ஏன் இப்படி படம் எடுத்தீங்க என கேள்வி கேட்கும் அருகதை இல்லை.. இனிமே அப்படி நடிக்கல.. – சாம்ஸ்

ஏன் இப்படி படம் எடுத்தீங்க என கேள்வி கேட்கும் அருகதை இல்லை.. இனிமே அப்படி நடிக்கல.. – சாம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் வெளியாகவுள்ள “இரண்டாம் குத்து” என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சாம்ஸ். அவரின் பதிவு இதோ…

இந்த படம் சம்பந்தமாக என்னை தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள் குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன்… (இந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம். பார்த்தீர்களா..?)

அந்தப் பதிவிற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் இருந்தது. பலரும் சொன்ன கருத்துக்கள் என் நல விரும்பிகள் சொன்ன அட்வைஸ்களை வைத்து தற்போது என் கருத்தை என் முடிவை சொல்லவே இந்த பதிவு.

என் கருத்து

———————–

இதுபோன்ற அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் பாலிவுட் படங்களில் ஹாலிவுட் படங்களில் டிவிகளில் செல்களில் கம்ப்யூட்டர்களில் OTT தளங்களில் என தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதே போன்று ஒரு விஷயத்தை படமெடுத்து சென்சாரின் அனுமதியோடு வெளியிடுகிறேன். மற்றதையெல்லாம் பார்த்து அனுமதித்த, சிலநேரம் கண்டும் காணாமல் போகிற நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இந்த படத்தை இயக்கி இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்டிருந்தார்.

அவன் செஞ்சா நீ செய்வீயா ? என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை… அவர் கைகாட்டும் காரணங்களும் திருந்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுத்ததில்லை. குரலும் கொடுத்ததில்லை. குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பு பதிவு கூட நான் போட்டதில்லை. மற்றவர்கள் செய்த தவறை இயக்குனர் சொல்வது போல் கண்டும் காணாமல் தான் போயிருக்கிறேன். அதை தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் ? என்று கேள்வி கேட்கும் தகுதி அருகதை நேர்மை எனக்கில்லை என்றே நினைக்கிறேன்.

என் முடிவு

——————–

இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன் . அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன்.

இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாக தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்..

‘A’ படம் என்று சென்சார் சர்டிபிகேட்டோடு வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன ? என்று தான் இந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தை காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி “இரண்டாம் குத்து” போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன்…

தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து .

அன்புடன்

சாம்ஸ்

I wont act in adult only films says comedy actor chaams

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வி..; தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்..; திருந்தவே மாட்டீங்களா?

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வி..; தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்..; திருந்தவே மாட்டீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ziva Dhoniஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடவில்லை.

அதாவது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

நடைபெற்ற பல ஆட்டங்களில் மோசமான தோல்விகளை பெற்றது.

கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது.

தோனியும் இப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர், தோனி சரியாக விளையாடவில்லை என்றால் அவரின் சிறு வயது மகள் ஷிவா தோனியை பாலியல் கொடுமை செய்துவோம் என அசிங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

டேய் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?

Sexual harassment threat for MS Dhoni’s daughter

‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..; என்ன பிரச்சனையாம்.?

‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..; என்ன பிரச்சனையாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GP Muthuடிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் பல பிரபலங்கள் உருவாகினர். அவர்களில் ஒருவர்தான் ஜி.பி முத்து.

டிக்டாக்க்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட போது மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

தற்போது டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீடியோக்களை பதிவிட முடியவில்லை என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டார் ஜி.பி முத்து.

இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் படத்தையும், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிபி. முத்து.

Tik Tok fame GP Muthu shocks by suicide attempt

மத்திய அரசு கட்டாயமாக தியேட்டர்களை திறக்க சொல்லவில்லை..; அமைச்சர் தந்த அதிர்ச்சி

மத்திய அரசு கட்டாயமாக தியேட்டர்களை திறக்க சொல்லவில்லை..; அமைச்சர் தந்த அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuதூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பயணியர் விடுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

வருகிற அக்டோபர் 13ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வருகிறார்.

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்.செ.ராஜூ ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர். அப்போது…

கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துரையினருக்கு அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது.

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டுள்ளது. ஆனால் கட்டாயமாக திரையரங்குகளை திறக்க சொல்லவில்லை.

திரையரங்குகள் திறப்பது பற்றிய மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

மேலும் திரைத்துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை, தொழிலாளர்களின் நலன் கருதி ஆலோசனை செய்து விரைவில் திரையரங்கு திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

TN Minister talks about theatre re opening in Tamil Nadu

பாரதிராஜா சாதனையாளர்.; நான் அப்படி பேசியிருக்க கூடாது..; ‘இரண்டாம் குத்து’ இயக்குனரின் செம பல்டி

பாரதிராஜா சாதனையாளர்.; நான் அப்படி பேசியிருக்க கூடாது..; ‘இரண்டாம் குத்து’ இயக்குனரின் செம பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi raja santhosh p jeyakumarகடந்த வாரம் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இரண்டாம் குத்து’ பட டீசர் வெளியானது.

இது ஆபாச படங்களை மிஞ்சும் வகையில் இருந்தது.

இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்பட டீசருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

அதில்….

“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?

கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?.. என தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

இந்த செய்தியை காலையில் பார்த்தோம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

1981 ல் கமல், மாதவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தை எடுத்தீர்கள். அதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..? என கேள்வி கேட்டு டீ பீஸ் உடையில் மாதவி & கமல் இருக்கும் படங்களை தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்த நிலையில் இப்போ என்ன ஞானதோயம் வந்து விட்டதோ தெரியவில்லை.

திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. பாரதிராஜா ஒரு சாதனையாளர். என் ட்வீட்டுக்கு (பேச்சுக்கு) வருத்தம் தெரிவித்துள்ளார்.

Irandam Kuthu director apologized for his comment to Bharathi raja

Irandam Kuthu director apologized for his comment to Bharathi raja

‘எனக்கு இந்தி தெலுங்கு தமிழ் எதுவுமே தெரியாது போடா’.; ‘பேய் மாமா’ வடிவேலு இடத்தில் யோகி பாபு

‘எனக்கு இந்தி தெலுங்கு தமிழ் எதுவுமே தெரியாது போடா’.; ‘பேய் மாமா’ வடிவேலு இடத்தில் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’.

இப்படத்தில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்தது.

பின்னர் பல்வேறு காரணங்களால் வடிவேலு நடிக்காமல் போகவே யோகிபாபு நாயகனாக நடிப்பது உறுதியானது.

இவருடன் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘பேய் மாமா’ பட முழு சூட்டிங்கும் முடிவடைந்துவிட்ட சூழலில் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் திரை பிரபலங்கள் ‘இந்தி தெரியாது போடா’என்ற டி சர்ட்களை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

அதனை கலாய்க்கும் விதமாக ‘பேய்மாமா’ பட போஸ்டர் ‘எனக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் எதுவுமே தெரியாது போடா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

pei mama first look

Pei Mama first look creates controversy

More Articles
Follows