தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
மேலும் நேற்று வெளியான நாள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.
நெல்சா நீ ஜெயிச்சிட்ட.. தலைவர் நிரந்தரம்.. என்ற கோஷங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘ஜெயிலர்’ படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திரையரங்கில் பார்த்துள்ளார்.
படத்தை பார்த்தபின் இந்த படத்தின் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
முதல்வர் தன்னை நேரில் பாராட்டியதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார் நெல்சன்.
மேலும் :ஜெயிலர்’ படத்தின் மெகா வெற்றிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் முதல்வரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு ரஜினி நன்றி தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
TN CM Stalin appreciated Jailer Rajini and Team