அமிதாப்-அமீர்கான் இணைந்துள்ள *தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்* தமிழிலும் வெளியாகிறது

அமிதாப்-அமீர்கான் இணைந்துள்ள *தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்* தமிழிலும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thugs of hindustanவிஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’.

இந்த படத்தில் அமீர்கான் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார்.

இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறையாகும்.

இதில் அமிதாப் பச்சன் ராஜா வேடத்தில் வருகிறார். அவரது லுக் வெளியாகி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர்களுடன் கத்ரினா கைப், பாத்திமா சனா சேக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரூ.210 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி இப்படம் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதனை தமிழ் மற்றும் தெலுங்கிலம் டப் செய்து ரிலீஸ் செய்கின்றனர்.

அதற்கான புரமோஷன் வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கில் பேசியுள்ளனர்.

இமயமலை பயணம்; அரசியல் ஆசை; மறுமணம் பற்றி அமலாபால்

இமயமலை பயணம்; அரசியல் ஆசை; மறுமணம் பற்றி அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress amala paulராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராட்சசன்’.

இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் அமலா பால் பேட்டி கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது…

இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்கு சென்றாலே ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. கடவுளிடம் சென்ற உணர்வை அது தருகிறது.

அந்த இயற்கையான சூழலில் மனம் லேசாகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலை.

மறுமணம் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. முடிவு செய்யும்போது தெரிவிக்கிறேன்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட ஆசைவுள்ளது.’’ என்றார்.

10 ஆண்டுகளுக்கு பின் நகுல்-சுனைனா ஜோடியை இணைக்கும் சச்சின் தேவ்

10 ஆண்டுகளுக்கு பின் நகுல்-சுனைனா ஜோடியை இணைக்கும் சச்சின் தேவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nakhul and sunainaகாதலில் விழுந்தேன் படத்தில் இணைந்த நகுல் மற்றும் சுனைனா ஜோடியை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

அவர்களுக்குள் அப்படியொரு கெமிஸ்ட்ரி அந்த படத்தில் இருந்தது.

தற்போது பத்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது.

சச்சின் தேவ் என்பவர் இயக்க எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுரேஷ் மேனன் , அபர்ணா கோபிநாத்,ரேவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செக்கச் சிவந்த வானம் ரிலீஸானாலும் பரியேறும் பெருமாள் மீது நம்பிக்கை இருக்கு… : கதிர்

செக்கச் சிவந்த வானம் ரிலீஸானாலும் பரியேறும் பெருமாள் மீது நம்பிக்கை இருக்கு… : கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pariyerum perumalமதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர்.

படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

“பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்..

அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது.. அது பிரெஷ்ஷாக இருக்கிறது.. அதனாலேயே இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.

திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்..

மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. இதுவாவது பரவாயில்லை..

மொட்டை வெயிலில் பொட்டல்வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என உட்கார்ந்து விடுவேன்..

என்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது.

அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால் தான், நடக்கவே முடிந்தது.

கதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டுபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை.

ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.

என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.. ஆனால் கதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது

வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.

பத்துப்படம் தான் பண்றோம்.. ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும்.. ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும்..

அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல், ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும்.. அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்..

அடுத்து வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும்.. அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும்.

தற்போது குமரன் என்பவர் டைரக்சனில் ஒரு படம் நடித்து வருகிறேன். விக்ரம் வேதாவுல கிடைச்ச மாதிரி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன் குணசித்திர வேடத்திலும் நடிக்கவும் கூட தயங்கமாட்டேன்..

இயக்குனர் ராம் படம் பார்த்துவிட்டு, படம் ரிலீசானதும் கமர்ஷியல் வேல்யூ உள்ள நடிகரா மாறுவீங்க என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு என்ன வேண்டும்..?

மணிரத்னம் சார் டைரக்சனில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகி இருந்தாலும் கூட, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மீதும் ரசிகர்கள் மீதும் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையில் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறோம்” என்கிறார் கதிர்.

திமிரு புடிச்சவனின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன்டிவி

திமிரு புடிச்சவனின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thimiru pidichavanபாகுபலி டைரக்டர் ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா.

இவர் ஸ்ரீகாந்த், சந்தானம் ‘நம்பியார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது விஜய் ஆண்டனி, நிவேதா பெத்து ராஜ் நடித்து வரும் ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நாயகன் நாயகி இருவரும் போலீஸாக நடித்து வருகின்றனர்.

பாத்திமா விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக, சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இருப்பதால், நிவேதா பெத்துராஜுக்கும் பயிற்சி கொடுத்த பின் படமாக்கியுள்ளனர்.

மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

1 டிக்கெட்டில் 1 ரூ எடுத்து 30 விவசாயிகளுக்கு 10 லட்சம் வழங்கிய விஷால்

1 டிக்கெட்டில் 1 ரூ எடுத்து 30 விவசாயிகளுக்கு 10 லட்சம் வழங்கிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal dontated Rs 10 lakhs to farmers from the Cinema ticket priceவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2 “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மோகன்லால், இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி தற்போது விஷால் “ விஷால் 25 “நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார்.

துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் பேசிய விஷால் இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம்.

நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.

அப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ் , விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை.

ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. நான் வேகமாக படமெடுப்பவன். விஷால் எனக்கு கதகளி திரைப்படத்தை வேகமாக முடித்து தந்து சொன்ன தேதியில் வெளியிட்டார் என்றார் பாண்டிராஜ்.

விவசாயிகளுக்கு விஷால் பத்து லட்சம் ருபாய் நிதி உதவியை சண்டை கோழி2 பட இசை வெளியீட்டு விழாவில் நேற்று 24/9/18 ல் வழங்கினார்.

விஷால் தொடர்ந்து விவசாயிகளை பாதுகாக்க உதவிகள் செய்து வருகின்றார். அவருக்கு நன்றிகள். அவர் படம் சண்டை கோழி 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் திரு. தெய்வசீகாமணி

Vishal dontated Rs 10 lakhs to farmers from the Cinema ticket price

Vishal dontated Rs 10 lakhs to farmers from the Cinema ticket price

More Articles
Follows