அனைவருக்கும் இருக்கும். தங்களின் நட்சத்திரங்களுக்காக உயரமான கட்-அவுட் வைத்து பாலபிஷேகம் செய்வது, இனிப்புகள் வழங்குவது, முதல் நாள் முதல் கட்சிகளைப் பார்த்து விடுவது, அதிலும் சிலர் தங்களது சொந்த செலவில் தங்களது குடும்பம் தவிர்த்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு டிக்கெட் எடுத்து அவர்களைகளையும் அழைத்துச் செல்வார்கள். இப்படி திரைப்பட வெளியீட்டை அவரவர் வசதிகளுக்கேற்பத் திருவிழாவாகக் கொண்டாடுவர்வர்கள்.

அதன்படி தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை ’18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி தனது நிறுவனத்திலுள்ள அனைவருடனும் காணவுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ஒவ்வொரு முறை தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் எனக்கு திருவிழா போல தான் இருக்கும். ஆனால், இந்த முறை வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை வித்தியாசனமான முறையில் கொண்டாட விரும்பினேன். அதற்காக எனது நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அழைத்துச் செல்ல விருக்கிறேன். ஆகையால், நாளை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

இவ்வாறு 18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி கூறினார். மற்றும் இவர் தயாரிப்பில், சந்தானம் மற்றும் யோகிபாபு காமெடி சரவெடியில் கலக்க உள்ள டகால்டி திரைப்படம், இம்மாதம் திரைக்கு வர உள்ளது.

VELAMMAL WINS GOLD IN BHARATHIYAR DAY GAMES

VELAMMAL WINS GOLD IN BHARATHIYAR DAY GAMES

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VELAMMAL WINS GOLD IN BHARATHIYAR DAY GAMES

The U-19- Basketball boys team of Velammal Main School, Mogappair campus won the trophy and gold medals as they emerged victorious in the finals by defeating SDAT Thanjavur team with a score of 53-29 in the 37th Bharathiyar Day Games 2019-20 at PeriyUniversity, Salem Organised by the Government of School Education, Tamil Nadu held between 5th January and 7th January 2020. The team has emerged victorious among 35 teams and has bagged gold medal for the 4th year.

More Articles
Follows